Advertisement

பல் இல்லாவிட்டாலும் பகோடா சாப்பிடலாம்!

'இந்த வயதிலும், இவர் இப்படி சாப்பிடுவதை பார்த்தால், எங்களுக்கெல்லாம் பொறாமையாக உள்ளது' என, காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, மோதிலால் வோராவை பற்றி, அந்த கட்சியின் சக தலைவர்கள் பேசுகின்றனர். மோதிலால் வோராவுக்கு, 90 வயதாகிறது. மத்திய பிரதேச முதல்வர், மத்திய அமைச்சர் போன்ற உயர் பதவிகளை வகித்தவர். நீண்ட நாட்களாக, காங்கிரஸ் பொருளாளராக பதவி வகித்தார். சமீபத்தில் தான், அந்த பதவி, அவரிடம் இருந்து, அஹமது படேலுக்கு மாற்றப்பட்டது.

இதையொட்டி, டில்லியில், காங்., கட்சியின் முக்கிய தலைவர்களான, குலாம்நபி ஆசாத், அஹமது படேல், ஜனர்தன் திவிவேதி ஆகியோர், வோராவுக்கு விருந்து வைத்தனர். வோரா, இனிப்புகளை விரும்பி சாப்பிடுபவர். இந்த விருந்தில், அவருக்கு பிடித்த ஏராளமான இனிப்புகள் இடம் பெற்றன. அவரும், கையில் கிடைத்த இனிப்புகளை எல்லாம், 'உள்ளே தள்ளியபடி' இருந்தார்.

இதைப் பார்த்த, குலாம்நபி ஆசாத் போன்றவர்கள், 'இந்த வயதிலேயே எங்களால், விரும்பிய உணவை சாப்பிட முடியவில்லை. நீங்கள் வெளுத்து கட்டுகிறீர்களே...' என, வாயில் எச்சில் ஊற, பொறாமையுடன் கூறினர்.

வோராவோ, 'உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தால், பல் இல்லாவிட்டாலும் பகோடா சாப்பிடலாம்' என, அவர்களை கிண்டலடித்தபடி, நெய் வடிந்த ஜாங்கிரியை, 'அலேக்'காக வாய்க்குள் போட்டார்.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இதெல்லாம்கூட ஒரு கொடுப்பினை வேதத்தில் ஒரு பிரார்த்தனையில் 'எனது முப்பது வயதில் இருந்ததுபோன்ற ஆரோக்கியத்துடன் நல்ல வஸ்துக்களை அனுபவித்து உண்ணும் ஆரோக்கியம் எனது தொன்னூறு வயதிலும் வேண்டும்' என வருகிறது

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அப்போ காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த வோரா பெருமகனார் ஆளுநர் பதவிஏற்கத்தயாராக உள்ளார் என்று சொல்லுங்கள்

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement