Advertisement

ஓராண்டு ஆனாலும் கெட்டுப் போகாது!

மழைநீரை சேமித்து, குடிநீராக பயன்படுத்தி வரும், அரியலுார் மாவட்டம், கீழகாவாட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த, சண்முகசுந்தரம்: விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், நான். அதனால், விவசாயத்தில் ஆர்வம் அதிகம். 15 ஆண்டுகளுக்கு முன், இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வாரோடு அறிமுகம் ஏற்பட்டது. அதனால், பாரம்பரிய விவசாயம், மரபு மருத்துவம் என, என் கவனம் திரும்பியது.

என்னுடைய, ௦.5 ஏக்கர் நிலத்தில், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி எதுவும் போடாமல், விவசாயம்செய்கிறேன். ஆனால், சுற்று வட்டாரத்தில் ரசாயன விவசாயம் செய்வதால், பள்ளமான பகுதியில் உள்ள என் நிலத்திலும், மழைநீர் மூலமாக அந்தரசாயனங்கள் கலந்து விடுகின்றன.அதனால், வேறு இடத்தில், நண்பர்களோடு சேர்ந்து, இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறேன்.

இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனை எப்போதும் இருக்கவே, பச்சை நிறத்தில் ஆடை உடுத்தி வருகிறேன். 'மழை நீரில், உயிராற்றல் அதிகம். அதை குடித்தால், நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழலாம். கண் குறைபாடு வராது' என, நம்மாழ்வார், அடிக்கடி சொல்லி இருக்கிறார்.

அதனால், எங்கள் வீட்டில் உள்ள அனைவருமே, மழை நீரைத்தான் குடித்து வருகிறோம். 'மழை நீரைக் குடித்தால், சளி பிடிக்கும்' எனக் கூறுவர்; அது, தவறான கருத்து. எங்கள் அனுபவத்தில், அப்படி யாருக்கும் நடக்கவில்லை.பொதுவாக, தண்ணீரை சுட வைத்தால், அதன் சுவை மாறும். ஆனால், மழைநீரைக் கொதிக்க வைத்து குடித்தாலும், சுவை மாறாது.

அத்துடன், மழை நீரைக் கொதிக்க வைத்து தான் குடிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஒரு நாளுக்கு, 300 மி.லி., மழைநீரே, ஒருவருக்குபோதுமானதாக இருக்கும்.மழை நீரை குடிப்பதால், தாகம் எடுக்காது; உடலில் சோர்வு ஏற்படாது. அந்தளவு, அதில் தேவையான உயிர் சத்துக்கள் உள்ளன. மழை பெய்ய ஆரம்பித்ததும், மொட்டை மாடியில் உள்ள கழிவுகள் எல்லாம் அடித்து, குழாய் வழியாக கீழே வரும்.அதெல்லாம் நீங்கி, தண்ணீர் சுத்தமாக வரத் துவங்கியதும், பருத்தி துணியால் வடிகட்டி, பாத்திரங்களில் பிடித்து வைத்துக் கொள்வோம்.

வெயில் படாமல் வைத்திருந்தால், ஓராண்டு ஆனாலும் மழைநீர் கெட்டுப் போகாது; துர்நாற்றம் வராது.இயல்புத் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். மழைநீரை மட்டுமே குடித்து, எந்த உணவும் சாப்பிடாமல், பல நாட்கள் இருந்துஉள்ளேன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Gopi - Chennai,இந்தியா

    நன்று

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement