Advertisement

‛நம்ம சென்னை' புகைப்பட கண்காட்சி

போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் சென்னை எக்மோர் ருக்மணி லட்சுமிபதி ரோட்டில் உள்ள போகஸ் ஆர்ட் காலரியில் நம்ம சென்னை என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடந்துவருகிறது.

கடந்த 15 ந் தேதி துவங்கிய இந்த கண்காட்சி வருகின்ற 23 ந்தேதி வரை நடைபெறுகிறது.கண்காட்சி நேரம் காலை பத்து மணி முதல் இரவு 8 மணிவரையாகும்.

சென்னையின் வித்தியாசமான காட்சிகள் பொருத்தமான தலைப்புகளில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.இந்த கண்காட்சியில் புகைப்படம் தொடர்பான அரிய புத்தகங்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுவது கண்காட்சியின் சிறப்பாகும்.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement