Advertisement

பருத்தி உடை அணிவது தான் சிறந்தது!

பிரசவித்த பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்கும், மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா: பாலுாட்டும் தாய், குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட்டால், குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படும் என சொல்லப்படுவதில், உண்மை இல்லை.அம்மாக்கள் சாப்பிடும் உணவு செரித்த பின், அதன் சத்துகள் தான், தாய்ப்பாலின் மூலமாக குழந்தைக்கு சென்றடையும் என்பதால், குழந்தையின் செரிமானத்துக்கும், அதற்கும் எந்தசம்பந்தமும் இல்லை.

பாலுாட்டும் பெண்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டியது அவசியம்.மலக்கட்டுப் பிரச்னையை ஏற்படுத்தும், 'ஜங்க் புட்ஸ், பிஸ்கட், பிரெட்' போன்ற உணவுகளை, பிரசவம் முடிந்த, முதல், 15 நாட்களுக்கு தவிர்த்து விடுவது நல்லது. நிறைய தண்ணீர், பழச்சாறு, சூப் அருந்துவது, பால் சுரப்பைச் சீராக வைத்திருக்கும்.

தளர்வான பருத்தி ஆடைகளே, பாலுாட்டும் தாய்க்கு நல்லது. வேலைப்பாடுகள் உடைய ஆடைகள், குழந்தையைத் துாக்கும் போது, அதன் மென்மையானசருமத்தை உரசி, பதம் பார்க்கும்.வீட்டில், 'பீடிங் நைட்டி'யும், வெளியே செல்லும்போது, 'பீடிங் குர்தி'யும் அணிவது, பாலுாட்ட வசதியாக இருக்கும். இரவெல்லாம் விழித்திருந்து, குழந்தைக்குப் பாலுாட்டுவது, தொட்டில் ஆட்டுவது, ஈரத்துணிகளை மாற்றுவது போன்ற பொறுப்புகளால், தாயின் துாக்கம் பறிபோகும். உறக்கமின்மையால் கோபம், பசியின்மை போன்றவை ஏற்படும்.

அடுத்தகட்டமாக, மன அழுத்தகம் கூட ஏற்படலாம் என்பதுடன், பால் சுரப்பும் குறையலாம். இவற்றையெல்லாம் தவிர்க்க, குழந்தை உறங்கும் போதெல்லாம் தாயும் உறங்கி, ஓய்வெடுக்கவேண்டும்.பார்க்க வருபவர்கள் அனைவரும், குழந்தையை துாக்குவதை, கன்னத்தை கிள்ளி கொஞ்சுவதை, முத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில், குழந்தையை ஒருவரின் கைகளில் தர நேர்ந்தால், முன்னதாக அவர் கைகழுவ, 'ஹேண்ட் சானிட்டைஸர்' பயன்படுத்த வைக்கவும். வீட்டில் இருக்கும் நேரங்களில் குழந்தைக்கு, 'டயப்பர்' பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.குழந்தையின் உடைகளை நன்கு அலசி, வெயிலில் உலர வைத்து பயன்படுத்தவும்.

பிரசவத்துக்கு பின், குறைந்தது ஆறு மாதங்களுக்காவது மருத்துவர் பரிந்துரைத்த கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்வது அவசியம்.குழந்தை பிறந்த, 15 நாட்களுக்குப் பின், மகப்பேறு மருத்துவரிடம், ஒரு, 'செக்கப்' செய்து கொள்ளவும்.மன அழுத்தத்துக்கு, தாய் உள்ளானால், 'கவுன்சிலிங்' பெறுவது நல்லது; குறைந்தது இரண்டு மாதங்களுக்கு,தாம்பத்யத்தைத்தவிர்க்கவும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement