Advertisement

அறிவியல் ஆயிரம்: இரண்டு மடங்கு

இரண்டு மடங்கு



குழந்தைகளை உடல் மற்றும் மனதளவில் பாதிக்கும் விஷயங்களில் அலைபேசி முன்னணியில் உள்ளது. அலைபேசியிடம் இருந்து குழந்தைகளை விடுவிப்பது சவாலாக உள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் நடந்த ஆய்வில், குழந்தைகள் பெற்றோர்களிடம் பேசும் நேரத்தை விட, இரண்டு மடங்கு நேரம் அலைபேசி பயன்படுத்துவதில் செலவிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள குழந்தைகள், ஒரு வாரத்தில் சராசரியாக 23 மணி நேரம் அலைபேசி பயன்படுத்துகின்றனர். ஆனால் பெற்றோர்களுடன் கலந்துரையாடுவது இதில் பாதியாக உள்ளது.

தகவல் சுரங்கம்: நீல மாளிகை



அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகை 'வெள்ளை மாளிகை' என அழைக்கப்படுகிறது. அதே போல தென் கொரிய அதிபரின் அதிகாரப்பூர்வ மாளிகை 'நீல மாளிகை' என அழைக்கப்படுகிறது. இது தலைநகர் சியோலில் அமைந்துள்ளது. கொரிய கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இது 62 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் அதிபரின் இல்லம், அலுவலகம், வெளிநாட்டு விருந்தினர் இல்லம், தலைமை செயலகம், பத்திரிகையாளர் அறை ஆகியவை உள்ளன. இதன் கட்டுமானப்பணி 1989ம் ஆண்டு தொடங்கி 1991ல் முடிக்கப்பட்டது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement