Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., துணை தலைவர், ஞானதேசிகன், மிகச் சரியாக அறிக்கை: ஒரு அரசின் ஸ்திர தன்மையை, ஒரு நொடியில் தகர்த்துவிட முடியும். இதில், எல்லா அரசியல் கட்சிகளும், மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரு விவகாரம், தன் அரசியல் லாபத்திற்கு உதவும் எனில், அதை ஆளும் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தால், நாளை அது, அரசியல் எதிரிகளால், அவர்களையும் தாக்கக்கூடும் என்பதை, உணர வேண்டும். கோடநாடு விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து கண்டறிய வேண்டும்.

தமிழக, காங்., தலைவர், திருநாவுக்கரசர் பேட்டி:தி.மு.க., - காங்., கூட்டணி வலுவாக உள்ளது. தேர்தல் அறிவித்த பின், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு குறித்து பேசுவோம். தற்போது, கட்சியின் தேர்தல் பணிகள் தொடர்பான குழுக்கள் அமைப்பது குறித்து, பேச்சு நடத்துகிறோம். தற்போதைய மத்திய, மாநில அரசை அகற்ற வேண்டும் என, தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர், அன்பழகன் பேட்டி: அ.தி.மு.க., அரசு, முறையான அரசாணை பெற்று, தமிழகத்தில் பாதுகாப்பாக, ஜல்லிக்கட்டை நடத்தி வருகிறது. மாட்டு பொங்கலன்று, மாடுகள் விடும் விழா, கரிநாள் அல்லது அதற்கு மறுநாள் கூளியாட்டம், தர்மபுரியில் நடப்பது வழக்கம்; இதற்கு தடை இல்லை. நடைமுறையில் இல்லாத ஜல்லிக்கட்டு, எருதாட்டத்திற்கு மட்டும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை பேட்டி: காங்., கட்சி தலைவர் ராகுலுக்கு, மிகப்பெரிய வரவேற்பு உள்ளதாக, சிலர் நினைக்கின்றனர். ஆனால், அவர்கள் கூட்டணி எனக் கூறிக் கொள்ளும் கட்சிகளுக்குள் கூட, அவருக்கு சரியான வரவேற்பு இல்லை.

உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத் பேச்சு: ராமர் கோவில் விவகாரத்திற்கு தீர்வு காணும் சக்தி ஒன்று உண்டு என்றால் அது, பா.ஜ.,வாகத்தான் இருக்க முடியும். அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தை பிரச்னையாக மாற்றியவர்களால், அதற்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் பேட்டி: எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி என்பது, கேலிக்கூத்தாக மாறி வருகிறது. அந்தக் கூட்டணிக்கு, மக்கள் நலனில் அக்கறை கிடையாது; கொள்கை, கோட்பாடுகளும் கிடையாது.

காங்., தலைவர் ராகுல், 'டிவிட்டரில்' கருத்து பதிவு: இந்திய விமான துறையில் இருந்து, 30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி, அனில் அம்பானிக்குக் கொடுத்துவிட்டார்; சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து, அலோக் வர்மாவை இருமுறை நீக்கி இருக்கிறார்; இவை, மோடி தன் பொய்களிலேயே சிக்கிக் கொண்டிருப்பதை, தெளிவாகக் காட்டுகிறது. மோடியின் மனதில் இப்போது, அச்சப் புயல் வீசுகிறது; அவரால், துாங்க முடியாது.

தி.மு.க., - எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம் பேச்சு:தோல்வி பயத்தால், ஆளும், அ.தி.மு.க., அரசு, உள்ளாட்சி தேர்தலை நடத்தாது. தேர்தல் நடக்காததால், மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு விளக்குகள் தேவையை, நிறைவேற்ற முடியவில்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement