Advertisement

புரட்சி பூத்தாலும் அபாயம் உண்டு!

இந்தியாவில் மொபைல் போன் புரட்சி வந்து விட்டது. அதிலும், 110 கோடிக்கும் அதிகமாக மொபைல் என்பது நிதர்சனமாகி விட்டது. அதன் அடையாளமாக சில மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத் தயாரிப்புகளை நம் நாட்டில் அதிகரிக்க துவங்கி விட்டன.அதிலும், இணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் போன் என்பது, வாழ்க்கையில் இன்றியமையாத சாதனமாக மாறி வருகிறது.அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஓரளவு அதை இயக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் தங்கள் வசதிக்கு ஏற்ப, அதன் பயனை அனுபவிப்பர். நாடகம், திரை என்ற காலத்திற்கு அடுத்ததாக எதை வேண்டுமானாலும் அறியலாம் என்ற வசதி, மிகவும் வித்தியாசமானது. இணையதள வசதி என்பது, இளைஞர்களை கட்டிப்போடும் ஓர் அபார சக்தி.இந்தியாவில், அதிக அளவு ஸ்மார்ட் போன் வசதி இமாச்சலில் இருக்கிறது. தமிழகத்தில் இரண்டாவதாக இருப்பதாக, ஒரு தனியார் முன்னணி நிறுவன கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது. கேரளா கூட இதில் பின்தங்கி விட்டது. தமிழகத்தில், சிற்றுார் அல்லது வளர்ந்த ஊராட்சிகளில் கூட, 'வை - பை' வசதி என்பது குடும்பத்தினரையும், நண்பர்களையும் அதிகமாக இணைக்கும் சாதனமாகி விட்டது.சிறுவயது குழந்தை விளையாட்டு சாதனம் முதல், பெரியவர்கள் சினிமா அல்லது விரும்பியதைப் பார்க்க, கையில் மொபைல் இருந்தால் போதும். அதனால், இப்போது வானொலி அல்லது, 'சிடி' மூலம் விரும்பியதை கேட்ட காலம் மலையேறி விட்டது.அதே சமயம், மொபைல் வசதியை கையாளும் அதிக வசதியில்லாதவர்கள், 'ரீசார்ஜ்' என்ற முறையில் மிகக்குறைவாக, 35 ரூபாய் வரை கூட அதை இயக்குகின்றனர். ஆனால், அந்தக்கட்டணத்தை உயர்த்த மொபைல் கம்பெனிகளான ஏர்டெல் மற்றும் வோடோபோன் சிந்திக்கின்றன.எப்போதும் ஒரு பெரிய புரட்சிகர மாற்றம் வரும்போது, அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் பின்னர் தான் அளவிடப்படும். சீனாவில் ஜனநாயகம் என்பது கிடையாது. அதனால் அங்கு, 'வாட்ஸ் ஆப்' போன்ற தகவல் பரிமாற்றங்களில் முழு சுதந்திர வீச்சு கிடையாது. அதை அம்மக்கள் ஏற்கத்தான் வேண்டும்.நம் நாட்டில் அப்படி அல்ல; எல்லாவற்றிற்கும் அளவு கடந்த சுதந்திரம் அல்லது அதைத்தாண்டி, நீதிமன்றம் அல்லது மற்ற சட்ட நடைமுறைகளில் விடிவு உள்ளன.மொபைல் போன் பையில் இருப்பதால், அதன் கதிர்வீச்சு அபாயம் அல்லது படுக்கை அருகே இருந்தால் அபாயம் என்ற கருத்துகளுக்கு, இன்னமும் விஞ்ஞான பூர்வ ஆதாரம் முழுவதும் வரவில்லை.ஆனால், கம்ப்யூட்டர் கேம்ஸ், மொபைலில் சில பொழுது போக்கு ஆகியவை ஆபத்தானவை. படித்த சிலர், மொபைலில் ஏதாவது பார்த்து மணிக்கணக்காக செலவிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக, சர்வதேச அளவில் சில புதிய மன அழுத்த பாதிப்பு நோய்கள், குறித்த கருத்துகள் ெவளியாகி உள்ளன. அதை, உலக சுகாதார அமைப்பு ெவளியிட்டு, வருங்கால இளைய சமுதாயம் செல்லும் பாதையை எச்சரித்திருக்கிறது.இதில், ஜப்பான் நாட்டில் உரிய கணக்கெடுப்பும், அதில், 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக கண்டறியப்பட்டிருக்கிறது. விளையாட்டு என்பது போதையாகி, 20 வயதுடையவர்கள், இதில் உள்ள, 100 விளையாட்டு ரகங்களில் மணிக்கணக்காக மூழ்கி, மனநலம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எப்படி கவுன்சிலிங் தந்தால், எதிர்காலம் பாழாகாது காக்கலாம் என்பது சவால் என்கிறது ஜப்பானிய அரசு. இரவு என்றும் பகல் என்றும் மணிக்கணக்காக மூழ்கி இருப்பவர்களை காக்க, மனநல மருத்துவர்கள் புதிய யுக்திகளை கண்டறிய முயற்சிப்பதாக அத்தகவல் கூறுகிறது.'இ - ஸ்போர்ட்ஸ்' என்பது சிலருக்கு அவர்கள் ஏற்கனவே அறிமுகமான விளையாட்டில் ஈடுபாடு கொள்ள வைக்கிறது என்றாலும், பலரை செயலாக்கம் இன்றி, மணிக்கணக்காக கட்டிப்போட்டு, இயங்க விடாமல் செய்யும் அபாயம் அதிகம் என்கிறது ஒரு ஆய்வு.ஆகவே, 'மொபைல் புரட்சி' என்பது அமெரிக்கா, ஐரோப்பாவின் சில நாடுகளில் வளர்ந்த சமூக அக்கறைக்கான சட்டங்கள் உதவுவதைப் போல, நம் நாட்டிலும் வரவேண்டும். இல்லா விட்டால், கல்லுாரியில் நுழையுமுன், இந்த பொழுது போக்கு விளையாட்டுகள் மிகவும் ஆபத்தான இளைய சமுதாயத்தை உருவாக்கலாம். அது மட்டும் அல்ல; அது, ஒரு புதிய சமூகப் பிரச்னையாகிவிடும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement