Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் கதை இது தானோ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர், ராஜ் தாக்கரே பேச்சு: அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பதை, நான் ஆதரிக்கிறேன். ஆனால், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன், அக்கோவில் கட்டப்பட வேண்டும் என, நான் வலியுறுத்தவில்லை. தேர்தலுக்குப் பின், ராமர் கோவில் கட்டுவதில், எந்தப் பிரச்னையும் இல்லை.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமார் பேட்டி: கருணாநிதி, ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவர்கள் இல்லாததால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது; இதுதான் நமக்கு சரியான நேரம் என்று நினைத்து, கமலும், ரஜினியும், அரசியலுக்கு வந்திருக்கின்றனர். தேர்தல்களம் அவர்களுக்கு, உண்மை நிலையைப் புரிய வைக்கும்.

பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர், இல.கணேசன் பேட்டி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிலை கடத்தல், கொள்ளைக்கு, அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அதை தடுக்க, அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, தமிழக அரசு மேல்முறையீட்டை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் பேட்டி: நதிகள் விவகாரத்தில், மாநில அரசின் உரிமைகள் மற்றும் விவசாயிகளின் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். அந்த வகையில், கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, அ.தி.மு.க., அரசின் முழுமையான சட்ட போராட்டத்தால், நம் உரிமைகளை பெற்றிருக்கிறோம். மேகதாது விவகாரத்திலும், மாநில அரசின் நலனை காப்பாற்றும் வகையில், எல்லா அழுத்தங்களும், பார்லிமென்டில் நிச்சயம் கொடுக்கப்படும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி: வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தனித்து நின்றால், ஜெயித்து விடலாம் என்பது, உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அது ஒரு விஷப் பரீட்சை. தோழமைக் கட்சிகள் அனைத்தையும், தன்னுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்பதில், தி.மு.க., தலைமைக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், தொகுதி பங்கீட்டின்போது, நெருக்கடியோ, இக்கட்டோ நேரலாம் என்ற தயக்கம், தி.மு.க.,வுக்கு இருக்கலாம்; இது என் யூகம். ஆனாலும், இம்முறை, தோழமைக் கட்சிகளை இழந்துவிட வேண்டாம். ஓட்டுகளைச் சிதறடிக்க அனுமதித்து விடக் கூடாது என்பதில், தி.மு.க., உறுதியாக இருப்பதை, உணர முடிகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement