Advertisement

'நாளை நமதே!'

'காத்திருப்பு வீண் போகாது. கண்டிப்பாக, நமக்கும் நல்ல காலம் பிறக்கும். அதற்கான நேரம் வந்து விட்டது' என, தன் கட்சியினரிடம், திடீரென நம்பிக்கையுடன் பேசத் துவங்கியுள்ளார், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர், ஜெகன்மோகன் ரெட்டி. இவர், ஆந்திர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, மறைந்த, ராஜசேகர ரெட்டியின் மகன்.


தந்தை இறந்த பின், காங்கிரசில், தனக்கு முக்கியத்துவம் கிடைக்காததால், தந்தை பெயரில், தனிக்கட்சி துவங்கினார். கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலின்போது வீசிய மோடி அலை, ஜெகனை கவிழ்த்து விட்டது. பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்று, அந்த கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடு, முதல்வராகி விட்டார்.


தேர்தல் தோல்வி, வழக்குகள் என, அடுத்தடுத்த சோதனைகளால், ஒய்.எஸ்.ஆர்., காங்., தொண்டர்கள் சோர்வடைந்தனர். ஆனாலும், ஜெகன்மோகன், சளைக்காமல், ஆந்திரா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, மக்களை சந்தித்தார். அடுத்த சில மாதங்களில், ஆந்திராவில், லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, சட்டசபை தேர்தல் நடக்கப் போகிறது.


சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில், 'ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., காங்., அபார வெற்றி பெறும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உற்சாகமடைந்துள்ள ஜெகன்மோகன், 'கருத்துக் கணிப்பே, நமக்கு சாதகமாக உள்ளது. யாரும் சோர்வடைய வேண்டாம்; நாளை நமதே' என, தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வருகிறார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • nicolethomson - bengalooru,இந்தியா

    பாப்போம்,

  • Bhaskaran - Chennai,இந்தியா

    கையில் கொஞ்சம் எம்பிக்கள் கிடைத்துவிட்டால் இவரும் பிரதமர்போட்டியில் ஒருவரே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement