Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

ஹிந்து முன்னணி நிறுவன அமைப்பாளர், ராம கோபாலன் அறிக்கை: ஒரு அரசியல் கட்சி, அனைவருக்கும் பொதுவானதாக, அனைத்து சமூகத்தையும் மதித்து செயல்பட வேண்டும். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இஸ்லாமிய திருமண வரவேற்பு ஒன்றில், இந்துக்களின் வேள்வி, திருமண சடங்கை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். ஈ.வெ.ரா., காலம், கருணாநிதி காலம் போல், இப்போது, இந்து சமுதாயம் இல்லை என்பதை, தி.மு.க.,விற்கு, ஹிந்து முன்னணி தெரிவித்துக் கொள்கிறது. தி.மு.க.,வில் இருக்கும், சுயமரியாதையும், தன்மானமும் உள்ள ஹிந்துக்கள், சூடு சொரணையோடு வாழ வேண்டுமானால், ஸ்டாலின் பேச்சிற்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.

'சசிகலா குடும்பத்தில் சண்டை முற்றி இருக்கிறது' என்பதை உணர்த்தும், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலர், திவாகரன் பேட்டி: அ.ம.மு.க., வில் உள்ள தங்க தமிழ்ச்செல்வன், அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. தினகரன், அனைவரையும் கஷ்டப்படுத்தி வருகிறார். தினகரன் நடத்தும், அ.ம.மு.க., மூழ்கும் கப்பல். கருத்துக் கணிப்பில், அ.தி.மு.க., - அ.ம.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும், சரிசமமான ஓட்டுகள் இருப்பதாக வரும் தகவல்கள், தினகரன் ஆதரவாளர்களால், திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலர், ஈ.ஆர்.ஈஸ்வரன், 'லகலக' பேச்சு: கட்சியினர் அனைவரும் ஏற்கும் கூட்டணியை அமைப்பதில், ஒவ்வொரு தேர்தலிலும், சிக்கல் எழுகிறது. கடந்த காலங்களில், 'கொ.ம.தே.க., வெற்றிக் கூட்டணியில் இருக்கும்' என, முழங்கினோம். ஆனால், இப்போது நிலை மாறிவிட்டது. கொ.ம.தே.க., எந்தக் கூட்டணியில் இருக்கிறதோ, அந்தக் கூட்டணி தான், வெற்றி பெறும். இதன் அடிப்படையில், லோக்சபா தேர்தலில் கூட்டணி குறித்த முடிவை எடுப்போம்.

த.மா.கா., கட்சி தலைவர், வாசன், 'உண்மை' பேட்டி: லோக்சபா தேர்தலில், பெரும்பாலான கட்சிகள், கூட்டணி அமைத்து செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்தக் கட்சியும், அதிகாரபூர்வமாக தங்கள் கூட்டணியை அறிவிக்கவில்லை; த.மா.கா.,வும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, தேர்தல் நெருங்கும்போது, மக்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு, தொண்டர்களின் கருத்தைக் கேட்டு, கூட்டணி அமைக்கப்படும்.

'அப்பாடா... எனக்கு இப்பதவியைத் தரவில்லையே' என, நிம்மதி பெருமூச்சு விட்டபடியே, தமிழக காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன் பேட்டி: தமிழக காங்., கட்சிக்கு, புதிய தலைவராக, கே.எஸ்.அழகிரியை, ராகுல் நியமித்ததை, முழு மனதுடன் வரவேற்கிறேன். புதிய தலைமை, தமிழக, காங்., கட்சிக்கு புது வேகத்தை, தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும். காங்., கட்சியில் சோர்வடைந்து இருந்த தொண்டர்கள், மீண்டும் சுறுசுறுப்பாக பணியாற்றுவர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement