Advertisement

கோவை இவிஏ புகைப்பட கண்காட்சி

கோவை இவிஏ போட்டோகிராபி அமைப்பும்,ரோட்டரி கிளப்பும் இணைந்து ‛வாழ்க்கை' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியினை கோவை ஜெனி ரெசிடெண்சி ஆர்ட் ஹவுசில் நடத்தியது.

கண்காட்சியில் வைல்டு லைப் போட்டோகிராபர் எல்.லோகநாதன் சிறப்பு விருந்தினராக கவுரவிக்கப்பட்டார் அவரது படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது.பார்வையாளர்களை அவரது படங்கள் பெரிதும் கவர்ந்தது.

இதே போல உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் வி.முத்துராமன் எடுத்த படங்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன.அவரது படங்களைப் பார்த்து வியந்த பார்வையாளர்கள் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றுவரும் அவர் பூரண குணமடைந்து மீண்டும் திரும்ப புகைப்படம் எடுக்க வரவேண்டும் என்று பிரார்த்திப்பதாக பேசுகையில் குறிப்பிட்டனர்.

கண்காட்சியி்ல் பரிசு பெற்றவர்களின் படங்களுடன் கலந்து கொண்டவர்களின் படங்களும் இடம் பெற்றிருந்தன.பார்வையாளர்கள் திரளாக கலந்து கொண்டு படங்களை பார்த்து ரசித்தனர்.

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement