Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் பேட்டி: 'ரபேல்' விவகாரத்தை திசை திருப்பவே, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், பல காரணங்களை கூறி வருகிறார். தற்போது, அவர், ஏழாவது முறையாக, புதிய காரணத்தை கூறியுள்ளார்; இது, மிகவும் கண்டிக்கத்தக்கது. இது குறித்து, காங்., தலைவர் ராகுல், பார்லிமென்டில் குற்றஞ்சாட்டிய போது கூட, பிரதமர் மோடி, பதில்கூறவில்லை.


'வாழ்வாதாரத்திற்கு எவ்வளவோ மாற்று வழிகள் உள்ளன... ஆனால், மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க இதைத் தவிர வேறு அற்புதமான சந்தர்ப்பம் கிடைக்காதே... இதை உணரலியா நீங்க...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேச்சு: தமிழகத்தில், ஜன., 1ம் தேதி முதல், பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்திருப்பது, 11 லட்சம் உழைப்பாளர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும், வணிகர்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை தருவதால், வரும், 23ம் தேதி, பல லட்சம் வணிகர்களை திரட்டி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக, பிளாஸ்டிக் தடை உத்தரவை அரசு அறிவித்துள்ளது. எனவே, தேர்தல் நேரத்தில், வணிகர்கள் தரப்பில், மாற்றி முடிவெடுத்தால், ஆட்சி மாற்றம் ஏற்படும் நிலை உருவாகும்.


'பரவாயில்லீங்க... நீங்க போகாம இருந்ததை, யாரும் தப்பா நினைக்கலே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் பேட்டி:எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க எனக்கு, பெயரளவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், நான் விழாவில் பங்கேற்கவில்லை. அதேபோல், கூட்டத்தை காட்டுவதற்காக, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், ஆசிரியர்,- ஆசிரியைகள், மாணவர்களுக்கு, நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க, கட்டாய அழைப்பு விடுத்துள்ளனர்.


தி.மு.க., தலைவர், மு.க.ஸ்டாலின் அறிக்கை: ஜாதி, மத பாகுபாடுகளால் மனிதர்களை ஒடுக்குவது மட்டுமின்றி, ஆண் - பெண் என்ற பாலின பேதம் காட்டுவதையும், திராவிட இயக்கம் ஏற்பதில்லை. அந்த வகையில் தான், சபரிமலை கோவிலில் பெண்களின் வழிபாட்டு உரிமைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, தி.மு.க., வரவேற்றது.


முன்னாள் நீதிபதி, மார்கண்டேய கட்ஜு, 'டுவிட்டரில்' கருத்து பதிவு: சபரிமலை கோவிலின் நுாற்றாண்டு பழமையான நடைமுறையில் குறுக்கிடுவதன் மூலம், பிரச்னைகள் நிறைந்த பெட்டியை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திறந்திருக்கின்றனர். ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளில் தலையிடும் உச்ச நீதிமன்றம், அதே தைரியத்துடன், மசூதிகளில், பெண்களும் தொழுகை நடத்தலாம் என, தீர்ப்பு வழங்குமா?

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement