Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சர்,பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: தி.மு.க.,- - -காங்கிரஸ் கூட்டணியை, மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். 'கூடா நட்பு கேடாய் முடியும்' என, மறைந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதியே கூறியிருக்கிறார். லோக்சபா தேர்தலுக்கு பின், இது, உறுதிப்படுத்தப்படும்.
இ.கம்யூ., மாநில செயலர், முத்தரசன் பேட்டி: கோடநாடு விவகாரத்தில், 'தெகல்கா' வெளியிட்ட செய்திக்கு, தெளிவான விளக்கமளிக்க வேண்டியது, முதல்வரின் கடமை. ஆனால், முதல்வர் பழனிசாமி கோபமடைந்து, மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். தன் மீதான களங்கத்தை துடைக்க, அவர், முதல்வர் பதவியில் இருந்து விலகி, உண்மையைநிரூபிக்க வேண்டும்.

அ.தி.மு.க., துணைஒருங்கிணைப்பாளர், முனுசாமி பேட்டி: கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், 20 முறைக்கு மேல், நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். அப்போதெல்லாம் பேசாத ஸ்டாலின், புலனாய்வு பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி அளித்த பின், பேசத் துவங்கி உள்ளார்.
ஆட்சியை கவிழ்க்க சிலர் திட்டம் தீட்டியும், முதல்வர், துணை முதல்வரின் சிறப்பான நிர்வாகத்தால், அது நிறைவேறவில்லை. எனவே, குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலினின் கனவு, ஒருபோதும்பலிக்காது.தமிழக மின் துறை அமைச்சர், தங்கமணி பேச்சு: பொங்கலுக்கு, 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதை பொறுக்க முடியாமல், எதிர்க்கட்சிகள் வழக்கு போடுகின்றன. ஜெயலலிதாவுக்குப் பின், இந்த ஆட்சி போய் விடும் என, நினைத்தனர். ஆனால், இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து, மக்கள் ஆட்சி நடக்கிறது. தேர்தல் வரவுள்ள நிலையில், இதுபோன்று கூறி வருகின்றனர். மக்களுக்கு, உண்மை நிலைமை தெரியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement