Advertisement

கூடாரம் காலியாகும்!

'ஒரு முறை பதவி சுகத்தை அனுபவித்து விட்டால், அப்புறம், அதை விட்டுக் கொடுக்க மனசே வராது என்பது, சரியாகத் தான் இருக்கிறது' என, பா.ஜ.,வின் சண்டிகர் லோக்சபா தொகுதி, எம்.பி.,யான கிரண் கெர்ரை பற்றி கூறுகின்றனர், அந்தக் கட்சியினர்.கிரண் கெர், பாலிவுட் மூத்த நடிகை. பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெரின் மனைவி. கடந்த லோக்சபா தேர்தலின்போது, இவருக்கு திடீரென அதிர்ஷ்டம் அடித்தது.பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் தலைநகரமாக உள்ள, யூனியன் பிரதேசமான, சண்டிகர் தான், இவரது சொந்த ஊர். இதனால், அந்த தொகுதியில் போட்டியிட, பா.ஜ., மேலிடம், இவருக்கு வாய்ப்பு அளித்தது. இவரும், வெற்றி பெற்றார்.ஆனால், 'அதற்கு பின், தொகுதி பக்கமே, கிரண் தலைகாட்டவில்லை' என, புகார் எழுந்தது. 'சண்டிகரில் தான், கிரண் கெர்ரின் முன்னோர் வீடு உள்ளது. அந்த வீட்டுக்கு, ஓரிரு முறை, அவர் வந்து சென்றதுடன் சரி' என கொதிக்கின்றனர், தொகுதி மக்கள்.கிரண் கெர், இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. 'சண்டிகரில் போட்டியிட, மீண்டும் எனக்கு வாய்ப்பு தாருங்கள்' என, பா.ஜ., மேலிடத்தை வற்புறுத்தி வருகிறார்.இந்த முறை, தங்களுக்கு, 'சீட்' கேட்டு, டில்லிக்கு படையெடுத்து வரும் உள்ளூர், பா.ஜ., பிரமுகர்களோ, 'மீண்டும் கிரணுக்கு சீட் கொடுத்தால், சண்டிகரில், கட்சியின் கூடாரமே காலியாகி விடும்' என, ஆவேசப்படுகின்றனர்.

பிரியங்காவுக்கு அன்பு தொல்லை!


'இந்த நெருக்கடியை, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை' என, கையை பிசைகிறார், காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள, பிரியங்கா.உத்தர பிரதேச மாநிலத்தில், தங்கள் தலைமையில், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளை இணைத்து, 'மெகா' கூட்டணிஅமைக்க, காங்கிரசார்முயற்சித்தனர்.ஆனால், 'உ.பி.,யில் உங்களுக்கு செல்வாக்கே இல்லையே... உங்களை எதற்கு நாங்கள் துாக்கி சுமக்க வேண்டும்' என, இரண்டு கட்சியினரும் கைவிரிக்கவே, காங்கிரஸ் தலைவர்கள் கதி கலங்கி போயினர்.கடைசி முயற்சியாக, உ.பி., மக்களிடையே செல்வாக்குள்ளவராக அறியப்படும், காங்கிரஸ் தலைவர், ராகுலின் சகோதரி பிரியங்காவை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.உ.பி., கிழக்கு மண்டலத்துக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார், பிரியங்கா. சமீபத்தில், உ.பி., மாநிலத்துக்கு சென்ற பிரியங்காவுக்கு, அமோக வரவேற்பு கிடைத்தது. பெண்கள் கூட்டம், பெருமளவில் திரண்டது. இதைக் கேள்விப்பட்டதும், மற்ற மாநிலங்களில் உள்ள, காங்., தலைவர்கள் எல்லாம், பிரியங்கா வீட்டின் முன், வரிசைக்கட்ட துவங்கியுள்ளனர்.'எங்க மாநிலத்துக்கு வந்து, உங்கள் முகத்தை காட்டினால் போதும்; நம்ம கட்சிக்கு ஓட்டு குவிந்து விடும். தயவு செய்து வாங்க' என, நச்சரித்து வருகின்றனர்.பிரியங்காவோ, 'எல்லா மாநிலங்களுக்கும் எப்படி போக முடியும்... ஒரே அன்பு தொல்லையாக இருக்கே...' என, புலம்புகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இம்முறை எந்த நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்கக்கூடாது தமிழ்நாட்டிலும்சரி கருணாஸ் சந்திரசேகர் தொகுதிக்கு என்ன செய்தார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement