Advertisement

அதோ அந்த பறவை போல...

nsimg2228533nsimgஅலகபாத் கும்பமேளாவில் என்னை அதிகம் கவர்ந்த விஷயங்களில் ஒன்று அங்கு முகாமிட்டிருந்த ‛சீகல்' எனப்படும் சைபீரியன் நாட்டு பறவை.ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில் பறக்கும் போது வானம் திடீரென மேகம் சூழ்ந்தது போல பரவசம் ஏற்படுகிறது.
இதற்கு உணவு போடச்சொல்லி பத்து ரூபாய்க்கு காரச்சேவு பொட்டலத்தை இங்குள்ளவர்கள் விற்கி்ன்றனர் இந்த வியாபாரத்தால் பறவைகளின் பசி மட்டுமல்ல அந்த எளிய மனிதர்களின் பசியும் குறைகிறது.
மக்கள் பேரம் பேசாமல், வாங்குவதா? வேண்டாமா? என்ற பேதம் இல்லாமல் கிட்டத்தட்ட அனைவருமே அந்த காரச்சேவு பொட்டலத்தை வாங்கி பிரித்து தண்ணீரில் வீசுகின்றனர் இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பது போல பறவைக்கூட்டம் அந்தப்படகினை சூழ்ந்து கொள்கின்றன.

nsmimg676294nsmimg
அதில் சில பறவைகள் துாக்கி எறியப்படும் காரச்சேவினை தண்ணீரில் விழுவதற்குள்ளாகவே லாவகமாக பறந்து பறந்து பிடித்து தங்கள் பசியாறுகின்றன.
பறவைகளின் பசி தீர்ப்பதற்காக இல்லாவிட்டாலும் அது நெருங்கிவந்து உணவு சாப்பிடும் அழகை பார்ப்பதற்காகவே மீண்டும் மீண்டும் காரச்சேவை வாங்கி அந்தப் பறவைகளுக்கு கொடுக்கின்றனர் அதிலும் படகில் குழந்தைகள் இருந்துவிட்டால் காரச்சேவு விற்பவருக்கு கொண்டாட்டம்தான்.
nsmimg676295nsmimg
பறவைகளுக்கு இது சரியான உணவுதானா? இப்படி கொடுப்பது முறைதானா? என்ற லாஜிக் எல்லாம் இங்கே செல்லுபடியாகவில்லை, பறவைகளுக்கு பிடித்திருக்கிறது எங்களுக்கும் பிடித்திருக்கிறது என்கின்றனர்
அது ஒரளவு உண்மைதான் என்பதை அவைகள் உணவை எடுத்த பிறகு எழுப்பும் சங்கீதத்திலேயே அதாவது சத்தத்திலேயே எதிரொலிக்கிறது.
மக்கள் துாக்கிப்போடும் இந்த உணவை பறவைகள் எவ்வளவுதான் சாப்பிடும், போதும் போ என்று அலுத்துக்கொள்ளும் வகையி்ல் தண்ணீரில் உள்ள மிதவைகள் மீது அமர்ந்து வெறுமனே சில நேரம் வேடிக்கை மட்டும் பார்க்கின்றன.
nsmimg676293nsmimg
அப்படி வேடிக்கை பார்க்க உட்கார்ந்திருப்பது கூட ஒரு அழகுதான் ஏதோ ஒரு ஸ்கேல் வைத்து அளவிட்டு இப்படித்தான் உட்காரவேண்டும் என்று அதற்கு பாடம் எடுத்தது போல ஒரே மாதிரி இடைவெளிவிட்டு அவைகள் உட்கார்ந்திருக்கும் அழகே தனி.
அங்கேயும் போராடித்து போனால்,‛ வாங்க பிரண்ட்ஸ் அப்படியே பறந்துட்டு வரலாம்' என்று அவைகளுக்குள் பேசி வைத்தது போல சட்டென்று ஓரே நேரத்தில் சொல்லிவைத்தாற்போல அனைத்தும் தரையைவி்ட்டு கிளம்பி வானத்தில் பறந்து சிறு புள்ளியாக தேய்கிறது.அடடா இந்த கறுப்பு கழுத்தைக்கொண்ட வெள்ளை அழகுப்பறவை எங்கே போனது என்று நம்மை தேடுவார்களே என்று கவலை கொண்டது போல பறந்த களைப்பு தீர மீண்டும் உணவெடுக்க நீர்பரப்பிற்கு திரும்புகிறது.
இதில் பறக்க சோம்பல்பட்ட சில பறவைகள் கங்கையின் நீரோட்டத்தோடு ஆடி ஆடி அதன் மிதமான வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி மிதந்து செல்வது கொள்ளை அழகு மட்டுமல்ல ஒரு குழந்தையின் அழகும் கூட.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement