Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்க கட்சி, ஆட்சியில இருந்தா மட்டும் தான், ஜனநாயகம் தழைத்தோங்கும்னு நம்புறீங்களா...' என கேட்க தோன்றும் வகையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேச்சு: சர்வாதிகாரத்தால், எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என, மனப்பால் குடித்த அரசுகள், மண்ணில் வீழ்ந்திருக்கக் கூடிய வரலாற்றை தான் பெற்றிருக்கின்றன. இந்திய ஜனநாயகத்தின் தனி சிறப்பே, சுதந்திரமான பேச்சுரிமையும், எழுத்துரிமையும் தான் என்பதை, தமிழக அரசு உணர வேண்டும். கைது செய்வதாலும், அடக்குமுறையாலும் எதையும் சாதித்துவிட முடியாது.

'உங்க அணியில, உங்களை நம்பி வந்த தொண்டர்கள் எல்லாம், இப்ப எங்க போனாங்க...' என கேட்க தோன்றும் வகையில், ஜெ., அண்ணன் மகள் தீபா பேட்டி: ஜெயலலிதா இறந்தபின், அ.தி.மு.க., தொண்டர்கள் என்னைத் தேடி வந்தனர். அதனால் தான், அரசியலில் உள்ளேன். தனிக் கட்சி ஆரம்பிக்கவில்லை; அ.தி.மு.க.,வின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறேன். தேர்தல் கமிஷன் துணையோடு, அ.தி.மு.க., தலைமை பொறுப்பில், முதல்வரும், துணை முதல்வரும் உள்ளனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அ.தி.மு.க., அராஜக ஆட்சியை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்த வேண்டும்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி: பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு போன்றவற்றின் மூலம், தொடர்ந்து வணிகர்களை, மத்திய அரசு நசுக்கி வருகிறது. வணிகர்கள் நினைத்தால், வணிகம் நசுக்கப்படுவது தொடர்ந்தால், 2019ல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை, யாராலும் தடுக்க முடியாது.

இந்திய, கம்யூ., தேசிய செயலர், டி.ராஜா பேட்டி: மாநிலத்திற்கு மாநிலம், வெவ்வேறு அரசியல் தன்மைகள் கொண்ட நம் நாட்டில், லோக்சபாவுக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, சாத்தியமே இல்லை. அதற்குப் பதில், தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய அரசு முன்வர வேண்டும்.

மத்திய நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியுஷ் கோயல் பேச்சு: 'சில அரசியல் கட்சிகள், ஒரே, ஜி.எஸ்.டி., விகிதம் கொண்டு வரப்பட வேண்டும்' என, கூறி வருகின்றன. ஒரே, ஜி.எஸ்.டி., விகிதம் என்பது கேலிக்கூத்தானது. இத்தகைய பரிந்துரை, ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உப்பு, சர்க்கரை, துணி வகைகள், ௧௮ சதவீத வரி விதிப்பில் இருக்கும். இதனால், அவர்கள் பாதிக்கப்படுவர்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: மீன்களில், 'பார்மலின்' என்ற ரசாயனம் இருப்பதாக விஷமிகள் திட்டமிட்டு வதந்தியை, பரப்பியுள்ளனர். அதை உதாசீனப்படுத்த கூடாது என்பதற்காக, ஆய்வுகள் நடத்தினோம். ஆனால், 'பார்மலின்' இல்லை என்று தான், முடிவுகள் வந்துள்ளன. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம்; தைரியமாக மீன்களை உண்ணலாம். வரும் காலங்களில், மீன்களை ஆய்வு செய்து, விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க திட்டமிட்டுள்ளோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அப்போது எழுபதுகளில் அலைஓசை துக்ளக் தினமலர் போன்ற பத்திரிகைகள் எல்லாம் தாக்கப்பட்டதுக்கு காரணம் உங்க அப்பாவும் திமுக காரணிகளும்இல்லையா நாங்க தான் தப்ப நினச்சுட்டோமா

  • Bhaskaran - Chennai,இந்தியா

    தீபா அம்மா நீங்க கட்சியை ஆரம்பிக்கும்போது வசூல் செய்த பணமெல்லாம் எங்கேன்னு பன்னீர் கட்சி கேட்டதனாலே தான் இவ்வளவுகோபமாக இருக்கீங்கன்னு சென்னையில் பேசிக்கிறார்களே உண்மையா

  • Bhaskaran - Chennai,இந்தியா

    டேனியல் ராஜா தனியாக நின்று டெபாசிட் வாங்கமுடியுமா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement