Advertisement

கிராமத்தினரே நடத்தும் பள்ளி; 25 குழந்தைகள்... ஒரே ஆசிரியர்!

சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி வி.புதுப்பட்டியில்தன்னார்வ நிறுவனம் கைவிட்ட பள்ளியை கிராமத்தினரே நடத்துகின்றனர். இங்கு5 வகுப்புகள், 25 குழந்தைகள் படிக்கின்றனர். ஒரே ஆசிரியர் விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறார்.

மலையடிவார பகுதியான இங்கு 1986 ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. அந்நிறுவனம் பள்ளியை நடத்த முடியாமல் 2014 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கிராமத்தினரே பள்ளியை நடத்துகின்றனர். தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிந்த ஆசிரியர் வள்ளியம்மை விடுப்பு எடுக்காமல் 5 வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

அவர் கூறுகையில், ''துவக்கத்தில் ஐந்து ஆசிரியர்கள் இருந்தனர். பள்ளியை கைவிட மனமில்லாமல் தொடர்ந்து நடத்துகிறேன். தற்போது ஐந்து வகுப்புகள் உள்ளன. விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறேன்,'' என்றார்.

முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனி கூறியதாவது: இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன், 50 குழந்தைகள் இருந்தனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பக்கத்து ஊர்களில் குழந்தைகளை சேர்த்தனர். ஏழு கட்டடங்கள், ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. 'குறைந்தது 25 மாணவர்கள் இருந்தாலே அரசு பள்ளி துவங்கலாம்' என விதிமுறை உள்ளது.

தற்போது ஒரு ஆசிரியருக்கு தொகுப்பூதியம் தருவதாக அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். பள்ளியை அரசு ஏற்று நடத்தினால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Arivu Nambi - madurai,இந்தியா

    கிராமத்து மாணவர்களின் கல்வி ,முன்னேற்றம் ,மருத்துவக்கல்வி என்று பேசிக்கொண்டு திரியும் அரசியல்வாதிகளே என்ன செய்கிறீர்கள் ...உடனே சென்று கவனித்து தேவையானதை செய்யவும் ...இது பொதுமக்களின் சார்பாக இடும் ஆணை ,கட்டளை என்றுகூட எடுத்துக்கொள்ளுங்கள் ....பொதுமக்களுக்கு வேலை செய்யத்தான் உங்களுக்கு வோட்டு போட்டது ..எங்களின் சார்பாகத்தானே வேலை செய்கிறீர்கள் ...சுடுவது மட்டும்தான் உங்கள் வேலையா ...இதுவும்தான் ...எனவே போய் உடனடியாக கவனிக்கவும் ...

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    டாஸ்மாக் திறக்க சொன்னால் உடனே தொறப்பாங்க. இல்லே இதுக்கு மேலே 8 வழி அழிவுசாலைன்னா கூட ஓ.கே.. வெறும் பள்ளிக்கூடம் கட்டவோ இல்லை வாத்திகளை வேலைக்கு வைக்கவோ பட்ஜெட் இல்லை.

  • ருத்ரா -

    கல்வியின் அவசியம் உணர்ந்த மக்கள்.மழலைகள். அவர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியை. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். படிப்படியாக வேறு ஒன்றை குறைத்து கல்விக் கூடத்தை அதிகரிக்கலாம்..

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    அத் தேர்தல் தொகுதிக்கு பொறுப்பாகவுள்ள சட்டசபை உறுப்பினர் என்ன வேலை செய்கிறார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement