Advertisement

பருவமழையை எதிர்கொள்வோம்!

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழைக் காலம் வந்து விட்டது. இனி இதன் தாக்கம், எப்படி இருக்கும் என்பதை, வானிலை ஆய்வு மையம் கணித்து, சரியான தகவலைக் கூறும் என்ற நம்பிக்கை, அதிகரித்து வருகிறது. அதற்கு அடையாளமாக, இரு ஆண்டுகளில் பெய்த பெருமழை மற்றும் புயல் பாதிப்புகளை, ஓரளவு சரியாக கணிப்பதற்கு உரிய தரவுகள், அதனிடம் வந்துஇருப்பதன் அடையாளமாக அதைக் கருதலாம்.தமிழகத்தில் ஏரிகள் ஆக்கிரமிப்பு, புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு, சில ஏரிகளை அரசு, தன் வளர்ச்சித் திட்டத்தின் பகுதியாக மாற்றியதால் ஏற்பட்ட செயல்கள், இன்று மறுபரிசீலனை செய்யும் நிலை வந்திருக்கிறது.மேலடுக்கு சுழற்சி, நிலப்பரப்பில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இது தவிர அரபிய, வங்காள கடலில் ஏற்படும் புயல் சின்ன பாதிப்புகள் மற்றும் வட கிழக்கு பருவமழை தாக்கம் ஆகிய எல்லாவற்றையும், தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் அறிந்து, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதில், சமூக வலைதளங்கள், அந்தப் பகுதியில் அதிக மழை என்ற மிரட்டல் தகவல்கள் அல்லது முகநுாலில் வரும் வானிலை தொடர்பற்ற யூக தகவல்களை நம்பி, அதையே விவாதப் பொருளாக்கும் கூட்டம் அதிகரித்துள்ளது.தென் தமிழக மாவட்டங்களில், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகியவை, மழை வாய்ப்பை அதிகம் கொண்டிருப்பவை. அங்கேயும், வழக்கப் படி பெய்ய வேண்டிய சதவீதத்தை விட குறைவாக பெய்வதும் உண்டு. கேரளாவில் தாக்கிய புயல், அதிக மழை, இங்கே, 10 சதவீதம் கூட எதிரொலிக்கவில்லை.இது, இப்போது பெய்யும் மழை, ஒரே நாளில், 10 செ.மீ., மழை என்பது அதிகமாகும். கோவை மாநகரத்தில் சமீபத்தில் பெய்த ஒரே நாள் மழை, அங்குள்ள மக்களை பெரிதும் துன்புறுத்தியது. ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள், மழையில்லா பகுதிகள், ஆனாலும் கடந்த வாரத்தில் ஒரு நாள் பெய்த மழை, அங்குள்ள சிறிய கண்மாய்களில், 15 சதவீதம் தண்ணீர் தேங்க வைத்திருக்கிறது.இந்த ஆண்டில், காவிரி மட்டும் அல்ல, வைகையும் நீர்ப்பெருக்கு கொண்டிருக்கிறது. ஆனால், மதுரை முதல் பரமக்குடி வரை, கற்பரப்பாக, அதிக கழிவு நீர் தாங்கிச் செல்லும் இதில், ஓரளவு மணற்பரப்பு ஏற்படுமா... என்பது கேள்விக்குறியே. அதைவிட, இன்னமும் மிகச்சிறிய கண்மாய்களுக்கு தண்ணீர் விடாமல் பொதுப்பணித் துறை, தங்களுக்கு என, பல காரண காரியங்களை கொண்டிருக்கின்றன.கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளும், ஒரே நாள் பெருமழையை, அங்கொன்றுமாக சந்திக்கின்றன.சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பிரச்னை வராமல், அரசு நடவடிக்கை அமையலாம். அதற்கு அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரத்தில், தண்ணீர் தேங்காமல், ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி, தண்ணீர் விரைந்து செல்ல பல்வேறு நடவடிக்கைகள், கால்வாயில் சிறு பாலம் அமைத்தல் ஆகியவை, சிறப்பாக உள்ளன என்றால் தவறில்லை.தவிரவும், இம்மாவட்டத்தில் உள்ள ஒரத்துார் - ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து, சென்னைக்கு தண்ணீர், 'சப்ளை' செய்யும் புதிய ஏரி அமைக்கும் பணி, சென்னைக்கு ஏதாவது நம்பிக்கை தரலாம். ஆனால், அதற்குள் செங்கல்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, தனியார் தண்ணீர் லாரிகள், தண்ணீரை எடுக்கும் தீவிரம், நிலத்தடி நீரை குறைத்து விடும்.புவி வெப்பம், சுற்றுச்சூழல் பாதிப்பு, காற்றில் மாசு அதிகரிப்பு ஆகியவை, பஞ்சாப், ஹரியானா, டில்லி போன்ற மாநிலங்களுக்கு ஏற்படும் அதிக பாதிப்பு, நமக்கு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், இன்றைய நிலையை விட, அரை டிகிரி வெப்பம் அல்லது திடீரென, 12 செ.மீ.,க்கு மேல் கொட்டும் மழை என்பதை, நாம் எதிர்கொள்ள வேண்டும்.தமிழக அரசு நில அளவை, பட்டா மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றம் ஆகியவற்றை, தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதில், லஞ்சம் பெற்றதாக பிடிபடும் அரசு ஊழியர்கள் பெயர்களை, அரசு கோர்வையாக விளம்பரப்படுத்தலாம். இப்போது, மத்திய அரசு நீர்வள மேலாண்மை, நதிநீர்ப் பராமரிப்பில் அதிக அக்கறை காட்டுகிறது.கங்கையை சுத்தம் செய்யும், மத்திய அரசு திட்டம் சிறப்பாக முடிய, இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அவை ஒரே நாள் உத்தரவில் அமல்படுத்தும் விஷயமல்ல.'நதிநீர் மேலாண்மை மசோதா - 2018' என்பதை, அடுத்த பார்லிமென்ட் கூட்டத்தொடரில் வரும் போது, காவிரி நீர் வரத்து, தாமிரபரணியில் துாய்மை நீர் பாய வழிவகை ஆகியவற்றை முறையான தகவல்களுடன், தமிழக அரசு வைத்தால் நல்லது. இதையும், லோக்சபா தேர்தலுடன் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement