Advertisement

சபரிமலை பரபரப்பு : இடதுசாரிகள் காரணம்!

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சபரிமலையில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்பதற்கான முதல் கட்ட முயற்சி, இப்போது தோற்றுவிட்டது. உடனே அரசியல் அமைப்புச் சட்டம் பெரிதா, அரசியல் கருத்துகள் பெரிதா... அல்லது காலம் காலமாக நிற்கும் சில தார்மீக வழிபாடுகள் காட்டும் வழி மாற்றப்பட வேண்டுமா... என்ற விவாதம் பெரிதாகி வருகிறது.கேரளாவை ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள இடதுசாரி சக்திகள், காலம் காலமாக மதச் சார்பற்ற தன்மையைப் பேணுவதே, தங்கள் அரசியல் தர்மம் என்ற கருத்து இந்த விஷயத்தில் தோற்று விட்டது.ஏனெனில், எப்போதும், 'பா.ஜ., என்றால் மதச்சார்பு கட்சி' என்ற பிரசாரம் தொடர்ந்தாலும், காங்கிரஸ் என்பது மதச்சார்பு என்பதைக் கட்டிக் காப்பதாக கூறி 'போலி மதச்சார்பின்மையை' வளர்த்தது. நாட்டில் உள்ள மெஜாரிட்டி மக்கள் என்றால், அவர்களை பல்வேறு மாநில பேதங்கள் அல்லது மொழி அடிப்படையில், அந்தந்த சமயத்திற்கு, ஏதாவது ஒரு கருத்தைக் கூறி, தேர்தலையே மையமாக வைத்து செயல்பட்டது.சபரிமலை, நடைதிறப்பு என்பதால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி, அனைத்து வயது பெண்களும் வரலாம் என்ற கருத்தை ஆதரிக்காத அமைதி, ஆர்ப்பாட்டம், இடதுசாரி ஆட்சி எதிர்பாராதது. சாமர்த்தியமாக கேரள முன்னாள், காங்., முதல்வர், சென்னிதலா உட்பட பலரும் இதை ஆதரிக்கவில்லை.தமிழகம் உட்பட பல மாநில பக்தர்கள் சபரிமலைக்கு விரதம் இருந்து செல்பவர்கள். மனம் கொதித்து இருப்பதை இச்சம்பவம் காட்டி இருக்கிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் சில ஆகம கோட்பாடுகள், காலம் காலமாக உள்ளன. அதை மீறுவது அல்லது தகர்ப்பது பற்றிய ஆய்வு, எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.தவிரவும், வட மாநிலங்களில் உள்ள பிரபல கோவில்கள், அன்னிய ஆக்கிரமிப்பால், பாதிக்கப்படும்.உதாரணமாக, காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியில் உள்ள, பிரமாண்ட நந்தி இன்று, அங்குள்ள மசூதியை நோக்கி இருக்கிறது. தமிழகத்தின் கோவில்களை மட்டும் பார்த்த பலர், அங்கே அப்படி என்ன விசேஷம் என்று கேட்டால், அதற்கு, இந்திய வரலாறு தெரிந்தவர்கள் தான், பதில் கூற முடியும்.இன்று ஒரு பெண் நிருபரும், ரஹானா பாத்திமா என்ற சமூக ஆர்வலரும் சபரிமலை செல்ல, அம்மாநில அரசு அளித்த போலீஸ் பாதுகாப்பு, வரலாற்றில் வித்தியாசமானது. ஆனால், பதினெட்டு படிகள் முன் அமர்ந்த பக்தர்கள் அய்யப்ப சரண கோஷத்தை நடத்தி, இம்முயற்சியை நிறுத்திவிட்டனர். எதிர்ப்புக்கு, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., காரணம் என்று, இடது சாரித் தலைவர், யெச்சூரி கூறுகிறார். கேரளாவில், பா.ஜ.,பலமான இயக்கம் இல்லை என்பது அவருக்கு தெரியாதா?ஆண்டு தோறும், கோடிக்கணக்கில் பக்தர்கள், வந்து வணங்கும் சபரிமலையில், 144 தடை உத்தரவுக்குப் பின்னும் புரட்சி வெடிக்கும் என்பதற்கு, கோவில் தந்திரி வெளிப்படையாக, 'இம்மாதிரி அனுமதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், கோவில் நடையை சாத்தி விடுவதே எனது வழி 'என்று கூறியிருக்கிறார்.இனி மேல் அவர் மீது, கோர்ட் அவதுாறு வழக்கை இடது சாரிகள் தொடர்வரா... என்று பார்க்க வேண்டும். சபரிமலை அய்யப்பன் வழிபாடு, தேர்தலை, ஜாதிகளைத் தாண்டியது. அதில் உள்ள பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தொடர்புடையவர்கள். நம்பிக்கை என்பது தனிமனிதன், சமுதாயத்திற்கு பலத்த அரணாக, அமைதிப் பாதையை காட்டும் போது, அது கலாசாரத்தின் அடிப்படைஆகிறது.ஓட்டுக் கேட்க வரும் எக்கட்சி தலைவரும், காவி ஆடையணிந்து, அய்யப்பன் புகழ் பாடி வருவதும் இல்லை. அவர்களை விரத வழிபாடுகளில் பங்கேற்க கூறி, விளம்பரம் தேடாத பக்தர்களும் அதிகம். இத்தீர்ப்பு, அவர்களை, மனம் நோக வைத்திருக்கிறது.தீர்ப்பை அமலாக்கம் செய்து, நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மீது அதிருப்தியை ஏற்படுத்த, இடது சாரி கட்சிகள் முயன்றதில் வெற்றி கிடைக்கவில்லை. ரஷ்யாவிலும், சீனாவிலும், கிறிஸ்தவ, இஸ்லாமிய, புத்த மத தாக்கம் இருக்கிறது என்பதை, அவர்கள் மறந்தனர் போலும்.மிகப்பெரும் சட்ட நிபுணரான, சொரப்ஜி, 'இச்சம்பவத்தால், பல்வேறு பகுதிகளில் போராட்ட உணர்வு ஏற்படும்' என்ற கருத்து சட்டப்படி சரியாக இருக்கலாம். ஆனால், இந்த நாடு கண்டிருக்கும் பல்வேறு வழிபாடுகளில் மாற்றம் என்பதை, மிகப்பெரும் அருளாளர்கள் தான் முடிவு செய்திருக்கின்றனர் என்பதை, வரலாறு நமக்கு காட்டுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement