Advertisement

இது உங்கள் இடம்

தே.மு.தி.க., கரை சேருமா?

கு.அருண், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
'தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டுமே ஊழல் கட்சிகள்; அவற்றை துாக்கி எறிய வேண்டும்' என, மேடையில் முழக்கமிட்டவர், விஜயகாந்த்.
இதை, வேத வாக்காக எடுத்து,2006 சட்டசபை தேர்தலில், 234தொகுதிகளிலும், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டது. 8..45 சதவீத ஓட்டுகளை பெற்று, அனைத்து, தமிழக அரசியல்
கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கும் இல்லாத துணிச்சலாக, வன்னியர் சமுதாயத்தினர் அதிகளவில் வசிக்கும், விருத்தாசலம் தொகுதியில், விஜயகாந்த் போட்டியிட்டார். ௧௩ ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில், பா.ம.க.,வின் வேட்பாளரை வீழ்த்தி, முதன்முறையாக, எம்.எல்.ஏ., ஆனார்.
கடந்த,2009 லோக்சபா தேர்தலில், 40 தொகுதியிலும் தனித்து நின்ற, தே.மு.தி.க., 10.8 சதவீத ஓட்டுகளை பெற்றது.2011சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தார், விஜயகாந்த்;
29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி தலைவர், அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
அதன் பின், அவர் உடல்நிலை மோசமானது; செய்தியாளர்கள் சந்திப்பில், குளறுபடியாக பேசினார். ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ பேச்சை கேட்ட, விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மக்கள் கூட்டணியில் சேர்ந்தார். 2016 தேர்தலில், விஜயகாந்த் உள்ளிட்ட, அந்த கூட்டணியின், அனைத்து வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர்.அத்துடன், விஜயகாந்தின் அரசியல் நாட்டம் குறைய துவங்கியது. சிகிச்சைக்காக பலமுறை அமெரிக்கா சென்றார்.

தற்போது, உடல்நலம் தேறினாலும், அவரால், பிரசாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. வேறு வழியின்றி, அ.தி.மு.க.,வின் நிர்பந்தந்திற்கு பணிந்து, வெறும், நான்கு, லோக்சபா சீட்டிற்காக, தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது.திராவிட கட்சிகளுக்கு நிகராக, எழுச்சி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட, விஜயகாந்தின், தே.மு.தி.க., இன்று, ஒற்றை இலக்கு சீட்டை பெற்று, மோசமான நிலைக்கு வந்து விட்டது.ஒருவேளை, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து, கழற்றி விடப்பட்டிருந்தால், தே.மு.தி.க., என்ற கட்சி, இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்திருக்கும்.
அ.தி.மு.க., தயவால், தே.மு.தி.க., நீந்தி அரசியலில் கரை சேரும் என, நம்பலாமா?

'டீலிங்'கை ஒழிக்கசாட்டை எடுக்கணும் தமிழக அரசு!

ஏ.தாஜ்மா மணாளன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: வருவாய்த் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில், பெரும்பாலானோர், லஞ்சம் வாங்குவதை, வாடிக்கையாக வைத்துள்ளனர். எந்த கோப்புகள் வந்தாலும், அவர்கள் செய்யும், முதல் வேலை, அவற்றை தாமதப்படுத்துவது தான்!இதன் மூலம், மனுதாரர்களை, தங்கள் முன் ஆஜராகும்படி செய்கின்றனர். 'எனக்கு எவ்வளவு
தருவாய்; உனக்கு, நான் காரியத்தை முடித்து தருகிறேன்' என, 'டீலிங்' போடுகின்றனர்.
வழக்கின் விசாரணையின் போது, சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர், எஸ்.எம்.சுப்ரமணியம், 'தாலுகா அலுவலகங்களில் அடிக்கடி லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் நடத்தி கண்காணிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.
நீதியரசர் உத்தரவின்படி, லஞ்ச ஒழிப்புத் துறையினர், முதற்படியாக செய்ய வேண்டிய
காரியம், 'கோப்பு
சம்பந்தப்பட்டோரிடம், எப்போது வந்தது; எத்தனை மாதங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அப்படி போடப்பட்டு இருந்தால் தாமதப்படுத்தப்பட்ட, ஒரு நாளுக்கு இவ்வளவு அபராதம்' என, கணக்கிட வேண்டும்.
அதை, சம்பந்தப்பட்ட ஊழியரிடம் கட்டாயம் வசூல் செய்ய வேண்டும்; அதற்கு, அரசும் தகுந்த உத்தரவு போட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், அரசு கல்வி கூடங்கள், அரசு உதவிபெறும் அனைத்து கல்விக் கூடங்கள், உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில், 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும்.அரசு ஊழியர்கள்
விஷயங்களில், கெடுபிடிகள் விதிக்க, அரசு முன் வருமானால், அரசு அலுவலகங்கள் அனைத்திலும், லஞ்ச லாவண்ய கொடுமைகள் நிச்சயம் களையும்.
திறமையான, நேர்மையான நல்ல நிர்வாகம் கிடைத்து, எல்லா மக்களும் வளமுடன் இருப்பர். ஜனநாயகத்தில், முழுமையான பலனை, நாட்டு மக்கள், அன்று தான் பெற்று, மகிழ்வுடன் வாழ்வர்!

முதியோரைஏமாற்றுவோரைதண்டிக்கணும்!
சொ.இளசை கவிச்செல்வம், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
தமிழகம் முழுவதும், புற்றீசல் போல், முதியோர் காப்பகங்கள் பெருகி வருகின்றன; அவற்றில் பெரும்பாலானவை, கட்டணம் வசூலிக்கும் இல்லங்களாகவே உள்ளன.'வயதான காலத்தில், ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் தான், இந்த இல்லங்களை நாடுகின்றனர், முதியவர்கள். ஆனால், அந்த இல்லங்களில், குடிநீர், உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கூட, பூர்த்தி செய்யாமல், பணம் பறிப்பதையே, குறிக்கோளாக்கி செயல்படுகின்றனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த, சிவராமன்
என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'கோவை மாவட்டம், 'தபோவனம்' என்ற முதியோர் இல்லத்தில், ஆண்டுக்கு,
1 லட்சம் ரூபாய் வீதம், 20 ஆண்டுகளுக்கு, 20 லட்சம் ரூபாய் வசூல் செய்து, முதியோர் பலரை ஏமாற்றியுள்ளனர்.
அரசாணைப்படி, அங்கு, அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. விதிமீறும் முதியோர் இல்லங்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரியுள்ளார்.
இந்த வழக்கை
விசாரித்த, உயர் நீதிமன்றம், 'இது தொடர்பாக, சமூக நலத்துறை செயலர், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின், சமூக நலத்துறை முதன்மைச் செயலர் உட்பட, அரசு அதிகாரிகள் நேரில்
ஆஜராகி, அரசு சார்பில், எடுக்கப்பட்ட நடவடிக் கை குறித்த அறிக்கையை, சமர்ப்பித்துள்ளனர்.
இது தொடர்பாக,
நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், 'கோவை
மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும், முதியோர் இல்லங்களில், குடிநீர், உணவு, மின்சாரம், மருத்துவம் உட்பட, அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை, சமூக நலத்துறை அதிகாரிகள், கண்டறிய
வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளனர்.
முதியோர் இல்லங்களில்
அரங்கேறும் அவலங்கள்,
முறைகேடுகளை களையவும், முதியோரின்
நிம்மதியான வாழ்வுக்கு வழி
வகை காணவும், தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மனைவி மைத்துனன் பேச்சை கேட்டு நாசமான தலைவன் கேப்டன்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  பாதி முதியோர் இல்லங்கள் ஏமாற்றும் நோக்கம் உள்ளவைதான் வயதான காலத்தில் வேறு புகலிடம் இல்லாதுவரும்அந்த ஆத்மாக்களின் பணம் பிடுங்குவது ஒன்றே குறிக்கோள் விளம்பரம்களை பார்த்து ஏமாறுபவர்கள் அதிகம்

 • Bhaskaran - Chennai,இந்தியா

  முன்பு ஒரிசா முதல்வராக இருந்த பிஜு பட்நாயக் அரசு அலுவலகங்களில் மனுகொடுத்து பத்து நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சம்பத்தப்பட்ட குமாஸ்தாவை அடியுங்கள் என்றுசொல்லி அவ்வாறே நடந்தது என்பதையும் நினைவில் வைக்கணும் ஓரிரு நேர்மையானவர்களையும் இந்த ஊழல் பெருச்சாளிகள் பணிசெய்ய விடமாட்டார்கள் என்பதுதான் கசப்பான உண்மை

 • venkat Iyer - nagai,இந்தியா

  புவனகிரியிலிருந்து திரு அருண் கூறும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவைதான்.இன்று தேமுதிக முற்றிலும் விஜயகாந் அவர்களின் மனைவி பிரேமலதா கட்டுப்பாட்டில் இருப்பதை மக்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.விஜயகாந் தனதுபல படங்களில் மக்களுக்காக நடித்துள்ளார்.அதன் தாக்கத்தினால் மட்டுமே கட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்தால் ஏதேனும் செய்வார் என்று எதிர் பார்க்கப்பட்டது.ஆனால்,சினிமாவில் அவர் நடித்துள்ளார்.உண்மையான வாழ்க்கையில் அவரது எண்ணம் சரியாக இல்லை என்பதை உணர முடிந்தது.அவர் தன்னிலை மறந்து இருக்கும் சூழ்நிலையை மக்கள் உணர்ந்த பின்னர் அவர் கட்சியின் செல்வாக்கு மிகவும் குறைந்துள்ளதை அவர் குடும்பம் உணர்கின்றார்களோ இல்லையோ அவர் கட்சி தொண்டர்கள் உணர வேண்டும்.

 • venkat Iyer - nagai,இந்தியா

  ஏ.தாஜ்மா மணாளன் அவர்கள் அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கையும்,லஞ்ச ஊழல் பற்றியும் தெரிவித்திருந்தார்.உயர் அதிகாரிகள் மனம் வைத்தால் ஊழியர்களின் வேலைத்திறனையும்,அவர்களின் லஞ்ச ஊழலையும் கட்டுப்படுத்தமுடியும் என்பதை,நாகை மாவட்டத்தில் பணிமாற்றத்தில் சென்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அற்புதமாக செய்திருந்தார்.அவர் மக்களின் புகார்களுக்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதுப்பற்றி ஆய்வு செய்து ,அவர்களின் பணித்திறனை வைத்து,மாவட்ட நிர்வாகத்தில்,டேட்டாக்களை ஆதாரத்துடன் தயார் செய்து மதிப்பண் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் வழங்கி மக்கள் பார்க்கும் படி நோட்டிஸ் போர்டில் ஒவ்வொரு மாதமும் வைத்தார்.இதனைப்பார்த்த ஊழியர்கள் அனைவரும் அதிர்ந்தன.ஒவ்வொரு காவல் நிலைய ஊழியர்களும்,காவல் நிலையம் அதிக மதிப்பெண் எடுப்பதற்காக அனைத்து புகாரையும் சிறப்பாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து மதிப்பெண்ணை முன்னிலை படுத்தி கொண்டனர்.இதில் சில டி.எஸ்.பிக்கள் சரியாக மதிக்காததை அடுத்து அவர் டி.எஸ்.பி அலுவலகத்தினையும் அவர் விட்டு வைக்கவில்லை.அரசியல் ஆதரவு உள்ள குற்றவாளிகள் மேல் உள்ளூர் காவல் நிலையம் வழக்கு போடமுடியவில்லை என்பதை அறிந்து சுழற்சி முறையில் சிறப்பு ஆய்வாளர்களை வைத்து முதல் தகவல் அறிக்கை போட நடவடிக்கை எடுத்தனர்.லஞ்சம் வாங்கும் காவல் நிலையத்துக்கு,ஆய்வாளர் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தன.ஒவ்வொரு வாரமும் ,பணி திறன் ஆய்வு கூட்டங்களை கூட்டாமல் இருந்தது இல்லை.கீழ் மட்டம் வரை நல்ல கண்காணிப்பில் வைத்திருந்தவர்,இன்று பணிமாற்றம் செய்து அனுப்ப பட்டார்.இதற்கு இவர் இராஜஸ்தான் டேடா முறை என்று தனது மாநிலத்தின் பெயரை வைத்திருந்தார்.இன்று அவை பின்பற்றப்படவில்லை.நல்ல விஷயங்களை உயர் அதிகாரிகள் கூட பின்பற்ற மறுக்கின்றன.அவர்,ஒவ்வொரு ஊழியரின் செயல் திறனுக்கு மதிப்பெண் போட திட்டம் தீட்டி இருந்தார்.அதற்குள்,பணிமாற்றத்தில் சென்றுவிட்டார்.இவற்றினை மக்கள்அறியாமல் இல்லை.இவர்களை போன்ற மனிதர்கள்,வருவாய்துறையில் வராமலா போய்விடுவார்கள்.கடவுள் நல்லதை செய்வார் என்று நம்புவோம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement