Advertisement

ஆறு கிலோ புத்தகத்திற்கு ஆறு கிலோ இலவசம்

ஆறு கிலோ புத்தகத்திற்கு ஆறு கிலோ இலவசம்
nsimg2234659nsimgவாசிக்கும் பழக்கத்திற்கு நிகரானது எதுவும் இல்லை என்று சொல்லிக்கொண்டே மொபைல் போன் பார்க்கவே நேரமில்லாமல் காலத்தை வீணே கடத்திக்கொண்டு இருக்கிறது இளைய தலைமுறை.
nsmimg677954nsmimgஅவர்களை எப்படியாவது காசு கொடுத்து புத்தகம் வாங்கவைத்துவிட்டால், வாங்கி விட்டோமே என்பதற்காக படிக்க ஆரம்பித்து பின் வாசிப்பின் சுவையும் சுவாரசியமும் பிடிபட்டுப் போன பிறகு படிக்கிற பழக்கம் தானே வரும், என்ற நம்பிக்கையில்தான் கண்காட்சியில் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்கின்றனர்.

nsmimg677955nsmimgசென்னையில் ஒரு புது முயற்சியாக ஆறு கிலோ புத்தகம் வாங்கினால் ஆறு கிலோ புத்தகம் தந்து கொண்டிருக்கின்றனர்.வழக்கமாக புத்தகமோ செய்தித்தாளோ எடை போட்டு வாங்கத்தானே செய்வர் இது என்ன புதுமையாக விற்கவும் செய்கின்றனர், இது எங்கே என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மேற்கொண்டு படிக்கலாம்.
nsmimg677956nsmimgசென்னை கோடம்பாக்கம் ஹைரோடு ஜெமினி பார்சன் காம்ப்ளக்ஸில் உள்ளது ‛தி புக் ஸ்டோர்'.இறக்குமதி செய்யப்பட்ட ஆங்கில புத்தகங்களை நீண்ட காலமாக விற்பனை செய்து வருகி்ன்றனர்.
பெரியவர் சிறுவர்களுக்கான கதைகள், மருத்துவம், டிராவல், போட்டோகிராபி, வரலாறு, வீட்டு அலங்காரம், வீட்டுப்பிராணிகள் வளர்ப்பு, வீட்டுத்தோட்டம் என்று பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இங்கு விற்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக வாங்கிவந்து இங்கே கிலோ 250 ரூபாய் என்று விலை வைத்து வருடம் முழுவதும் விற்கின்றனர், இதில் இன்னும் ஒரு சிறப்பாக வருகின்ற 25 ந்தேதி வரை இங்கு ஆறு கிலோ புத்தகம் வாங்கினால் ஆறு கிலோ புத்தகம் இலவசமாக தருகின்றனர்.
அந்த வகையில் புகைப்படம் தொடர்பான ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகம் இப்படி எடை போட்டு வாங்கும் போது ஓரு புத்தகம் நுாறு ரூபாய் மதிப்பிர்க்குள் வருகிறது.
வீட்டு நுாலகத்தில் வைத்து படிப்பதற்கும்,பரிசாக வழங்குவதற்கும்,குழந்தைகளை மகிழ்விக்கவும் இங்குள்ள புத்தகங்களை இப்படி எடை போட்டு வாங்குவது மிகுந்த பலனளிக்கும்.கடை திறந்து இருக்கும் நேரம் உள்ளீட்ட மற்ற விவரங்களை கடை எண்ணிற்கு போன் போட்டு தெரிந்து கொள்ளவும் எண்:8754547150
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement