Advertisement

நாகரிக உணவு முறையே நோய்க்கு காரணம்!

சென்னை, கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் பகுதியில், 'ஆரோக்கிய விலாஸ்' இயற்கை உணவகத்தின் உரிமையாளர், பெருமாள்: இயற்கை விவசாயம், பாரம்பரிய உணவு முறை ஆகியவற்றுக்காக உழைத்தவர்களில் முக்கியமானவர், இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார். அவர் மேல் ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக, இந்த உணவகத்தைத் துவங்கினோம்.இந்த உணவகத்துக்கு, வயதானவர்கள் மட்டும் தான் வருவர் என்று எண்ணினோம். ஆனால், எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர், 18 - 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான். இயற்கை உணவு முறையை கைவிட்டு, நாகரிக உணவு முறைக்கு மாறியது தான், இன்று பெருகி இருக்கும் நோய்களுக்கு முக்கியக் காரணம். பெரு நகரங்களில், இது குறித்த விழிப்புணர்வு தற்போது பெருகி வந்தாலும், அனைத்து தரப்பினருக்கும் உணர வேண்டியது அவசியம். அதற்கான முயற்சி தான் இது. ஆரம்பத்தில், 12 ஆயிரம் ரூபாய் தான் முதலீடு செய்தோம். தொடர்ந்து வியாபாரம் பெருக ஆரம்பித்தவுடன், உபகரணங்களுக்காக தற்போது, ௧ லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளோம்; இந்தப் பணமும், இந்த உணவகத்தின் மூலம் சம்பாதித்தது தான். தற்போது, 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறோம். என் தாய் மற்றும் மனைவியும், எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
l மனைவி ஜெயலட்சுமி: நாங்கள் பெரிய லாபத்தை எதிர்பார்த்து, இந்த உணவகத்தை ஆரம்பிக்கவில்லை. ஆனால், எதிர்பார்த்ததைவிட, அதிகமாகவே வாடிக்கையாளர்கள் வருகின்றனர். அதனால், லாப நோக்கு இல்லாமல், தரமான உணவுகளைத் தயாரித்து கொடுத்து வருகிறோம்.நவதானிய சுண்டல், கொழுக்கட்டை, சுக்கு காபி உட்பட, ஆறு வகையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறோம். காலை, 6:00 முதல், 10:00 மணி வரையும், மாலை, 4:00 முதல், 9:00 மணி வரையும், வியாபாரம் இருக்கும். அடுத்து, இன்னும் நிறைய பாரம்பரிய உணவுகளை தயாரிக்கலாம் என்ற எண்ணம் உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement