Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

காங்., ஊடகப்பிரிவு மாநில தலைவர், கோபண்ணா பேட்டி: காலையில் வீட்டு வாசலில், செய்தித்தாள்கள் வந்து, 'தொப்'பென விழும் சத்தமே, மனதில் மிகப்பெரிய மலர்ச்சியைத் தரும். செய்தித்தாள்கள் இல்லாத காலைப் பொழுதை, நினைத்து பார்க்க முடியவில்லை. ஒருநாள் செய்தித்தாள்கள் படிக்காவிட்டால், அன்று முழுவதும் எதையோ இழந்தது போலவே, மனம் வெறுமையாக இருக்கும். தொலைக்காட்சி, இணையதளம், சமூக ஊடகங்கள் இருந்தாலும், செய்தித்தாள்களின் இடத்தை எதனாலும் நிரப்ப முடியாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் பேட்டி: தமிழகத்தில், பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்து, கொலை செய்வது அதிகரித்து வருகிறது. ஆத்துார் அருகே தளவாய்பட்டியில், பள்ளிச் சிறுமி தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது, தமிழகத்திற்கு தலைகுனிவு. இச்சம்பவத்தில், குற்றவாளியை ஜாமினில் விடாமல், விரைவு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத்தர வேண்டும். சிறுமியின் குடும்பத்திற்கு, ௫௦ லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும். கொலையான சிறுமியின் பெற்றோருடன் சென்று, தமிழக முதல்வரை சந்திப்பேன்.
ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ பேட்டி: இலங்கையில், தமிழ், எம்.பி.,க்களின் ஆதரவைப் பெறுவதற்காக, 'நீண்ட காலம் சிறையில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்படுவர்' என, ராஜபக் ஷே அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்களை முழுமையாக அழித்தொழிக்கும் செயலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ராஜபக் ஷே, அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அழுத்தத்தை, உலக நாடுகளிடையே குறைக்கவும், இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகிறார். அவர் எந்தக் காலத்திலும், தமிழ் இனத்தால் மன்னிக்கப்பட முடியாத, ஒரு இனப் படுகொலைக்காரர்.
மத்திய அமைச்சர், அர்ஜுன் ராம் மேக்வால் பேட்டி: ரபேல் ஒப்பந்தத்தில், ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கமான இடைத்தரகர், துாக்கி எறியப்பட்டு விட்டார். இதனால், காங்., கட்சி வேதனையில் உள்ளது. எனவே தான், ரபேல் ஒப்பந்தம் குறித்து, தொடர்ந்து பொய்களைக் கூறி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின், காங்கிரசின் உண்மை முகம் அம்பலமாகும்.'வாக்குறுதி தானே கொடுக்கின்றனர்... இதனால், உங்களுக்கு ஒன்றும் பயமில்லையே...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், 'டுவிட்டரில்' கருத்து பதிவு:ஆட்சியில் அமர்ந்து, மோடி தலைமையிலான அரசு எதையுமே சாதிக்கவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட, அவர்களால் முழுமையாக நிறைவேற்றித் தர முடியவில்லை. இந்நிலையில், இப்போது மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில், பல்வேறு புதிய வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.
'எங்க கஜானாவுலேர்ந்து, ஒரு காசு கூட பெயர்க்க மாட்டோம்... கட்சிக் கொடி ஏத்துறதைக் கூட, தொண்டர் செலவில் தான் செய்வோம்' எனக் கூறும், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, 'கிச்சு கிச்சு' பேட்டி: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவித்தால், தே.மு.தி.க., உடனடியாக வேட்பாளரை நிறுத்தி, போட்டியிட தயாராக உள்ளது. இனிவரும் காலங்களில், தே.மு.தி.க., முதலிடம் பிடிக்கும். ஆளும்கட்சியை போல் ஊழல் செய்து, அந்தப் பணத்தில் நாங்கள், கட்சி கொடியை ஏற்றவில்லை. ஒவ்வொரு தொண்டனின் சொந்த செலவிலும், கட்சி கொடியை ஏற்றுகிறோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement