Advertisement

டவுட் தனபாலு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: லோக்சபா, சட்டசபை இரண்டிற்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை ஏற்க முடியாது.

டவுட் தனபாலு: லோக்சபா தேர்தலில், தோல்வி அடைந்தால், வரவுள்ள சட்டசபை தேர்தல்களில் பார்த்துக் கொள்ளலாம்னும், சட்டசபை தேர்தல்களில் தோல்வி அடைந்தால், லோக்சபா தேர்தலில் நிலைமை மாறும்னு சொல்லிச் சொல்லியே, காங்., காலத்தை ஓட்டி வருது... அதற்கு வாய்ப்பு கிடைக்காது என்பதால், இதை ஏற்க மறுக்குறீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

-------

பத்திரிகை செய்தி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின், புதிதாக அச்சிடப்பட்ட, 500 மற்றும், 2,000 ரூபாய் நோட்டுகளை, விமானப் படையின் சரக்கு விமானம் மூலம், நாடு முழுவதும் வினியோகிக்க, 29 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: தகவல் அறியும் உரிமை சட்டத்தில், இந்த தகவலை, விமானப்படை தெரிவித்து இருக்கு... புதிய நோட்டு அச்சடித்த செலவு, அதை வினியோகம் செய்ய ஏற்பட்ட செலவு போன்ற தகவல்கள் எல்லாம்கூட கிடைச்சிடுச்சு... ஆனா, மதிப்பிழப்பு செய்யப்பட்ட தொகை, வங்கிகளுக்கு எவ்வளவு திரும்பியது என்ற, 'டவுட்' மட்டும் எப்போ தீருமோ...!

------

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: பா.ஜ.,வுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லை.

டவுட் தனபாலு: உங்க நிலைமை மட்டும் என்னவாம்... சத்தியமூர்த்தி பவன் வாசல்ல, பிரதான கட்சிகள் எல்லாம் தவம் கிடக்குற மாதிரி, 'பில்டப்' கொடுக்குறீங்களே... இவ்வளவு நாள், நீங்க பெரிதும் நம்பி இருந்த, தி.மு.க., தற்போது, உங்களை எதிர்க்கும் கட்சிகளோடு, வலியச் சென்று உறவாடி வருவதை, நீங்க உணரலையா... இல்லை, ஒப்புக் கொள்ள தயங்குறீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    திருநா தலைக்குமேலே கத்தி தொங்குது.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    திமுக பிச்சைபோடும் தொகுதிகளுக்கு காங்கிரஸின் கோஷ்டிகளுக்குள் வரும் அடிதடியை எண்ணி அரசர் கவலையில் இருக்கிறார் ஐயா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement