Advertisement

தண்ட சம்பளம் தர தயாராகும் மின் வாரியம்!

''பா.ம.க.,வெற்றிக்கு, முழு மூச்சா களம் இறங்குவாரான்னு கேள்வி எழுந்திருக்கு ஓய்...'' என, முதல்தகவலை கையில்எடுத்தார் குப்பண்ணா.''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''அ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணிக்கு, ஆரம்பத்துலயே முட்டுக்கட்டை போட்டவர், சட்டத் துறை அமைச்சர், சண்முகம்... ஏன்னா, 2006 சட்டசபை தேர்தல்ல, தி.மு.க., கூட்டணியில, பா.ம.க., போட்டியிட்டப்ப, பா.ம.க.,வினர் சிலர், விழுப்புரத்துல இருக்குற அமைச்சர் சண்முகம் ஆத்துக்குள்ள புகுந்து, கொலைவெறி தாக்குதல் நடத்தினா... இதுல, அமைச்சர் நுாலிழையில தப்பிச்சாலும், அவரது சொந்தக்காரர் ஒருத்தர் இறந்து போயிட்டார் ஓய்...''இது சம்பந்தமா, ராமதாஸ், அவரது குடும்பத்தார் மேல அமைச்சர் தொடர்ந்த வழக்கு, இன்னும் நிலுவையில இருக்கு...''இப்பஎன்னடான்னா,அ.தி.மு.க., கூட்டணியில, விழுப்புரம், லோக்சபா தொகுதியில, பா.ம.க., சார்புல, வடிவேல் ராவணன் போட்டியிடுறாரு... இதைக் கேட்டதுலேர்ந்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர், 'அவங்களுக்கு எப்படிண்ணே, நாம தேர்தல் வேலை பார்க்கிறது'ன்னு தயங்கி தயங்கி கேட்டிருக்கா ஓய்...''அதுக்கு அமைச்சர், 'கட்சி எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டு தான் ஆகணும்... ஆனாலும், சில விஷயங்களை என்னால மறக்க முடியாது... என்ன செய்யலாம்னு அப்புறமா சொல்றேன்'னு பூடகமா சொல்லி அனுப்பியிருக்காராம் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''மாவட்டச் செயலரை மாத்த போட்ட திட்டம், பலிக்காம போயிட்டு வே...'' என, வேறு தகவலை கையில் எடுத்தார் பெரியசாமி அண்ணாச்சி.''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''திருச்சி,அ.தி.மு.க., - எம்.பி., குமார் தான், மாநகர, மாவட்ட செயலராகவும் இருக்காரு... சமீபத்துல, மாநகர கட்சி நிர்வாகிகள் சிலர், 'குமாரை செயலர் பதவியில இருந்து மாத்தணும்'னு கேட்க, முதல்வரை பார்க்க போயிருக்காவ வே...''அவங்களை சந்திக்க மறுத்த முதல்வர், அமைச்சர், தங்கமணியை பார்க்கும்படி சொல்லிட்டாரு... அவரோ, 'கோஷ்டி அரசியல் செய்ய இதா நேரம்... போய் தேர்தல் வேலையை பாருங்கப்பா'ன்னு திட்டி அனுப்பிட்டாரு வே...''அவங்களை அனுப்பி வச்சதே, திருச்சியை சேர்ந்த, ரெண்டு முக்கிய புள்ளிகள் தானாம்... திட்டம் பலிக்காம போயிட்டதால, ரெண்டு பேரும் விரக்தியில இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.கடைக்கு வந்த சிறுவனைப் பார்த்த, கோவை கோவாலு, ''நடராஜன் கடையில வெல்லமும், கார்த்திகேயன் கடையில பாலும் வாங்கி, வீட்ல கொடுத்து போறியா தம்பி...'' எனச் சொல்லிவிட்டு, ''மறுபடியும் தண்டச் சம்பளம் குடுக்க போறாங்களாமா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார்.''யாருக்கு வே...'' என, விசாரித்தார்அண்ணாச்சி.''சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்துல, மின் கொள்முதல், மின் திட்டங்கள், மின் தொடரமைப்புன்னு பல பிரிவுகள் இருக்குங்ணா... 'ரிடையர்' ஆன, மேற்பார்வை, தலைமை பொறியாளர்கள் சிலருக்கு, 'ஆபீசர் ஆன் ஸ்பெஷல் டியூட்டி'ன்னு, மாசம், 75 ஆயிரம் ரூபாய் சம்பளத்துல, இந்த பிரிவுகள்ல, ஒப்பந்த அடிப்படையில வேலை குடுத்திருந்தாங்களாமா...''இவங்களுக்கு தனி கார், 'ஏசி' அறைன்னு எல்லா சலுகைகளும் குடுத்தாப்புல... இதுக்கு முன்னாடி, மின்வாரிய தலைவரா இருந்த, சாய்குமார், 'ரிடையர்டு கேஸ்'களை எல்லாம், வீட்டுக்கு அனுப்பிட்டாப்புல...''இப்ப, மறுபடியும், 'ரிடையர்டு' அதிகாரிகளுக்கு, வாரியத்துல, ஒப்பந்த அடிப்படையில வேலை வழங்க, ஏற்பாடுகள் நடந்துட்டு இருக்குங்ணா...'' என, முடித்தார் கோவாலு.அரட்டைய முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒரு பக்கம் வேலையில்லாத் திண்டாட்டம், தேர்வானவர்களுக்கு நியமனம் தாமதம், இன்னொருபக்கம் முதியோர் நலம் , தாத்தாக்களுக்கு பதவி... உறுப்பட்டுடும் நாடு

  • Bhaskaran - Chennai,இந்தியா

    மின் துறையில் நல்ல இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வர்கள் இருக்கும்போது ஓய்வு பெற்றவர்களுக்கு ஒப்பந்தம் தேவையா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement