Advertisement

அறிவியல் ஆயிரம்: எரிவாயு ஆபத்து

எரிவாயு ஆபத்து



சமையல் எரிவாயு சிலிண்டருக்குள் அடைக்கப்பட்டு உள்ள 'புரோப்பேன், பூட்டேன்' ஆகியவை திரவ வடிவில் இருக்கும். ஆனால் அது அடுப்புக்கு வாயு வடிவில் வருகிறது. சிலிண்டரில் இருந்து 'கேஸ் லீக்' ஆனால், எளிதில் உணர 'எத்தில் மெர்கேப்டன்' என்ற ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது. இது வாசனை மூலம் நம்மை எச்சரிக்கை செய்யும். அப்போது எச்சரிக்கையுடன் அதை தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும். வெளியாகும் திரவம் காற்றை விட கனமானது என்பதால், புகையை போல் மேலே பரவாமல், தரையில் பரவி விடும். சிறிய தீப்பொறி பட்டாலும் பெரியளவில் தீ பற்றி விடும்.

தகவல் சுரங்கம்: சுங்குடி தொழில்நுட்பம்



கோடை காலத்திற்கு ஏற்ற சுங்குடி சேலையை செய்ய கூட்டு முயற்சிகள் தேவை. இந்தச் சேலைகள் உற்பத்தி காலந்தோறும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. பின்னணியில் ஒரு வண்ணம், அந்த வண்ணம் ஒட்டாத வகையில் சிறு வட்டங்கள் ஆகியவையே சுங்குடி டிசைனை ஏற்படுத்தினர். சாயம் ஒட்டாத வகையில் முதலில் சிறு வட்டங்கள் கையால் நுட்பமாக நுாலால் கட்டப்பட்டன. இதில் பயிற்சி பெற்றவர்கள் மறைந்து விட்டதால் சிறு வட்டங்களில் மெழுகு வைக்கப்பட்டு சாயம் தோய்க்கப்பட்டது. மெழுகு இருந்த பகுதியில் சாயம் ஒட்டுவதில்லை. அவை வெண்மை நிற வட்டங்களாகின.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement