Advertisement

அறிவியல் ஆயிரம்: ஆபத்தில் பூச்சியினங்கள்

ஆபத்தில் பூச்சியினங்கள்



உலகில் பாலுாட்டிகள் மற்றும் பறவைகளை விட, 8 மடங்கு வேகத்தில் பூச்சியினங்கள் அழிந்து வருவதாக சிட்னி பல்கலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதே வேகத்தில் சென்றால் அடுத்த 100 ஆண்டுகளுக்குள் பூச்சி இனங்கள் முற்றிலும் அழிந்து விடும். ஒட்டுமொத்த பூச்சி இனங்களில் 41 சதவீதம் அழிவு நிலையில் உள்ளன. இதில் வண்ணத்துப்பூச்சி 53 சதவீதம், தேனீக்கள் 46 சதவீதம், வண்டுகள் 49 சதவீதம், தட்டான்கள் 37 சதவீதம் அழியும் நிலையில் உள்ளன. ஒட்டுமொத்த பாலுாட்டிகள், பறவை இனங்களில் 22 சதவீதம் அழியும் நிலையில் உள்ளன.

தகவல் சுரங்கம்: முதல் கண் வங்கி



கண் தானம் மூலம் பெறப்படும் கருவிழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அதைக் கருவிழி மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன. உலகின் முதல் கருவிழி (கார்னியா) மாற்று அறுவை சிகிச்சை 1905ல் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதற்குப்பின் 1944ம் ஆண்டு உலகில் முதல் கண் வங்கி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கப்பட்டது. இதன்பின் பல்வேறு நாடுகளில் கண் வங்கிகள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் முதன் முதலாக கண் வங்கி 1945ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement