Advertisement

முந்தியது அ.தி.மு.க., அணி!

தமிழகத்தில், லோக்சபா தேர்தல் அனல் துவங்கி, களைகட்டி விட்டது. சென்னை, வண்டலுார் அருகே, பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டணி பிரசாரக் கூட்டம், எதிர் அணியான, தி.மு.க., கூட்டணி பிரசாரத்தை முந்திவிட்டது.


இக்கூட்டத்தில், பிரதமர் மோடி, மீண்டும் பிரதமராக வேண்டும் என, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., பேசியது, மிகப்பெரும் கூட்டணி என்பதில், முக்கிய அங்கமாக உள்ள, தி.மு.க., இனி காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தலைமையில், யாரைப் பிரதமராக்க ஆதரவு தருவோம் என்பதை அறிவித்தாக வேண்டும்.ஆனால், விருதுநகர் பிரசாரக் கூட்டம், தி.மு.க.,வின் மிகப்பெரும் பலத்தை நிரூபிக்கும் உத்தியாகும். அதனால், அக்கூட்டணியில், புதுச்சேரி உட்பட, 40 தொகுதிகளில், தி.மு.க., தனக்கு, 20 தொகுதிகளை ஒதுக்கியது,


அக்கூட்டணியை இறுதி செய்த துரைமுருகன் உட்பட, தலைமைக்குழு செய்த சாதனை எனலாம்.காங்கிரஸ் கட்சிக்கு, புதுவை உட்பட, 10 சீட்கள் என்பது இறுதியாக்கப்பட்டது என்றாலும், அதில் யார் வேட்பாளர் என்பதை, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என்ற போதும், அதற்கான வெற்றி வேட்பாளர், அவர்கள் தேர்தல் செலவினத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.


ஏனெனில், இத்தொகுதிகளுக்கு, தி.மு.க., தொண்டர் பலம் உதவலாமே தவிர, நிதி உதவி சிரமம். தவிரவும், திருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்த காலம் இன்று, 20 ரூபாய் டோக்கன் வரை வந்திருக்கிறது.


மேலும், ம.தி.மு.க., தலைவர் வைகோவுக்கு, ஒரு தொகுதி ஒதுக்கீடு, அக்கட்சித் தலைவர் மீடியாவில் வலம் வரும் அளவில், தொண்டர் பலம் இல்லை என்பதையும், ராஜ்யசபா சீட் தரப்படும் என்பதால், அவர் கூட அதை விரும்பலாம். அவரும், தி.மு.க.,வில் ஆரம்ப காலத்தில் இருந்ததின் அடையாளமாக, அச்சின்னத்தை ஏற்றது, அவரது அரசியல் பாதை பலவீனமானதின் அடையாளம்.


மார்க்சிஸ்டுகளுக்கு இரு தொகுதிகள், பாரிவேந்தர் கட்சிக்கு, ஒரு இடம் என்றெல்லாம் தாராளம் காட்டிய, தி.மு.க., தம் கருதுகோளாக சட்டசபைக்கான, 20 தொகுதிகளை கைப்பற்ற இக்கூட்டணி உதவ விரும்புகிறது. எப்படியும் அடுத்த சில நாளில், தொகுதிகளுக்கான வேட்பாளர் யார்யார் என்பது தெளிவாகும்.


அ.தி.மு.க.,வில் சில விஷயங்கள், வெளிப்படையாக மாறியதற்கு, முன்பு போல ஜெயலலிதா இல்லை என்பதைத் திரும்பத் திரும்ப கூற வேண்டியதில்லை. ஆனால், பிரதமர் மோடி தனிப் பட்ட தலைமையை, துணை முதல்வர், ஓ.பி.எஸ்., 'அவர் நரசிம்ம அவதாரம்' என்றது சற்று அதிகம் என்றாலும், அந்தக் கருத்து, பாகிஸ்தானுக்கு அவர் கற்றுத்தந்த பாடம் உட்பட, சில விஷயங்களில் எடுத்த முடிவுகளைப் பிரதிபலிப்பதாகும்.


பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, எம்.ஜி.ஆர்., பெயர் சூட்ட விரும்பி அறிவித்தது, நிச்சயம், அ.தி.மு.க.,வினர் மட்டும் அல்ல, தி.மு.க.,வில் உள்ள சிலரைக் கூட மகிழ்விக்கலாம்.அதேபோல், தமிழகம் வரும் விமானங்களில் தமிழ் அறிவிப்புகள், கூட்டம் நடந்த இடம் காஞ்சி மாவட்டம் என்பதால், புண்ணிய நகரங்களில் ஒன்றான காஞ்சி என்பதை அவர் வலியுறுத்தியதையும், தமிழ் மொழியின் கலாசாரத் தொன்மையை புகழ்ந்ததையும், தேர்தல் பிரசாரம் என, குறை கூறினால், கசப்பான உண்மைகளை ஏற்கத் தயாரில்லை என்று அர்த்தமாகும்.


ஏனெனில், திருக்குறள் கருத்துடன், வேதநெறிக் கருத்துகள் ஒப்புமையாக இருப்பதாக கூறிய கருத்துகளை, தி.மு.க., விமர்சிப்பதையும், அதே சமயம், ஸ்டாலின் குடும்பத்தினர் கங்கையில் புனித நீராடி கலாசாரத் தொடர்ச்சியை ஏற்பதும், அதிக முரண்களைக் கொண்டது.


அக்கட்சி இப்போது, 'திராவிட கொள்கை' என்ற கருத்துக் குழப்பத்தில் இருப்பதின் அடையாளங் கள் பல உள்ளன.அக்கட்சி கூட்டணியில் இன்று, முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லாததும், அதே கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் அழகிரி அதிருப்தி கருத்துகளும், அக்கட்சிக்கு அதிக ஆதரவு தரும், தி.க.,வின் செயல்களும், 'மைனஸ் பாயின்ட்'எனலாம்.


இன்றைய தமிழகம், சில எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கிறது. அதை நிறைவேற்றும், எம்.பி.,க் கள் தேவை. அதைத் தரும் ஓட்டு வங்கி எங்கே? எப்படி அதை அடைவது சாத்தியம் என்ற கருத்தை முன்வைத்தே, இத்தேர்தல் நடக்கும்.


அ.தி.மு.க., அணியில், பா.ஜ.,வுக்கு ஐந்து சீட்டுகள், ம.தி.மு.க., தம் பழைய அரசியல் கோட்பாடு களை, காலத்திற்கு ஏற்ப ஒத்தி வைத்த சூழ்நிலை, உடல்நிலை சீரடைந்து வரும் விஜயகாந்த், முந்தைய காலத்தைப் போல் ஒரேடியாக, மக்கள் ஆதரவு தானாக கிடைக்கும் என்று கருதி, இரு அணிகளிடம் மாற்றி மாற்றி பேசும் அரசியல் அவலம் ஆகியவற்றை, மக்கள் எடை போடுவர்.


மேலும், இத்தேர்தல் முடிந்த பின், சட்டசபை இடைத்தேர்தல் வருகிறதா அல்லது எப்போது முடிவாகும் என்பது தெரியாத நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் என்பது, நாட்டின் முக்கியத்துவத்தில், தமிழகத்தின் பங்கை கூற வேண்டிய கட்டாயம் வரும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement