Advertisement

வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?

'எத்தனை பேரின் அரசியல் வாழ்க்கையை கெடுத்திருப்பார்; அவர்கள் விட்ட சாபம் எல்லாம், இப்போது, அவரை துரத்தி துரத்தி பழி வாங்குகிறது' என, சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங்கை பற்றி, வெறுப்புடன் பேசுகின்றனர், அந்த கட்சியினர். அமர்சிங், உ.பி., மாநில அரசியலில் மட்டுமல்லாமல், தேசிய அரசியலிலும் கோலோச்சியவர். முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சியில், இவர் வைத்தது தான், சட்டமாக இருந்தது.

சினிமா நட்சத்திரங்களை எல்லாம் கட்சியில் சேர்த்து, அவர்களுக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ., பதவி வாங்கித் தந்தார். இதனால், பதவி கிடைக்காமல், வெறுப்பில் இருந்த, கட்சியின் விசுவாசமான தொண்டர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானார். அதையும் மீறி, யாருக்காவது, எம்.பி., - எம்.எல்.ஏ., 'சீட்' கொடுக்கப்பட்டால், 'அந்த ஆள், அரசியலுக்கே லாயக்கில்லை' என, 'போட்டு'க் கொடுத்து, தன்னை, அறிவுஜீவியாக அடையாளப்படுத்துவார்.

ஒரு கட்டத்தில், சமாஜ்வாதி கட்சியிலிருந்து துாக்கி எறியப்பட்டார். பா.ஜ., - காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு துாது விட்டும், இவரை யாரும் சீண்டவில்லை. தற்போது, அஜித் சிங்கின், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியில் அடைக்கலம் ஆனாலும், அங்கும், அவரை ஓரம் கட்டியே வைத்துள்ளனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், முக்கியமான தேசிய கட்சிகளில் இடம் கிடைக்காதா என, அலைபாய்கிறார் அமர்சிங். சமாஜ்வாதி தொண்டர்களோ, 'எங்களை போன்றவர்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா...' என, கடுப்புடன் பேசுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • bal - chennai,இந்தியா

    இதே போல் தான் கட்டுமரக்குடும்பமும் அனுபவிக்கும் பாருங்கள்.

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    ஜெயப்பிரதா ஒருவர் தான் அமர் சிங் பற்றி நல்லது சொல்வார்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இவரைபோலதான் திமுகாவில் வேறுகட்சியிலிருந்துவந்தவர்களுக்கு பதவி பணம் அதிகம் கொடுப்பவர்களுக்கு சீட் என்று ஆரம்பித்து உள்ளது அடிமட்ட தொண்டனை மதிக்கவில்லை அதெல்லாம் ஜெ இருந்தவரை அதிமுகவில் மட்டும் நடந்தது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement