Advertisement

நச்சு தன்மையை சுமந்துள்ள மின்னணு சாதனங்கள்!

'இ - வேஸ்ட்' எனப் படும் மின்னணு குப்பை குறித்து கூறும், மொபைல் போன் தொழில்நுட்பரான, ஜோசப்: 'சர்க்யூட் போர்டு' உள்ள எந்த மின் சாதன பொருளையும் பயன்படுத்தாமல் வைக்கும் போதோ, பழுது நீக்க முடியாமல் போகும் போதோ அது, மின்னணு குப்பை ஆக மாறுகிறது.இந்த மின் குப்பைகளில் அதிகமாக இருக்கும், 'ஈயம், காட்மியம், பெரியல்லியம், சிலிகான்' போன்ற நச்சு தன்மை வாய்ந்த வேதி பொருட்களால், சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாக, சூழல் ஆய்வு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.உலகளவில், ஆண்டுக்கு, 5 கோடி டன்னுக்கும் அதிகமாக, மின் குப்பை குவிகிறது. மின் குப்பையை குவித்து கொண்டிருக்கும் முதல் ஐந்து நாடுகளில், இந்தியாவும் உள்ளது. இந்தியாவில் மட்டும், ஆண்டுக்கு, 20 லட்சம், மின்னணு குப்பை வீசப்படுகிறது.உலகளவில் கொட்டப்படும், மின்னணு குப்பையில் வெறும், 20 சதவீதம் தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மறுசுழற்சியின் போது வெளியாகும், 'நைட்ரோ -- ஹைட்ரோ குளோரிக்' அமிலம் போன்ற நச்சுகளால், அந்த பகுதியில் இருக்கும் மக்களும், அப்பணியை செய்யும் தொழிலாளிகளும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு கண்டால் தான், முறைப்படி அப்புறப்படுத்தவும், மறுசுழற்சி செய்யவும் முடியும்.'நமோ இ - வேஸ்ட் ரீசைக்கிளிங்' நிறுவனர், அக் ஷய் ஜெயின்: பல சவாலான வேலைகளை செய்ய, டிஜிட்டல் சாதனங் கள் உதவினா லும், அதன் உபயோக தேதி முடிந்த பின், அப்புறப்படுத்துவது சாதாரண காரியமில்லை.மேலை நாடுகள் போல் முறைப்படி, மின்னணு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியை செய்ய, இந்நிறுவனத்தை ஆரம்பித்தோம். குறைந்த செலவில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு விளைவிக்காமல் மின்னணு சாதனங்களை அப்புறப்படுத்துவதே, எங்கள் நோக்கம்.மறுசுழற்சிக்கு பின், ஒவ்வொரு சாதனங்களில் இருந்தும் பிரிக்கப்படும் பொருட்களை, அந்தந்த துறை களுக்கு, மீண்டும் பயன்பாட்டுக்காக, சந்தைப்படுத்தும் பணியையும் செய்கிறோம். இந்தியா முழுவதும் உள்ள, மின்னணு குப்பையை சேகரிப்பதற் காக, 12 இடங்களில், மையம் வைத்துள்ளோம். பொதுமக்களும் விழிப்போடு செயல்பட்டு, மின் குப்பைகளை அகற்ற முன்வர வேண்டும்.நமக்கு தேவைப்படாத மின்னணு சாதனத் தின் பயன், வேறொரு வருக்கு தேவைப்படலாம். அதனால், முடிந்தவரை மின்னணு பொருட்களை, மறுபயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வோம். அப்படி முடியாத நிலையில், அதை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வழிகளை பார்ப்போம். ஏனெனில், பிளாஸ்டிக் கழிவுகளை விடவும், அதிக நச்சு தன்மையை, மின்னணு சாதனங்கள் சுமந்து கொண்டிருக்கின்றன.தொடர்புக்கு: 1800 123 5124.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement