Advertisement

அறிவியல் ஆயிரம்

உயரே போகும் புகை
தீ எரியும் போது மற்றும் வாகன இயக்கத்தின் போது புகை வெளிப்படுகிறது. இந்த புகை சிறிய அளவில் இருந்தாலும், பெரிய அளவில் இருந்தாலும் வானத்தை நோக்கி உயரே செல்வதை காண்கிறோம். இதற்கு காரணம் பூமியில் நிரம்பியுள்ள காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகம். புகையும் காற்றின் ஒரு விதம் தான் என்றாலும், இரண்டின் அடர்த்தியிலும் வேறுபாடு உள்ளது. புகையை விட காற்றின் அடர்த்தி அதிகம் இருப்பதால் காற்றின் மீது புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அப்போது காற்று கீழ்நோக்கியும், புகை மேல்நோக்கியும் செல்கிறது.
தகவல் சுரங்கம்
ஏர் டிராபிக் கன்ட்ரோலர்கள்
விமானம் பாதுகாப்பாக இயங்குவதில் 'ஏர் டிராபிக் கன்ட்ரோலர்கள்' எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இவர்கள்தான், பைலட் எப்போது விமானத்தை இயக்க வேண்டும்? எப்போது தரையிறக்க வேண்டும்? எப்போது ஓடுதளத்தை பயன்படுத்த வேண்டும்? எந்த வேகத்தில் செல்ல வேண்டும்? எதிரே விமானங்களுக்கு வழிவிட, எவ்வளவு உயரத்தில் விமானத்தை இயக்க வேண்டும்? என விமான போக்குவரத்தின் அனைத்து தகவல்களையும் தரையில் இருந்து கொண்டு வழங்கும் பணியை செய்கின்றனர். ராடார் உதவியுடன் பணிபுரிகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement