Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், இளங்கோவன் பேட்டி: ரஜினி மற்றும் கமல்ஹாசனால், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என, நான் நம்பவில்லை. ஆனால், எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படுகிறது என்பதை தேர்தல் முடிந்த பின் தான் சொல்ல முடியும். இதில் விசேஷம் என்னவென்றால், 'நான் கட்சி துவங்குவேன்' என, ரஜினி சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, இதுவரை கட்சியை துவக்கவில்லை. ஆகவே, அரசியலில் அவர் தீவிரமாக இருக்கிறாரா அல்லது புதிய படம் வரும் போது, விளம்பரம் தேட வேண்டும் என்பதற்காக, சில செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கிறாரா என்பதும் தெரியவில்லை.


ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ அறிக்கை: தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்து வரும் மத்திய, பா.ஜ., அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். இந்திய அரசு உடனடியாக தலையிட்டு, துாத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை அரசால் போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற செய்து, விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் பேட்டி: கமல், கட்சி துவங்கியதும், ஒருமுறை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர், ராகுலை சந்தித்து பேசினார். 'காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப்படும்' என, நேரடியாக கமல் சொல்லவில்லை. அதே நேரம், எங்களுக்கு எதிரான கருத்து சொல்லாதது, மகிழ்ச்சி அளிக்கிறது. 2016 சட்டசபை தேர்தல் முதல், தி.மு.க.,வுடன் கூட்டணியாக தொடர்ந்து பயணிக்கிறோம்; இனியும், கூட்டணி தொடரும். எங்கள் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என, கமல் பேசியிருப்பது, அவரது சொந்தக்


தமிழக வருவாய்த் துறை அமைச்சர், உதயகுமார் பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்கை காக்கும் வகையில், முதல்வர் பழனிசாமி கட்டளைப்படி நடந்து வருகிறேன். எங்கள் கட்சி கொடி, சின்னம், ஆட்சியை காப்பாற்றிய, முதல்வர், துணை முதல்வர் தலைமையிலும் செயல்படுகிறேன். இந்த அணி, அந்த அணி என்பதெல்லாம் கிடையாது. எதற்காகவும், முதல்வர் என்னை, கடிந்து கொண்டது இல்லை.


மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: ஏழை, எளிய மக்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை கொண்ட பிரதமர் மோடி, 'ஆயுஷ்மான் பாரத்' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்தியாவில் வாழும், 4.6 சதவீத மக்கள், ஒவ்வொரு ஆண்டும், மருத்துவத்துக்காக செலவிடப்படும் தொகையால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் செல்லும் நிலை ஏற்படுகிறது. இத்தகைய கஷ்டமான சூழ்நிலையில் வாழும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement