Advertisement

சொல்கிறார்கள்

ரூ.1.10 லட்சம்செலவில்ரூ.2.37 லட்சம் லாபம்!

மருத்துவ பணியுடன், ஓய்வு நேரத்தில், பல வகை வாழையை சாகுபடி செய்து, லாபம் ஈட்டி வரும், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, மருத்துவர் சந்திரசேகர்: விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நான், மருத்துவ படிப்பு முடித்து,பக்கத்து கிராமத்தில், 'கிளினிக்' ஆரம்பித்து, 30 ஆண்டுகளாகமருத்துவம் பார்த்து வருகிறேன்.
ஏழு ஆண்டுகளுக்கு முன், இயற்கை முறை வாழை சாகுபடி குறித்த, கட்டுரை படித்தேன். சென்னையில், 'சாப்ட்வேர் இன்ஜினியராக' இருக்கும் என் மூத்த மகன், விடுமுறைக்கு வந்தபோது, 'நாமளும் இயற்கை விவசாயம் செய்வோம்' என்றான்.
இதையடுத்து, கருவேல் மரங்கள் மண்டிக்கிடந்த, 4 ஏக்கரை சரி செய்து, 2016ல், இயற்கை விவசாயத்தை ஆரம்பித்தோம்.
ஆரம்பத்தில், 1.5 ஏக்கரில், நாடன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூலாஞ்செண்டு, செவ்வாழை என, வாழை ரகங்களை கலந்து விதைத்தோம்.
இயற்கை இடுபொருட்களை கொடுத்ததால், நல்ல மகசூல் கிடைத்தது. அடுத்து, 2.5 ஏக்கரிலும், அதே, ஐந்து ரக வாழைகளை விதைத்தோம்.
மொத்தம், 4 ஏக்கரிலும் சேர்த்து, நாடன் - 750, ரஸ்தாளி - 600, பூலாஞ்செண்டு - 300, கற்பூரவள்ளி - 100, செவ்வாழை - 50 என, 1,800 கன்று களை நடவு செய்தோம். அதில், 250 கன்றுக்ள காற்றில் சாய்ந்து விட, 1,550 மரங்களின் தார்களை அறுவடை செய்தேன்.
மொத்தம், 4 ஏக்க ரில், 3.47 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில், உழவு, தொழுவுரம், விதைக்கிழங்கு, நடவு, இடுபொருள் என, 1.10 லட்சம் ரூபாய் செலவு போக, 2.37 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது.
இப்போது, அறுவடை முடிந்து, மறுதாம்பு வளர்ந்து வருகிறது. அறுவடைக்கு பின் தோன்றும், பக்க கன்று அல்லது தொடர் கன்று தான், மறுதாம்பு.
அடுத்த அறுவடையின் போது, குலை கணக்கில் விலை பேசாமல், இயற்கை அங்காடிகளில், எடைக் கணக்கில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளேன். அப்படி விற்பனை செய்தால், இன்னும் கூடுதல் விலை கிடைக்கும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement