Advertisement

மீண்டும் மீண்டும் பழைய பல்லவி ஏன்?

மூன்று மாநிலங்களில் முதல்வர் பதவியேற்பின் மூலம், தேர்தல் தோல்வி என்ற அபாயத்தில் இருந்து, காங்கிரஸ் மீண்டிருக்கிறது. இது, ஹிந்தி பேசும் மாநிலங்களில் கிடைத்த வெற்றி என்பதுடன், அம்மாநிலங்களில் நீண்ட நாட்களாக இருந்த, பா.ஜ., அரசை, மக்கள் விடை கொடுத்து அனுப்பியதன் அடையாளம்.ராஜஸ்தானில் முதல்வராக கெலாட், துணை முதல்வராக சச்சின் பைலட், ம.பி.யில், 72 வயதான மூத்த தலைவர் கமல்நாத், சத்தீஸ்கரில், நக்சல் தாக்குதலில் தப்பிய, பெகால் ஆகியோர் முதல்வர்கள். இவர்கள், அடுத்துவரும் லோக்சபா தேர்தலில், தங்கள் மாநிலங்களில் மொத்தமாக, 50க்கும் அதிகமான, எம்.பி.,க்களை, கட்சிக்கு தேர்வு செய்து உதவுவரா என்பது, அதிக விவாத களாகும். இத்தேர்தல் வெற்றியில், பா.ஜ.,வுக்கும், காங்கிரசுக்கும், ம.பி.,யில் பெரிய இடைவெளி இல்லை.அதற்குள், சென்னையில் நடந்த, கருணாநிதி சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுலை, அடுத்த பிரதமர் வேட்பாளர் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததை, மற்ற கூட்டணி கட்சிகள் ஏற்று, அபார வரவேற்பு தெரிவிக்கவில்லை. தி.க., தலைவர் இதை, முழுமனதுடன் ஆதரித்து இருக்கிறார்; விடுதலைச் சிறுத்தைகளும் ஆதரித்துஇருக்கிறது. இவற்றைப் பார்க்கும் போது, தமிழகத்தில், காங்., கட்சிக்கு, லோக்சபாவில் வெற்றி பெற அதிக, 'சீட்'களை, ஸ்டாலின் தர உடன்படலாம்.இம்முடிவில், கம்யூ., தலைவர்கள், மம்தா, சரத்பவார், சந்திரபாபு உள்ளிட்ட பலரும் தயங்குகின்றனர். ம.பி., முதல்வரான கமல்நாத் கூட, 'தேர்தல் வரும்போது முடிவு செய்யப்பட வேண்டியது' என்று கூறியிருக்கிறார்.தவிரவும், ம.பி.,யில் இளைய தலைவரான, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை முதல்வராக பரிசீலிக்காமல், 72 வயதான கமல்நாத்தை தேர்வு செய்ததில், சோனியா மட்டும் அல்ல, பிரியங்காவும் இருந்ததை அதிகம் விளக்க மறுத்து, தனக்கு தெரியாத விஷயமாக பேசியிருக்கிறார் கமல்நாத்.கமல்நாத்தும், தன் அரசியல் பயணத்தில் முதன் முறையாக, சிந்த்வாரா லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட போது, பிரதமர் இந்திரா பிரசாரம் செய்ததை நினைவுப்படுத்தி உள்ளார். இந்திரா தன் பரப்புரையில், 'ராஜிவ், சஞ்சய்க்கு அடுத்ததாக, என் மூன்றாவது பிள்ளை கமல்நாத்' என, பேசியதைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே, சீக்கியர் படுகொலை விஷயத்தில், அப்பழுக்கற்றவராக ஆகிவிட்டார்.தவிரவும், சீக்கியர் கலவரம் என்ற, 'படுகொலை' 1984ல் நடந்ததில், டில்லியின் காங்., பிரமுகர் சஜ்ஜன் குமார் தற்போது, ஆயுள் தண்டனை பெற்றிருப்பது, பரபரப்பாகி இருக்கிறது. காங்., ஆட்சியில் எப்படி சஜ்ஜன் குமார், 'கொலையாளி' என்ற குற்றத்தில் இருந்து தப்ப, அரசியல்வாதி - போலீசார் இணைந்து செயல்பட்டது, அத்தீர்ப்பில் வெளியாகி இருக்கிறது. காங்கிரசை ஆதரிக்கும், துளசி என்ற மூத்த வழக்கறிஞர், இத்தீர்ப்பை வரவேற்றதுடன், அரசு நிர்வாகத்தின் பாரபட்சத்தையும் சாடியிருக்கிறார். ஆனால், ராகுல் அன்று சிறுவராக இருந்ததால், அவருக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்ற கருத்தை ஏற்கும் மனோபாவம் உள்ளது துரதிர்ஷ்டம்.ராஜஸ்தானில் மூத்த தலைவரும், சட்டசபைத் தேர்தல்களில் தொடர் வெற்றி பெறாத கெலாட், 67, முதல்வர். ஆனால், 41 வயதாகும் பைலட் தன்னிடம், 40 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பதாகவும், நிலைமை விபரீதமாகும் என, சோனியாவிடம் கூறும் அளவுக்கு மோசமான பின், அவர் துணை முதல்வர் ஆகியிருக்கிறார். மாநிலத்தில், குஜ்ஜார் என்ற வகுப்பினர் போராட உதவிய சச்சின் கருத்தை, தற்போது அப்பிரிவினருக்கு, 5 சதவீத இட ஒதுக்கீடு தரும் கருத்தை கெலாட் நிறைவேற்றுவாரா என்பது இனி தெரியும்.சத்தீஸ்கரில், பெகால் முதல்வர் என்றாலும், அஜித் ஜோகி - மாயாவதி தேர்தல் கூட்டணி, காங்., ஓட்டுகளை பிரிக்கும் மூன்றாவது சக்தியாக, அம்மாநிலத்தில் உதித்திருக்கிறது. எல்லாவற்றிலும் முதல் நாளன்றே கமல்நாத், ம.பி., விவசாயிகளின் வங்கிக் கடனை, ஒரு வரம்பு தெரிவித்து, அதைத் தள்ளுபடி செய்திருக்கிறார். அது வரும் நான்கு ஆண்டுகளில், பகுதி பகுதியாக தரப்பட்டாலும், இக்கடன் சுமை உத்தேசமாக, 50 ஆயிரம் கோடி ரூபாய்.அதேபோல், ராஜஸ்தானில், கூட்டுறவு வங்கிக்கடன் பாக்கி மட்டும், 90 ஆயிரம் கோடி ரூபாய். சத்தீஸ்கரும் சேர்ந்தால் எப்படியும், 3 லட்சம் கோடி ரூபாயை, தேர்தல் வெற்றிக்காக காங்கிரஸ் தர நேரிடும். இது, புதிய அணுகுமுறை என்பதைவிட, பழைய பல்லவி எனலாம். அந்தந்த மாநில பொருளாதார நிலைமையில் ஏற்படும் சரிவு, காலப்போக்கில் வெளிப்படும்.ஆனால், காங்., தலைவர் ராகுல் பிரசாரத்தில், மோடியை ஊழல் என்று வர்ணிக்க, 'ரபேல் விமான ஒப்பந்தத்தை' குறை கூறும் பிரசாரம் ஓயாது. அதேபோல், வளர்ச்சி என்ற பேச்சு அல்லது இரு கட்சி ஜனநாயகத்தை உருவாக்கும் பேச்சை குறைக்கும் எதிர்க்கட்சிகளை சந்திக்க, பா.ஜ., என்ன புதிய உத்தி வைத்திக்கிறது என்பது இனி தான் தெரியும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement