Advertisement

67 வயதிலும் அபாரமாக நடனமாடிய லீலா சாம்சன்

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இந்த வருடம் 25வது ஆண்டு மகா சிவராத்திரி குதுாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவில் பல முக்கிய கலை நிகழ்வுகள் இருக்கின்றன நீங்கள் அவசியம் வரவேண்டும் என்று ஈஷா மைய சுவாமி சுயாக்னந்தா உரிமையுடன் அழைத்திருந்தார், அவரது அன்பையும் அழைப்பையும் தட்டமுடியாமல் சென்றிருந்தேன்.எனக்கான ஏற்பாடுகளை நல்லபடியாக செய்துகொடுத்தார், தேசிகன் மற்றும் ஹரிகரன் ஆகிய இருவரும் பெரும் உதவியாக இருந்தனர்.

சிவராத்திரிக்கு முதல் நாள் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன், நதி என்ற தலைப்பில ஒரு அற்புதமான நடன நிகழ்ச்சியை வழங்கினார்.

லீலா சாம்சன்

புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர், நடன வடிவமைப்பாளர், பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர்.தனது நாட்டியத்திறமை காரணமாக பத்மஸ்ரீ உள்ளீட்ட பட்டங்கள் பெற்றவர்.சங்கீத நாடக அகடமியின் தலைவர் உள்பட பல்வேறு உயரிய பொறுப்புகளில் இருந்தவர்.

தற்போது ஸ்பான்டா நடன அகடமி மூலம் புதிய புதிய நடன உத்திகளுடன் உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு வருபவர்.

அவருக்கு தற்போது 67 வயது இந்த வயதிலும் மேடையில் அசத்தலான பல நடனங்களை வழங்குபவர் தனது குழுவில் உள்ள இளஞைர்களுக்கு ஈடாக இயங்குபவர்.

தமிழ்,சமஸ்கிருதம்,கன்னடம்,இந்தி,பெங்காலி,உருது ஆகிய மொழிகளில் பிரபலமான பாடல்களை அதற்கான இசைக்கருவிகளின் இசையுடன் பாடகர்கள் பாட, மேடையில் லீலா சாம்சனும் அவரது குழுவினரும் அற்புதமாக நடனமாடினர்.

ஒரு நதியை எப்படி மதிக்க வேண்டும் துதிக்க வேண்டும் என்பதில் ஆரம்பித்து நதிக்கரையோரத்து கலாச்சாரங்களை எல்லாம் தனது நடனத்தின் மூலம் அருமையாக வெளிப்படுத்தினர்.அதிலும் நதி..நதி...என்ற தலைப்பில் மகாகவி பாரதியின் பேரனான ராஜ்குமார் பாரதி பாடிய பாடலும் அதற்கான நடனமும் மிகப்பிரமாதம்,நினைவைவிட்டு அவ்வளவு சீக்கிரம் நீங்காது.

நிகழ்ச்சி முடிந்ததும் முன்னிலை வகித்து பார்த்து ரசித்த சத்குரு உள்ளீட்டானவர்கள் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர்.

இந்த நடன நதி நாடு முழுவதும் பயணப்படட்டும்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement