Advertisement

காலத்தால் அழியாத காவியம் படைத்தவர்!இன்று எம்.ஜி.ஆர்., பிறந்த நாள்

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்'
இதை உண்மைப்படுத்தியவர்கள் உண்டா என சிந்தனையை ஓட
விட்டபோது கிடைத்த பெயர்தான் மருதுார் கோபாலன் மேனன் ராமச்சந்திரன்.


ஆனால் மக்கள்உச்சரித்தது எம்.ஜி.ஆர்.,! இலங்கை கண்டியில் 1917 ம் ஆண்டு ஜன.,17ல் பிறந்தார். 1977 - 87 வரைதமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்தார்.இவரும், சகோதரர் சக்ரபாணியும் தாயார் சத்யாவின் அரவணைப்பில் வளர்ந்தனர். கண்டியில் இருந்து சென்னைக்கு குடியேறினர். வறுமை வாட்டியது. தங்கள் குடும்பவறுமையை விரட்ட இருவரும் நாடக கம்பெனியில் சேர்ந்து நடித்தனர். அதில் கிடைத்த அனுபவத்தால் எம்.ஜி.ஆருக்கு இசை ஞானம் உண்டு. இதன்காரணமாகதான் தனது படங்களின் பாடல், இசையில்கவனம் செலுத்தினார். அவை 'ஹிட்' ஆக இதுவும் ஒரு காரணம்.

எல்லாவற்றையும்விட அவரது புகழுக்கு காரணம், அவர் கடைபிடித்த மனிதநேயம்தான். சம்பாதித்த பணத்தை தகுதியான, இல்லாதோருக்கு வாரி வழங்கி சந்தோஷப்பட்டவர் எம்.ஜி.ஆர்., சிறு வயதில் 6 காசுக்கு விற்ற அரிசி புட்டுவை வறுமையால் வாங்க முடியலையே என எண்ணியதால்தான் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வராக இருந்தபோது அரிசி விலையை சீராக வைத்திருந்தார். புகழின் உச்சக்கட்டத்தில் இருந்தாலும் சிறுவயதில் தான் தான் பட்ட கஷ்டங்களை மறக்காமல் பண்பாட்டுடன் வாழ்ந்ததால்தான் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் வாழ்வார்.

மனிதநேயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு


சிறந்த எழுத்தாளராக இருந்தவர் டி.வி. ரங்கசாமி. சுருக்கமாக 'ரகமி' என்பார்கள். அக்காலத்தில் களஆய்வு செய்து ஆதாரப்பூர்வமாக ஆவணங்களை சேகரித்து அதன் அடிப்படையில் உண்மைத்தன்மையுடன் எழுதுபவர்.மணியாச்சி ரயில் நிலையத்தில் கலெக்டர் ஆஷ் துரையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சுதந்திர போராட்ட தியாகி வாஞ்சிநாதன் பற்றி ஒரு தொடர் எழுதினார்.எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இத்தொடரை படித்து அவ்வப்போது கணவருடன் பகிர்ந்து வந்தார்.


வாஞ்சிநாதன் குடும்பத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் எனக்கருதிய எம்.ஜி.ஆர்., நெல்லை கலெக்டர் பிந்துமாதவனிடம் விசாரிக்க சொன்னார்.வாஞ்சிநாதன் பரம்பரையில் உடன்பிறந்த சகோதரர் கோபாலகிருஷ்ணன் இருப்பதும், அவரது மகன் ஹரிஹர சுப்பிரமணியன் விவசாயத்துறையில் வேலை செய்து வருவதும் தெரிந்தது. கோபாலகிருஷ்ணனுக்கு மாதம் 500 ரூபாயும், அமைச்சர்களுக்கு நிகரான இலவச மருத்துவ வசதியும் வழங்க எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். மேலும் வாடகை வீட்டில் அவர்கள் வசித்ததால், தனது சொந்த பணம் 50 ஆயிரம் ரூபாயை கொடுத்து வீட்டு வசதி வாரியத்தில் ஒரு வீட்டை ஒதுக்கினார்.


கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினர் இன்றும் எம்.ஜி.ஆரை நன்றியுடன் நினைவு கூர்ந்து அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுஎம்.ஜி.ஆரின் மனிதநேயத்திற்கும், சுதந்திர போராட்ட தியாகிகளை மதிக்க வேண்டும் என்ற உணர்வுக்கும் எடுத்துக்காட்டு.

தொழிலாளர்களின் தோழன்

அக்காலத்தில் சென்னையில் போக்குவரத்திற்கு அதிகம் பயன்பட்டது டிராம் வண்டியும், கை ரிக் ஷாவும். பயணிகளை உட்கார வைத்து கையால் ரிக் ஷாவை இழுத்துச்செல்வர். ஒருமுறை
நல்ல மழை. படப்பிடிப்பு முடிந்து காரில் தனது ராமாவரம் தோட்டத்து வீட்டிற்கு எம்.ஜி.ஆர்., திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது கொட்டும் மழையில் பயணியை அமரவைத்து தொழிலாளி ஒருவர் ரிக் ஷாவை இழுத்துச்செல்வதை பார்த்தார். உடனே தனது செலவில் சென்னையில் உள்ள அனைத்து ரிக் ஷா தொழிலாளர்களுக்கும் மழைக்கோட்டு வழங்கினார். உண்மையான மனிதநேயம் இருந்தால்தான் இப்படி சிந்தித்து உதவ முடியும். தொழிலாளர்களின் தோழனாகவும் இருக்க முடியும்.

பெருமிதம் கொண்டவர்

முதல்வராக இருந்தபோது மதுரையில் உலகத்தமிழர் மாநாடு நடந்தது. அப்போது மதுரையில் தமிழர் கலாசாரத்தை நினைவூட்டும் தோரண வாயில்களும், தமிழறிஞர்களின் சிலைகளும் நிறுவினார். இம்மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டவர் தங்க கட்டப்பட்டதுதான் இப்போதைய தமிழ்நாடு ஓட்டலும், மதுரை காமராஜ் பல்கலை புலத்துறை விருந்தினர் இல்லமும்.ஓட்டல் தமிழ்நாட்டிற்கு முன்பு இருந்த பெயர் ஓட்டல் ராஜராஜசோழன். இங்கு தங்கி மாநாட்டிற்கு வந்தவர்கள் 'ஓட்டல் ராஜராஜ சோழனில் தங்கினேன்' என்றனர்.


இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., 'ஓட்டல் தமிழ்நாடு' என்று பெயரை சூட்டினால், தமிழ்நாட்டின் பெயரை உச்சரிப்பார்கள் எனக்கருதி 'ஓட்டல் தமிழ்நாடு' என பெயரை மாற்றினார். தமிழ்நாடு என்று சொல்வதில் பெருமிதம் அடைந்தார்.மதுரை பல்கலையில்மதுரை காமராஜ் பல்கலையின் முதல் துணைவேந்தர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். இவருக்கு ஒரு சிலை நிறுவி,
பல்கலை நுாலகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என 1984ல் அப்போதைய துணைவேந்தர் ஜெ. ராமச்சந்திரன் முடிவு செய்து திறப்பு விழாவிற்காக எம்.ஜி.ஆரை அணுகினார்.


செப்.,18ல் வருவதாக எம்.ஜி.ஆர்., ஒப்புதல் அளித்தார். அந்த நாளும் வந்தது. பல்கலையே விழா கோலம் பூண்டிருந்தது. காலையில் நடக்கவிருந்த விழா மாலை 5:00 மணிக்கு மாற்றப்பட்டது. மாலை 4:00 மணிக்கு பெரும் மழை. விடவே இல்லை. எம்.ஜி.ஆர்., மாலை 5:30 மணிக்கு வந்தார். சிலை திறப்பிற்கான மின் சுவிட்ச் மழையில் நனைந்திருந்தது. 'ஷாக்' அடித்தால் என்ன செய்வது என எல்லோரும் முகத்திலும் அச்சம் நிலவ, ஒருவர் தனது தோல் பையை அதன் மீது போட, முதல்வர் சுவிட்சை அழுத்த சிலை திறந்தது. உடனே அவரை தட்டிக்கொடுத்து பாராட்டினார்.
மனிதநேயம், பிரதிபலன் பாராமல் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவது, வாழ்க்கையில் தன் தாயை தெய்வமாக வழிபட்டது என எம்.ஜி.ஆரின் வாழ்க்கை இக்கால இளைஞர்களுக்கு வழிகாட்டும்.

- கே.கருணாகரபாண்டியன்
வரலாற்று ஆய்வாளர்
மதுரை. 98421 64097.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (9)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  தேசிய எழுத்தாளர் ரகமி பாரதி திரைப்படம் திரையரங்கில் பார்க்கும்போது உயிர்நீத்தார் என்று படித்துள்ளேன் நல்ல திறமைவாய்ந்த எழுத்தாளர் நேரில்சந்தித்துப்பேசியுள்ளேன் .புரட்சித்தலைவரை பற்றி பேசுவதற்கு நாட்கள்போதாது மனிதநேயத்தின் மறு உருவம் நடிகரான ஆரம்ப நாட்களில் .வித்வான் லட்சுமணனிடம் அடிக்கடி சொல்வாராம் கோடிரூபாய்க்குமேல் சம்பாதிக்கணும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கணும் இலவசமாக சாதிவித்யாஸம் பார்க்காமல் அணைத்து ஏழைகளுக்கும் கல்வி கொடுக்கணும் என்று இன்று கல்வியை விற்கும் கல்வித்தந்தைகள்தான் இருக்கின்றனர்

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  இவர் ஆட்சியில்,ஏழைகள் கஷ்டப்பட்டதில்லை என்று சொல்கிறார்கள். பெரிய ஹோட்டல்களில் கூட ஜனதா சாப்பாடு என்று இரண்டு ரூபாய்க்கு, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கண்டிப்பாக மதியம் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் போட்டதாக என் தந்தை சொல்வார். அப்பேற்பட்ட தலைவரும் இப்போது இல்லை, தொண்டர்களும் மாறிவிட்டார்கள்.

 • Gopi - Chennai,இந்தியா

  காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டைத்தை அவர்கள் கட்சிக்காரர்கள் கேலி செய்து இது எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்கும் என்று எண்ணிக் கொண்டுஇருந்தனர். அந்த திட்டத்தை மாற்றம் செய்து சத்துணவு திட்டமாக மாற்றியபோது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் சர்க்கார் அதற்கான திட்டத் தொகையை இழுத்தடித்த போதிலும் அந்த திட்டத்தை வெற்றிகரமாக செய்து காட்டி இன்று பிற மாநிலங்கள் மட்டும் அல்லாது உலகளவில் ஏற்று கொள்ளப்பட்ட சிறந்த திட்டமாக உள்ளது. இதை போன்றே ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட மழை நீர் சேகரிப்பு, கோவில்களில் அன்னதான திட்டம், குறைந்த விலையில் அம்மா உணவகங்களில் தரமான உணவு, குழந்தை தொட்டில் திட்டம், போன்றன. ஒவ்வொரு முறை புரட்சி தலைவரின் வாழ்வை அலசும் போது எங்கேனும் அவர் உதவி செய்யாத மனிதர்களே இல்லை என்னும் அளவிற்கு எதிரிக்கும் நன்மை செய்திருப்பார்.

 • சுந்தரம் - Kuwait,குவைத்

  மனது முழுதும் மனிதம் நிரம்பிய மாமனிதர் இவர்.

 • dandy - vienna,ஆஸ்திரியா

  மறந்தும் புகை பிடித்தல் ..மது அருந்தும் காட்சிகளில் நடிக்காமல் ..நல்ல வழி காட்டியவர் ...ஹி ஹி இப்பொது புகை பிடிப்பவன் தான் சூப்பர் ஸ்டார்

 • dandy - vienna,ஆஸ்திரியா

  இன்னும் 1000 வருடங்களுக்கு பின்னரும் இந்த மனிதர் பற்றி பேசுவார்கள் ..இடையில் வந்த தவில் .. நாதஸ்வரம் கூட்டம் எல்லாம் காலத்தில் கரைந்து மறைத்து விடும்

 • Siva - Chennai,இந்தியா

  தமிழ் திரை உலகிலிருந்து அரசியலுக்கு வந்து கீழ் தட்டு மக்களுக்கு சேவைகள் செய்த உண்மையான பொன்மன செம்மல் .

 • oce - tokyo,ஜப்பான்

  எம்ஜிஆர் படைத்த உலக தத்துவங்களில் சில: வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உய,ர்வு OUR LIFE IS WHAT OUR THOUGHTS MAKE IT புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தமது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு ஒரு மனிதன் உயர வேண்டுமானால் முதலில் தூய எண்ணங்களையும் பிறருக்கு உதவுகின்ற இரக்க குணம் கொண்டவனாகவும்இருக்க வேண்டும் என்ற உண்மையினை உணர்ந்தவர். M.G.R was an ardent congress man and a stickler for khadi till he joined DMK in 1952 He was captivated by the ideals and the torrential eloquence of ANNA. HE had played a major role in the development of DMK. He was the party's foremost propagandist and trump card winning for the DMK an unbelievable triump.in the 1967 Tamil Nadu Assembly Elections. He had a tryst with destiny when he was shot at on 12.01.1967 and was admitted in hospital in a grave condition he could not take part in the electioneering. As a result the DMK flashed huge cutouts of MGR with a bandage round his neck in nooks and corners of Tamil Nadu beseeching the people to give a mandate to the DMK which earned 143 Assembly Seats. அன்று உலகம் வியக்க நாடாண்ட நாயகனை ராஜாதி ராஜனை மன்னாதி மன்னனை தாய் சொல்லை தட்டாத தலை மகனை தாய்க்கு பின் தாரமெனக்கொண்ட குடும்ப தலைவனை தனிப்பிறவியை என்றும் மணக்கும் தாழம்பூவை அமைதி காக்கும் மாடப்புறாவை நீதிக்கு பின் பாசம் கொள்ளும் அரச கட்டளையை தர்மம் தலை காக்க தக்க சமயத்தில் உயிர்காக்க நல்ல நேரத்தை காதல் வாகனத்திலே தேர்த்திருவிழா எடுத்து பரிசு பெற்ற முகராசியுள்ள சபாஷ் மாப்பிள்ளையை பட்டிக்காட்டு பொன்னையனை மாட்டுக்கார வேலனை தீமைகளை விரட்டியோட்டும் வேட்டைக்காரனை காஞ்சித்தலைவனை விளை நிலம் காக்கும் விவசாயியை ஆண்டவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளியை குமாரிகளும் கன்னித்தாய்மார்களும் கலையரசிகளும் அடிமைப்பெண்களும் ராணி சம்யுக்தைகளும் இதயத்தில் வைத்து வணங்குகின்ற கூண்டுக்கிளியை பசியறிந்து பள்ளிப்பிள்ளைகளுக்கு அன்னமிட்ட கையை என் அண்ணன் எம்ஜி.ஆர் புகழை பல்லாண்டு வாழ்க வென வாழ்த்துகிறேன். வலிமைஉள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி -பிறர் வாழ உழைப்பவன் சொல்லுவதெல்லாம் சட்டமாகணும் தம்பி சிரிப்பவரெல்லாம் மகிழ்ச்சியினால் சிரிப்பது கிடையாது -பிறரை கெடுப்பவரெல்லாம் நிரந்தரமாக வாழ்ந்தது கிடையாது ஊசி முனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதடி -முத்தம்மா கட்டையிலும் வேகாதடி. எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு தன்கொரு கொள்கை அதற்கொரு தலைவன் தனக்கொரு பாதை அதற்கொரு பயணம் பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்து விடு -நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் புலரட்சி தலைவர் ஏற்கும் பாத்திரங்கள் எல்லாம் நல்ல போதனைகளைச்சொல்வதாகவே இருக்கும் தாய்க்குலத்தை பெருமை படுத்துபம் வகையில் உயர்வாக சித்தரிக்கப்பட்டிருக்கும். பீடி சிகரெட் பிடிப்பது மது குடிப்பது போன்ற காட்சிகளை அவர் படங்களில் பார்க்கவே முடியாது. சண்டைக்காட்சிகளில் கூட அவர் நேர்மையைக்கையாள்வார் மறைந்திருந்திருந்து தாக்குவதோ பின்புறமிருந்து தாக்குவதோ போன்ற ஸ்டண்ட் காட்சிகளை பார்க்க முடியாது எம்.ஜி.ஆர் படங்களை பார்த்துவிட்டுவீரமும் ஒழுக்கமும் படிப்பினையாக வளர்த்துக்கொண்ட ரசிகர்கள் பல லட்சக்கணக்கில் இருந்தனர். அவரகளது பாரம்பரியத்தினரே இப்போது நாட்டை சீரும் சிறப்புமாக ஆள்கின்றனர். படங்களில் மட்டும் அவர் நல்லவராக தோன்றியது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் அப்படியே வாழ்ந்து காட்டியவர். மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு இமயத்தினும் உயர்வானாதாக குவிநுத்து. த்

 • CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்

  "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களில் மனதில் நிற்பவர் யார்? / இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் செல்ல வேண்டும்" தனக்கு எழுதப்பட்ட பாடலுக்கு தானே இலக்கணமே வாழ்ந்து காட்டிய வள்ளல் என் அறிவுக்கு எட்டிய வரை முதல் பாரத பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவில் இருந்து இன்றைய பாரத பிரதமர் மோடி வரை எல்லோருடைய பாராட்டை பெற்ற ஒரே இந்திய முதல்வர் நம் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள் மட்டுமே

கருத்தைப் பதிவு செய்ய

  மேலும் செய்திகள் :

Advertisement