Advertisement

எம்.பி., ரயில் டிக்கெட்டில் விதிகளை மீறி பயணம்!

''பிறந்த நாள் அன்னைக்கு, பண்ணை வீட்டுல போய் பதுங்கிட்டாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அந்தோணிசாமி.

''யாரு வே...'' என விசாரித்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''மாஜி மத்திய அமைச்சர் அழகிரிக்கு, போன, 30ம் தேதி பிறந்த நாள்... வழக்கமா, மதுரை தயா திருமண மண்டபத்துல, ஆதரவாளர்கள் புடைசூழ, ஆர்ப்பாட்டமா பிறந்த நாளை கொண்டாடுவாருங்க... அங்க, பிரியாணி விருந்தும் அமர்க்களப்படும்...''கருணாநிதி இறந்ததால, இந்த வருஷம், பிறந்தநாள் கொண்டாட்டத்தை, அழகிரி தவிர்த்துட்டார்... சத்தமே காட்டாம, புறநகர்ல இருக்கிற, தன் பண்ணை வீட்டுக்கு போயிட்டாருங்க... ''அவரோட மிச்ச சொச்ச ஆதரவாளர்கள் மட்டும், ஒரு சில இடங்கள்ல, சிம்பிளா போஸ்டர் ஒட்டி, கதையை முடிச்சுக்கிட்டாங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''மதுரை, பா.ஜ.,வினர் பூரிச்சு போயிட்டாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''முத்ரா வங்கி திட்டத்துல, கடன் வாங்கி, 'இ - மார்க்கெட்டிங் பிசினஸ்' செய்யற, மதுரை பெண் அருள்மொழி பத்தி, போன வருஷம், தன் ரேடியோ பேச்சுல, பிரதமர் மோடி சுட்டிக் காட்டியிருந்தார்... சமீபத்துல, மதுரைக்கு வந்த மோடி, அருள்மொழியை வரவழைச்சு பேசினாரு பா...''இதைப் பத்தி, மதுரையில இருந்து கொச்சிக்கு விமானத்துல பறக்குறப்பவே, தன், 'டுவிட்டர்' பக்கத்துலயும் குறிப்பிட்டிருந்தார்...

''டில்லிக்கு போனதும், தன் முகநுால் பக்கத்துலயும், அருள்மொழியை சந்திச்சதை பத்தியும், அவங்களிடம், பிரதமர் அலுவலகமே, 'பிளாஸ்க்' கொள்முதல் செஞ்சது பத்தியும் குறிப்பிட்டிருந்தார்... 'நம்ம ஊர் பெண்ணுக்கு பிரதமர் தர்ற முக்கியத்துவத்தை பார்த்தீங்களா'ன்னு மதுரை, பா.ஜ.,வினர் குஷியில இருக்காங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''எம்.பி., பெயர்ல, முதல் வகுப்புல போனவங்களை ஒண்ணுமே செய்ய முடியலையாங்ணா...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் கோவை, கோவாலு.''எந்த ஊர்ல ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''போன வாரம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்ல, திருநெல்வேலியில இருந்து சென்னைக்கு, முதல் வகுப்பு, 'ஏசி' பெட்டியில, அ.தி.மு.க., - எம்.பி., ஒருத்தருக்கும், உதவியாளருக்கும் டிக்கெட் புக் பண்ணியிருந்தாங்களாமா... ''டி.டி.இ., போய் செக் பண்ணி பார்த்தாக்கா, எம்.பி., வராம, வக்கீல் ஒருத்தரும், கட்சி பிரமுகர் ஒருத்தரும் பயணம் செஞ்சாங்ணா...

''அதனால, ரெண்டு பேருக்கும் அபராதம் போட்டு, கட்ட சொன்னாப்லையாமா... அவங்க, 'கட்ட முடியாது'ன்னு சொல்லிப் போட்டாங்க... டி.டி.இ., மதுரையில இருக்கிற, ரயில்வே வணிக பிரிவு அதிகாரிகளுக்கு தகவலை சொன்னாருங்ணா...

''மதுரை வந்ததும், வணிகப் பிரிவு அதிகாரிகள், ரயில்ல ஏறி, அபராதம் கட்டும்படி சொல்லியிருக்காப்புல... ரெண்டு பேரும், 'ஒரு பைசா கூட கட்ட முடியாது'ன்னு சொல்ல, அதிகாரிகளும் எறங்கி போயிட்டாங்களாமாட்டு...'' என, முடித்தார் கோவாலு.

''வாரும் ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி... துாத்துக்குடி போயிட்டு எப்ப வந்தீரு...'' என, நண்பரிடம் அண்ணாச்சி, 'கதை' பேச, மற்றவர்கள் புறப்பட்டனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மதுரை தொகுதியை பிள்ளைக்கு வாங்கிக்கொடுக்கறதுக்கு உறவினர்கள் மத்தியிலே பேச்சுவார்த்தை நடப்பதால் அமுக்கி வாசிக்கிறாரோ என்னமோ

 • Bhaskaran - Chennai,இந்தியா

  ரொம்ப நேர்மையான வங்காலை தேர்ந்தெடுத்தால் இப்படித்தான் இந்தமாதிரி எம்பியை தேர்ந்தெடுக்க மக்கள் ரொம்பவும் கொடுத்துவச்சுருக்கணும் அடுத்தமுறை 2g அம்மா நிக்கறாங்கோ

 • A R J U N - ,இந்தியா

  ....அதனால, ரெண்டு பேருக்கும் அபராதம் போட்டு, கட்ட சொன்னாப்லையாமா... கீழ்த்தரமான மனிதர்கள்..இதனை RAILWAY MINISTER knowledge கு கொண்டுசெல்ல வேண்டும்...

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இந்த மாதிரி ‘ஒட்டுப் பிடித்து’ சலுகைக்குப் பார்ப்பவர்களை அந்தக் குறிப்பிட்ட எம். பி யிடம் காட்டிக்க்கொடுத்து அவர் மூலம் (அவர் மட்டும் நேர்மையாக இருந்தால் ?) வசூலிக்கலாம் நடக்குமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement