Advertisement

கல்லூரியில் சேர பரிதவிக்கும் பார்வையற்ற சகோதரர்கள்

தஞ்சாவூர் : ஜாதி சான்றிதழ் இல்லாததால், அரசு கல்லுாரியில் சேர முடியாமல், பார்வையற்ற மாற்று திறனாளி சகோதரர்கள் தவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த தங்கம் என்பவரின் மகன்கள் பிரபுதேவா, 20, மாதவன், 19. இருவருமே, பார்வையற்ற மாற்று திறனாளிகள். தஞ்சாவூரில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில், பிளஸ் 2 வரை படித்து, பிரபுதேவா, 748 மதிப்பெண்ணும், மாதவன், 742 மதிப்பெண்ணும் எடுத்துள்ளனர்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இவர்கள், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லுாரியில் சேர்வதற்காக, விண்ணப்பம் அளித்தனர். கல்லுாரி நிர்வாகம், இடஒதுக்கீடு போன்ற பிரச்னைகள் இருப்பதால், ஜாதி சான்றிதழ் இல்லாமல், சேர்த்து கொள்ள முடியாது எனக் கூறி விட்டது.

தாலுகா அலுவலகத்தில், ஜாதி சான்றிதழ் கேட்டதற்கு, 'பிரதமர் மோடி, நரிக்குறவர் இன மக்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அறிவித்துள்ளார். அதற்கான அரசாணை இன்னும் வராததால், ஜாதி சான்றிதழ் தர முடியாது' எனக் கூறி விட்டனர்.

இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலர் அரவிந்த்சாமி, மாணவர்கள் இருவரையும், கலெக்டர் அண்ணாதுரையிடம் அழைத்து சென்று, மனு கொடுத்தார். சத்திரம் நிர்வாகத்தில் உள்ள கல்லுாரியில் சேர்த்து கொள்ள பரிந்துரை செய்வதாக, கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சகோதரர்கள் கூறுகையில், 'எங்கள் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை. நாங்கள் படித்து, ஆசிரியராக வேண்டும் என்பது தான் லட்சியம். 'ஜாதி சான்றிதழ் இல்லாததால், எங்களை கல்லுாரியில் சேர்க்க மறுக்கின்றனர். என்ன செய்வதென புரியாமல் தவிக்கிறோம்' என்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • chails ahamad - doha,கத்தார்

    மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனிதாபிமானம் மிகுந்தவர் என்ற முறையில் இந்த பார்வையற்ற நரி குறவ மாணவர்களை கல்லூரியில் சேர்த்திடுவார் என்பதை நம்புவோம் , ஆட்சியர் அவர்களை மனதார பாராட்டுவோம் .

  • வேலங்குடியான் - Karaikudi,இந்தியா

    இங்கு மனிதாபிமானமும் குருடாகி விட்டது..... அரசாணை வெளியிடாதது அரசின் தாமதம்..... இவர்களுக்கான இடஒதுக்கீடு எப்பொழுது வேண்டுமானாலும் கொடுக்கப்படவேண்டும்.....

  • kovai Tamilian - Kovai,இந்தியா

    Srilankan போராளீஸ் இதற்கு போராடலாமே. இதற்கு போராடி உங்களுக்கு என்ன பயன்? கரெக்டா?

  • சாதிக் -

    அரசும் அரசியல்வாதிகளும் செய்யாத..எத்தனையோ நல்ல புண்ணிய காரியங்களை மாவட்ட ஆட்சியாளர்கள் செய்திருப்பது நாம் அடிக்கடி அறியும் உண்மை. அந்த வரிசையில் ஆட்சியர் அண்ணாமலை இந்த நல்ல காரியத்தை செய்து புண்ணியம் தேடிக்கொள்வாராக! ப்ளீஸ்

  • ஆப்பு -

    இவர்கள் டைரக்டா மோடிஜிக்கு வாஸப் அனுப்பலாமே...

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஆட்சியர் நேரடியாக ivargal vishayathai தலையிட்டு இவர்களை kalloori TIL Serra ஆவண செய்யவேண்டும் இவர்களுக்குத்தான் பார்வயில்லைஅரசுஎந்திரம் குருடாகவாபோய்விட்டது

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    //அதற்கான அரசாணை இன்னும் வராததால், ஜாதி சான்றிதழ் தர முடியாது' எனக் கூறி விட்டனர்.//

  • ருத்ரா -

    அரசாணைக்கும்,மனிதாபிமானத்திற்கும் என்ன சம்மந்தம்.அரசாணையில் தாமதம் ஏன்?அரசு இதை கவனத்தில் கொண்டு இம் மாணவர்கள் தொடர்ந்து படிக்க உதவ வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement