Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

சுற்றுச்சூழலைக் காக்கும் 'மை'



மை ஊற்றி எழுதும் பேனாக்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. பயன்படுத்திய உடன் எறியும் பேனாக்கள் மண்ணில் எளிதில் மட்குவதில்லை. எனவே மை பேனாக்களை பயன்படுத்துமாறு மாணவர்களை ஊக்குவித்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியாகவும் மை பேனாக்களே சிறந்தவை. பள்ளிகளில் பேனா மை தயாரிப்பு குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கலாம்.
மை பேனாக்களில் எழுதுவது மாணவர்களின் கையெழுத்துத் திறனையும் மேம்படுத்துகிறது.


தகவல் சுரங்கம்


தலைமை கணக்கு தணிக்கையாளர்


ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து ராஜ்யசபாவில் சமீபத்தில் சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சி.ஏ.ஜி., என்பது இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர். இது இந்திய சட்ட விதி 148ன் படி ஏற்படுத்தப்பட்டது. இது மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதியுதவியை கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வருவாய் மற்றும் செலவு கணக்குகளை தணிக்கை செய்யும் பணியில் ஈடுபடுகிறது. தற்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளராக ராஜிவ் மெஹ்ரிஷி உள்ளார். இவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement