Advertisement

வழிக்கு வருவாரா?

'பரவாயில்லையே... இவர் சினிமாவெல்லாம் பார்ப்பாரா' என, உத்தர பிரதேச முதல்வரும், பாஜ.,வைச் சேர்ந்தவருமான, யோகி ஆதித்யநாத் பற்றி, ஆச்சரியத்துடன் பேசுகின்றனர், அந்த மாநில அதிகாரிகள். உ.பி.,யில், கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்றதும், 'முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும்' என, பரபரப்பாக பேசப்பட்டது. யாரும் எதிர்பாராத விதமாக, லோக்சபா, எம்.பி.,யாக இருந்தவரும், கோரக்பூர் மடத்தை சேர்ந்த ஆன்மிகவாதியுமான, யோகி ஆதித்யநாத்தை, முதல்வராக நியமித்தது, பா.ஜ., மேலிடம்.

அவரும், தன் வேலையில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறார். ஆடம்பரமான விழா, பொழுது போக்கு நிகழ்ச்சி ஆகியவற்றில், நாட்டம் செலுத்துவது இல்லை. இதனால், காக்கா பிடித்தே காலத்தை கழித்து வந்த அதிகாரிகள் பலரும், செய்வதறியாது திகைத்து போயினர். 'இவரை காக்கா பிடிக்க வழியே இல்லையா...' என, புலம்பினர். இந்த நேரத்தில் தான், 'முதல்வர், தன் அமைச்சரவை சகாக்களுடன் சென்று, சினிமா பார்த்தார்' என, செய்திகள் வெளியாகின; அதிகாரிகளால் நம்பவே முடியவில்லை.

விசாரித்த போது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மீது, 2016ல், நம் வீரர்கள் நடத்திய, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தாக்குதல் பற்றி எடுக்கப்பட்டுள்ள படத்துக்கு, அவர் சென்றது தெரிந்தது. 'படமே பார்க்காமல் இருந்தவர், இப்போது தான், படம் பார்க்க துவங்கியுள்ளார். இன்னும் சில காலத்தில், முழுமையாக நம் வழிக்கு வந்து விடுவார்' என, ஆவலுடன் காத்திருக்கின்றனர், அதிகாரிகள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement