Advertisement

கும்பமேளா கோலாகலம்.

மணிவண்ணன் ராமச்சந்திரனின் கும்பமேளா கோலாகலம்.
nsimg2206099nsimgகங்கா,யமுனா,சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் அலகபாத்தில் கும்பமேளா மிகக் கோலாகலமாக நடந்துவருகிறது.இன்று தை அமாவசை நாளான்று மட்டும் மூன்று கோடி பேர் நீராடிவருகின்றனர்.
nsmimg669931nsmimg

கடந்த மாதம் துவங்கி அடுத்த மாதம் நிறைவடைய இருக்கும் இந்த கும்பமேளாவினை படம் எடுப்பதற்காகவே சென்று வந்து இருக்கிறார் தஞ்சாவூர் புகைப்படக் கலைஞர் மணிவண்ணன் ராமச்சந்திரன்.

nsmimg669932nsmimg
ஒவியத்தையும் புகைப்படத்தையும் ஒரு சேரக்கற்றுக்கொண்ட இவர் தான் எடுக்கும் படங்களிலும் ஒவியத்தின் உன்னதத்தை அழகை கொண்டுவருவதில் கெட்டிக்காரர்.

nsmimg669933nsmimgnsmimg669935nsmimg
ஹம்பி,கோனார்க் போன்ற தொன்மையான இடங்களையும் நமது பாரத கலாச்சார விழாக்களையும் படம் எடுக்க நாடு முழுவதும் பயணம் செய்வது இவருக்கு பிடித்தமானது.

nsmimg669936nsmimg

nsmimg669937nsmimg




ஊரில் இருக்கும் நாட்களிலும் சும்மாயிருக்கமாட்டார் ‛ஸ்ட்ரீட் போட்டோகிராபி' என்று கிளம்பி எளிய மனிதர்களின் வாழ்வியலை தனது கேமிராவில் அள்ளிக்கொண்டு வருவார்.
nsmimg669938nsmimg
பொருளாதார தேவைக்காக திருமணம் போன்ற விழாக்களை படம் எடுக்கும் இவர் பெரும்பாலான நேரங்களில் தனது புகைப்படத்திறமைக்கு தீனி போடும் இடங்களைத் தேடி படமெடுக்க கிளம்பிவிடுவார்.


இவரது திறமையை அறிந்து பல பிரபல நிறுவனங்களும்,அமைப்புகளும் இவரை தற்போது படமெடுக்க பயன்படுத்தி வருகின்றனர்.


மும்பையில் உள்ள ஜாஹாங்கீர் அரங்கத்தில் புகைப்பட கண்காட்சி வைக்கவேண்டும் என்பது இவரது கனவு அதற்காக தன்னையும் தனது படங்களையும் மேலும் மேலும் செதுக்கிக் கொண்டு இருக்கும் மணிவண்ணன் ராமச்சந்திரன் என்ற இந்த கலைஞனின் கனவு விரைவில் கைகூடட்டும்.இவரது எண்:90435 62566.


-எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement