Advertisement

'டவுட்' தனபாலு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு: அமெரிக்க அதிபர் கிளின்டனை சந்தித்தபோது, 'மிஸ்டர் கிளின்டன்' என்று தான் அழைத்தேன். ஆனால், அரசியல் அனுபவத்தில், என்னைவிட சிறியவரான, நரேந்திர மோடியை, 10 முறை, 'சார்' என அழைத்தேன். மாநில நலனை மனதில் வைத்து, அவரை திருப்திப்படுத்தவே, அப்படி அழைத்தேன்.

டவுட் தனபாலு: பா.ஜ.,வோடு கூட்டணி வைத்து, அமைச்சரவையில் இலாகாவை கேட்டுப் பெறும் ஆர்வத்தில், துளியாவது, 'மாநிலத்துக்கு இதெல்லாம் தேவை... உறுதி அளித்தால், கூட்டணி'ன்னு, நிபந்தனை வைத்திருக்க வேண்டியது தானே... அதைச் செய்தீங்களா என்ற, மக்களின், 'டவுட்'டுக்கு, பதில் சொல்ல முடியாமல், எதை எதையோ உளறுறீங்களே...!

---

தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர், ராஜா: 'டாஸ்மாக்' கடையில் விற்கப்படும் மதுபாட்டிலுக்கு அடிக்கும் கமிஷனில், எம்.எல்.ஏ., முதல், அமைச்சர் வரை, பங்கு போகிறது.

டவுட் தனபாலு: கடந்த தேர்தலின்போது, மதுவிலக்கு குறித்து அதிகம் பேசி, 'குடி'மக்களின் ஓட்டுக்களை இழந்ததாக, உங்க கட்சி நிர்வாகிகள் புலம்பி வர்றாங்க... இம்முறை, மதுவிலக்கு விஷயத்தில், தீவிரம் காட்டாமல் இருந்தால், ஓட்டு மட்டுமல்ல; இன்னபிறவும் கிடைக்கும்னு சொல்ல வர்றீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

---

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: தமிழகத்தில், 40 ஆண்டுகளாக, அரசியலில் ரவுடிகளின் கை ஓங்கியுள்ளது. அனைத்து கட்சிகளையும் ரவுடி என கூறவில்லை.

டவுட் தனபாலு: வெளிப்படையான அரசியலைத் தரப் போகிறோம்னு கட்சி துவக்கிய நீங்க, எது ரவுடிக் கட்சி என்ற விஷயத்தைக் கூட, மக்களிடம் மறைக்குறீங்களே... இது நியாயமா... அவசரப்பட்டு அம்பலப்படுத்திவிட்டால், அவர்களோடு கூட்டணி வைக்கும்போது கூச்சமாக இருக்கும்னு, 'பீல்' பண்றீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கமல் சார் கவலையே பட வேண்டாம் இதற்கு மேலும் அசிங்கமாகக்கூட விமர்சித்தவர்களெல்லாம் போய் விழுந்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும், இணைந்தும் அரசியல் செய்துள்ளனர். நிறைய முன்னுதாரணங்கள் உள்ளன கூட்டணி சேர்ந்ததும் இவர்களே ‘நாடு காக்க வாள், துப்பாக்கி ஏந்தும் வீரர்கள்’ என்று கருத்து கூறிவிட்டால் போச்சு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement