Advertisement

அறிவியல் ஆயிரம்: நான்காவது முறை

நான்காவது முறை



பூமியில் 1880ல் இருந்து வெப்பநிலை பதிவு செய்யப் படுகிறது. இதில் 2018ல் பதிவான வெப்பநிலை, நான்காவது அதிகபட்ச வெப்பநிலை என அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. 'எல் நினோ' காரணமாக 2016ல் உச்சபட்ச வெப்பநிலை பதிவானது. இரண்டு மற்றும் மூன்றாவது அதிகபட்ச வெப்பநிலை 2017 மற்றும் 2015ல் பதிவானது. 1950 - 1980 இடையேயான சராசரி வெப்பநிலையை விட, தற்போது சராசரி வெப்பநிலை 0.83 செல்சியஸ் அதிகரித்துள்ளது. பசுமை இல்ல வாயுக் களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வருவதே, வெப்பநிலை அதிகரிப்புக்கு காரணம்.

தகவல் சுரங்கம்: லோக்சபா தொகுதிகள்



லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. லோக்சபாவுக்கு மொத்த தொகுதிகள் 543. இதில் 272 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். 1952ல் நடந்த முதல் லோக்சபா தேர்தலில் மொத்த தொகுதிகள் 489. பின் இது 1957 மற்றும் 1962ல் 494 தொகுதிகளாகவும், 1967ல் 520 தொகுதிகளாகவும் உயர்ந்தது. பின் 1971ல் 518 தொகுதிகளாக குறைந்தது. பின் 1977 மற்றும் 1980களில் 542 தொகுதிகளாக உயர்ந்தது. பின் 1984ல் 515 ஆகவும், 1989ல் 529 ஆகவும் மாறியது. 1991ல் முதன்முதலாக மொத்த தொகுதிகள் 543 ஆனது. பின் தற்போது வரை இந்நிலை தொடர்கிறது.

Download for free from the Store »

" "
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

" "
Advertisement