Advertisement

ஏதோ நடக்கிறது...

இலங்கை பார்லிமென்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பம், அந்நாட்டின் வளர்ச்சிப் பாதையை அடைக்கும் அபாயமாக மாறக்கூடும். இலங்கையின் ஜனநாயக ஆட்சி முறை, தமிழகத்தினரால் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியது.இலங்கையில் ஏற்படும் மாற்றங்களை, உலகளவில் வாழும் புலம் பெயர்ந்த தமிழ் தலைவர்கள் பேசினாலும், இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும், இதன் மாற்றங்கள் நிச்சயம் பேசப்படும்.ஏனெனில், மொத்தம் உள்ள, 225 எம்.பி.,க் கள் என்ன நினைக்கின்றனர்; அதில் உள்ள கட்சி தலைவர்கள் கருத்தும், பின்புலமும் என்ன என்பதை அறியாமல், அதிபர் சிறிசேன அவசரப்பட்டிருக்கிறார்.சிறிய நாடு, அங்குள்ள அதிபர் அதிகார நடைமுறை ஆதிக்கம் மற்றும் அடிக்கடி தேர்தல் வந்தாலும் கவலைப்படாத பெரும்பான்மையான மக்கள் என்பது மட்டும் இன்றி, புத்த மதம் என்பது, ஒரு ஆதிக்க சக்தியாக இருக்கிறது என்பதும் அபாயம்.ஆனால், இன்றைய சூழலில், முன்னாள் அதிபர் ராஜபக் ஷேவுக்கு, அதிபர் சிறிசேன அளித்த முக்கியத்துவம் மிக மோசமானது. மக்கள் வெறுத்தவரை ஆதரித்ததுடன், வடகிழக்கு மாநிலங்களில், தமிழர்கள் வாழ முடியாத நிலையை வேண்டுமென்றே, அவர் உருவாக்கியதை வரலாறு உணர்த்திய போதும், இலங்கை இறையாண்மையைக் காக்க, சிறிசேன எடுத்த வழி தவறானது.கிட்டத்தட்ட இரு மாதங்களாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை ஓரம் கட்ட, அதிபர் சிறிசேன செய்த முயற்சியை, அந்நாட்டு பார்லி மென்ட் ஏற்கவில்லை. ஆனால், அந்த பார்லிமென்டின் சபாநாயகர் ஜெயசூர்யா, முதலில் ராஜபக் ஷேயை தள்ளி விட்டது மட்டு மின்றி, அதற்கு அடுத்த திருப்பமாக ராஜபக் ஷேயையும், ரணிலையும், இரு எதிர்க்கட்சி தலைவர்களாக நியமித்ததில், அந்நாட்டு அரசியல் அமைப்பு செயல்படாமல் ஸ்தம்பிக்கும்.பிரதமரை நீக்குவது என்பது, பார்லிமென்ட் முடிவாகும் என, அந்நாட்டு அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. அதைவிட, ரணில் விக்கிரமசிங்கே தனக்கு பிடிக்காதவர் என்ற முறையில், அவர் எதிர்க்கட்சி தலைவர் என்ற முடிவை ஏற்க வேண்டிய கட்டாயம் சிறிசேனவுக்கு வந்ததும், அவரை நேருக்கு நேர் பார்க்கக் கூட தயங்கிஇருக்கிறார். புதிய உறவான ராஜபக் ஷேவுடன் சேர்ந்து ஆள முற்பட்டது, மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது.ஆனால், ரணில் விக்கிரமசிங்கே, மொத்தமுள்ள, 225 எம்.பி.,க்களில், பாதிக்கு மேல் தன்னிடம் கொண்டிருக்கிறார். கடைசியில், சிறிசேன முடிவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் சென்ற விக்கிரம சிங்கேவுக்கு, அபார வெற்றி கிடைத்திருக்கிறது. இதுவரை இலங்கையில், இம்மாதிரி பதவி மோதல்கள், கோர்ட் படிக்கட்டு வரை சென்றதில்லை. தவிரவும், ராஜபக் ஷே ஆதரவாளர்களும், விக்கிரமசிங்கே ஆதரவு, எம்.பி.,க்களும், சபையில் கைகலப்பில் ஈடுபட்டதும் நடந்திருக்கிறது.எந்த விக்கிரமசிங்கே, தன், யு.என்.பி., என்ற ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவை, சிறிசேன தலைமைக்கு, மூன்றாண்டுகளுக்கு முன் தந்தாரோ, இன்று அந்நிலை மாறி, இரு தலைவர் களிடமும், அதிக கசப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதில் முக்கியமாக, தமிழர் தேசிய கட்சித் தலைவர் சம்பந்தம், சபையில் தன் முக்கியத்துவத்தை இழந்திருக்கிறார்.கடைசியில், கண்டி தமிழர்களுக்கு வீடு கட்ட, இந்தியா அளித்த உதவி, வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் குடியேறிய தமிழ் மக்கள், தங்கள் உடைமைகளை சிறிது சிறிதாக பெறும் காலம் வந்திருக்கிறது என்ற கதை, இனி அதிக தாமதமாகும். தவிரவும், சிங்களர் மற்றும் புத்தமத பிட்சுகள், இலங்கை அரசில் காய் நகர்த்துவதில், தொடர்ந்து காலம் காலமாக ஈடுபட்டு வருகின்றனர். மத வழி அரசு என்ற பேச்சு இல்லை என்றாலும், 'எக்சிகியூடிவ் பிரசிடென்ட்' என்ற அபார சக்தி கொண்ட அதிபர் பதவியை குறைக்க, ரணில் ஏதாவது செய்தால் ஒழிய, இலங்கையில் ஒட்டு மொத்த பொருளாதாரமும், ஆளும் திறனும் சிறிது சிறிதாக குறையும்.முதல்கட்டமாக, ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சி அணி ஒன்றை உருவாக்க முயல்கிறார். இதில், சிங்களர் அதிகம் உள்ள, ஜனதா விமுக்தி பெரமுனா, தமிழ் தேசிய கட்சி ஆகியவை, ஒன்று சேரும் நிலை உருவாகலாம். அதற்கு முன்பாக, தமிழர்களுடைய வாழ்வாதாரம், கொழும்பில் உள்ள தமிழர்கள் போல உயரா விட்டாலும், இனியும் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில், மொழி மற்றும் மதத்தை சேர்ந்த எவரும், இரண்டாம் தர குடிமக்களாக, எக்காலத்திலும் இருக்கக்கூடாது.இதை, இந்திய அரசின் வெளியுறவு துறையும், ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் குழுவும் வலியுறுத்தினால், சீனாவின் அரசியல் செயற்கைக்கோளாக இலங்கை மாறும் அபாயம், எதிர்காலத்தில் குறையும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement