Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தீபாவளிக்குத் தீபாவளி எண்ணெய் தேய்த்துக் குளிப்பது போல், தேர்தலுக்குத் தேர்தல், கோவில்களுக்குப் படையெடுக்கும், காங்., தலைவர் ராகுல் பேட்டி: எனக்கு தோன்றினால், எந்தக் கோவிலுக்கு வேண்டுமானாலும் செல்வேன்; கடவுளை வழிபடுவேன். அதேபோல், தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும், குருத்வாராக்களுக்கும் செல்வேன். குறிப்பிட்ட மதத்தை மட்டும் அடையாளமாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம், எனக்கு இல்லை. ஏனெனில், நான் தேசிய தலைவர்; மாறாக, இந்துத்துவா தலைவர் அல்ல.

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தற்போது உள்ள அரசியல் சூழலில், லோக்சபா தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வருமா... என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். லோக்சபா தேர்தலை பொறுத்தவரை, அனைத்துக் கட்சிகளும், நிச்சயம் கூட்டணி அமைத்து தான் போட்டியிடும். த.மா.கா., தன் நிலைப்பாட்டை, தேர்தல் நேரத்தில் அறிவிக்கும். காங்கிரசுடன் ஒருமித்த கருத்து ஏற்படுவதைப் பொறுத்து, அவர்களுடன் கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.

தி.மு.க.,வைச் சேர்ந்த, பழ.கருப்பையா பேட்டி: ஜெ., மிகவும் ஆளுமையானவர்; எல்லாரையும் தன் கட்டுக்குள் வைத்திருப்பார். 'மோடியா, லேடியா...' என, கேட்டு அதிர வைத்தார். அதுபோன்ற வலிமை, இப்போது இருப்பவர்களுக்கு இல்லை. இவர்களிடம், மன உரம் இல்லை. ஆனால், ஜெ., வகுத்துக் கொடுத்த வழியை மட்டும் பின்பற்றுகின்றனர். அது, கடைசி மனிதனிடமும், கமிஷன் வாங்குவது தான்.


அ.ம.மு.க., துணை பொதுச் செயலர், தினகரன் பேட்டி: ஆசை வார்த்தைக் கூறி, 18 எம்.எல்.ஏ.,க்களை நான் அழைத்து வந்து விட்டதாக, பழனிசாமி குற்றம் சாட்டுகிறார். 234 தொகுதியிலும் வெற்றி பெற்று முதல்வரானவரா அவர்? அவரது கேள்விக்கெல்லாம் பதில் கூறி, நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எத்தனை தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டாலும், ஆர்.கே.நகர் போல், 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.


இடைத்தேர்தலில், தனித்துப் போட்டியிடும் மனநிலையில், தி.மு.க., உள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: தமிழகத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தலில், எங்கள் கட்சி போட்டியிடாது. தி.மு.க., எடுக்கும் முடிவுக்கு ஆதரவளிப்போம். தேர்தலில், தி.மு.க., அணிக்கு சாதகமான முடிவுகள் அமையும். இதன்மூலம், அ.தி.மு.க., ஆட்சி கவிழும் சூழ்நிலையை, பா.ஜ., உருவாக்கி உள்ளது.


'இவ்ளோ நாள், எங்கே இருந்தீங்க சார்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., கர்நாடக மாநில செயலர் புகழேந்தி பேட்டி: 'தினகரனை நாங்கள் சேர்த்துக்கொள்ள மாட்டோம்' என, அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார். இவரை, பக்கத்து வீட்டுக்காரர் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார். அநாகரிகமாக பேசி வருகிறார் ஜெயகுமார். அவரை பார்த்து, நாடே சிரிக்கிறது; பெண்கள் பயந்து ஓடுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement