Advertisement

கவர்ச்சிகளை நம்பி ஓட்டளிக்காதீர்கள்!

ஸ்டாலின் பிழைப்பு இனி கந்தலாகி விடுமே!என்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், வி.ஏ.ஓ., வேலைக்கு, ஆராய்ச்சி படிப்பு முடித்த பட்டதாரிகள், மனு போடும் கேவலம், இனி தொடராது. 'காமராஜர் காலத்தில் தான், தமிழகத்தில் நிறைய தொழில்கள் துவக்கப்பட்டன' என்ற பேச்சு, இனி எவரும் பேச முடியாது!

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், ஆறாகி, பெருகி ஓடாத, பாலும், தேனும், முதல்வர், இ.பி.எஸ்., ஆட்சியில், வெள்ளமாகப் பெருகி ஓடப் போகிறது. 'அ.தி.மு.க., ஆட்சி, தமிழகத்தில், 100 ஆண்டுகள் தொடர வேண்டும்' என ஆசைப்பட்டார், ஜெயலலிதா; அதை நிறைவேற்றப் போகிறார், இ.பி.எஸ்., எத்தனை யாகங்கள் யார் செய்தாலும், நிச்சயம் முதல்வராக ஆக முடியாது.

முதல்வருக்கு விரைவில் சுக்ர திசை ஆரம்பமாக போகிறது. அந்த மகானுபாவர், இனி தொட்டதெல்லாம் துலங்க போகிறது. இதில் யாருக்கும், எந்த 'டவுட்'டும் கிடையாது. தமிழகத்தில் தொழில் துவக்க, அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகள், முன் வந்துள்ளனவாம்; 304 தொழில் ஒப்பந்தங்கள், 3 லட்சம் கோடி முதலீட்டில் ஆரம்பிக்க, ஒப்புதல் வழங்கி விட்டார்களாம்!

ஆனால், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில், வெறும், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களே கையெழுத்து ஆனதாம்; முதல்வர், இ.பி.எஸ்., ஆட்சியில், தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதால், வெளிநாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள், தமிழகத்தில் தொழில் துவக்க ஆர்வம் காட்டுகிறார்களாம்!

தமிழகத்தில், 10 லட்சம் பேருக்கு, லஞ்சம் எதுவும் கொடுக்காமல், வேலை கிடைக்கப் போகிறதாம்; தமிழகத்தில் இருக்கும், அரசியல்வாதிகள், அதிகாரிகள் வெளிநாட்டுக் காரர்களிடம், லஞ்சம் வாங்காமல் வேலைகளை கச்சிதமாகச் செய்து கொடுப்பார்களாம்! இப்படி எல்லாம் பேசி, 'தாராளமாக தொழில் துவக்க, தமிழகம் வாருங்கள்' என, துணை ஜனாதிபதி, வெங்கையா, வக்காலத்து வாங்கி பேசி இருக்கிறார்.

இந்தளவுக்கு தொழில்கள், தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கினால், 'அரசியல் பிழைப்பு கந்தலாகி விடுமே...' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆடிப் போக மாட்டாரா...சொல்லுங்கள்!


---

திருமாவளவன் பேச்சும், வாதமும் ஏற்கத்தக்கதல்ல!எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மொழி, இன, மத, ஜாதி, பாலின பாகுபாடு இன்றி, விருது வழங்கப்பட வேண்டும் என, பாரத ரத்னா உருவாக்கப்பட்டது. ஆனால், அந்த நோக்கத்திற்கு மாறாகவே, தற்போது விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. 'இது வரை, அம்பேத்கரை தவிர, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த, வேறு எவருக்கும், அந்த விருது வழங்கப்படவில்லை. 'அரசியல் நோக்கில் பயன்படுத்தி, அவற்றை சிறுமைப்படுத்தியுள்ள, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசை, வன்மையாக கண்டிக்கிறோம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்; அவருக்கு சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்...

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரியாக, பா.ஜ.,வை, திருமாவளவன் உள்ளிட்ட, எதிர்க் கட்சிகள் குறை கூறுகின்றன. முந்தைய, பா.ஜ., ஆட்சியில், இஸ்லாமியரான, அப்துல் கலாமை ஜனாதிபதியாக்கியதை, மறந்து விட்டீர்கள் போலும்! ஆனால், அப்துல்கலாமை, இரண்டாவது முறையாக, ஜனாதிபதியாக வர விடாமல் தடுத்த, காங்கிரசுடன், தற்போது நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள்!

தற்போதுள்ள, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர் என்பதை, நீங்கள் அறியவில்லையா? உ.பி., மாநில முதல்வர், யோகி ஆதித்ய நாத்தும், தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவர் தான். வரலாறு தெரியாமல் நீங்கள் பேசக் கூடாது. லோக்சபா தேர்தல் வருகிறது. பா.ஜ.,வை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சியாக, சித்தரித்து காட்ட வேண்டும் என்பதற்காக தான், நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் என்பது புரிகிறது!

நாடு சுதந்திரம் பெற்று, 70 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அதில், 50 ஆண்டுகளுக்கு மேலாக, காங்கிரஸ் பிடியில் தான், நாடு இருந்தது. அப்போதும், ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன், பத்ம விருதுகளை கொடுத்து தான் வந்துள்ளனர். திருமாவளவனும், நீண்ட நாட்களாக, கட்சி நடத்தி வருகிறார். அப்போதெல்லாம் அவருக்கு வராத ஞானோதயம், இப்போது மட்டும் வந்திருப்பது வேடிக்கையாக உள்ளது!

---

கவர்ச்சிகளை நம்பி ஓட்டளிக்காதீர்கள்!வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: நாட்டில், 1989 - 2009 ஆண்டுகள் வரை நடந்த, ஏழு லோக்சபா தேர்தல்களிலும் ஆட்சி அமைக்க தேவையான, 273 என்ற மெஜாரிட்டி, எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பின், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன், 2014ல் ஆட்சி அமைத்துள்ளது.

கடந்த, 1984ல் நடந்த, லோக்சபா தேர்தலில், வெறும், இரண்டு, எம்.பி.,க்களை மட்டுமே பெற்ற, பா.ஜ., 2014ல், 283 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்துள்ளது. 1998ல் 182ம், 2009ல் 116 இடங்களையும், பா.ஜ., கைப்பற்றியுள்ளது. இந்திரா படுகொலைக்குப் பின், 1984ல், காங்கிரஸ், மொத்தமுள்ள, 543ல், 404 இடங்களில் வெற்றி பெற்று, வரலாற்று சாதனை படைத்தது. இந்திரா, ராஜிவ் தலைமைக்கு பின், காங்கிரசால், மெஜாரிட்டி யுடன் ஆட்சி அமைக்க முடியவில்லை.

தமிழகத்தில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், 37 எம்.பி.,க்களை, அ.தி.மு.க., அள்ளியுள்ளது. இம்முறை, அந்த கட்சியால், அந்தளவிற்கு வெற்றி பெற முடியுமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது. 'பா.ஜ., அரசை வீழ்த்தியே தீரவேண்டும்' என்ற முனைப்பில், தேசிய, மாநில உதிரிக் கட்சிகள் சில, வரிந்து கட்டிகூட்டணி அமைப்பதிலும், இடங்களைப் பிடிப்பதிலும் வேகம் காட்டி வருகின்றன.

பிரதமர் மோடியை எதிர்த்துக் கிளம்பியுள்ள, எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறுமா அல்லது மீண்டும், மோடி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்! தேர்தல் நெருங்க நெருங்க, புது புது அறிவிப்புகள், சலுகைகள், இலவசங்கள், திட்டங்கள் வரலாம். கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி, மக்கள் ஏமாறாமல் நல்லவர்களுக்கு ஓட்டளித்தால், நாடு சுபிட்சம் பெறும்!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இப்படியெல்லாம் அதிமுகவுக்கு துதிபாடி அவர்களைஎப்படியாவது காவிக்கூட்டணிக்கு இழுக்கவேண்டும் என்பது இடப்பட்டிருக்கும் கட்டளை ஐயா

 • Bhaskaran - Chennai,இந்தியா

  திருமா பேசுவதற்குமுன் என்னபேசுகிறோம் என்பதை தெரிந்துவைத்துப்பேசனும் என்ன செய்வது திமுகவுடன் கூட்டணிசேரும்போது சுய சிந்தனையே மழுங்கிவிடுகிறது

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  வாசகரின் கருத்து வேடிக்கையாக உள்ளது ..... எடப்பாடி அரசு மட்டுமல்ல, கடந்து போல கருணாநிதி, ஜெ அரசுகளின் அறிவிப்புகளும் தண்ணீரில் மட்டும் எழுதி வைக்கும் தகுதி படைத்தவைகளே ....

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  உதிரிக் கட்சிகள் வந்து ஒட்டிக்கொள்ளலாம் அவர்கள் மூலமும் தம் கட்சி டமாரத்தை அடிக்கலாம். ஆனால் மக்கள் இதற்குமுன் கொடுத்த சந்தர்ப்பங்களில் ஆடிய ஆட்டத்தையெல்லாம் மறந்து, இன்று திண்ணைக்கச்சேரிக்கு வந்தவுடனே அப்படியே ஓட்டுமழை கொட்டிவிடுமாக்கும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement