Advertisement

இது உங்கள் இடம்

சமூக உணர்வுள்ள நீதிபதிக்கு பெரிய வணக்கம்!ஏ.சேனாதிபதி, கணியூர், திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வழியாக, மாவட்ட சட்ட பணிகள் ஆணைய செயலரும், நீதிபதியுமான, சுரேஷ்குமார் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வழியில், 13 வயது சிறுவன் ஒருவன், பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். காரை நிறுத்திய அவர், சிறுவனை விசாரித்தார்.

'வறுமை காரணமாக, என் பாட்டியின் வற்புறுத்தலால் தான் பிச்சை எடுக்கிறேன்' என, அவன் கூறினான். குழந்தைகள் நல வாரிய அதிகாரிகளை வரவழைத்த, நீதிபதி, சிறுவனை காப்பகத்தில் சேர்க்க, நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், பள்ளிக் கல்வியை சிறுவன் தொடர நடவடிக்கை மேற்கொண்டார். சிறுவனுக்கு தேவைப்படும் பண உதவியை, அவரது சொந்த பணத்தில் இருந்து செய்து வருகிறார்.

இதற்கு முன், சாலையில் மான் ஒன்று அடிபட்டு கிடந்தது. அதை, சில சமூக விரோதிகள் துாக்கிச் செல்ல முற்பட்டனர். அந்த வழியாக வந்த நீதிபதி சுரேஷ்குமார், அவர்களை விரட்டியடித்து, மானை மீட்டு, முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றினார்; பின், வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

கனமழையின் போது, நீலகிரி மலைச் சாலையில் பாறை உருண்டு கிடந்தது. அந்த வழியாக காரில் வந்த நீதிபதி, சிலரின் உதவியுடன் அதை அகற்றினார். சுரேஷ்குமாரின் தொடர் சேவைகளை பாராட்டி, வலைதளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. சமூக சிந்தனையுடன் பணியாற்றும், நீதிபதி சுரேஷ்குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

----

கட்டண பெயரில் பணம் பறிப்பது ஹிந்து தர்மமா?எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மூத்த குடிமகனாகிய நான், குடும்பத்தாருடன், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று, கவுன்டரில் மூன்று மணி நேரம் காத்திருந்தேன். சன்னதியில் நின்று தரிசனம் செய்ய, ஒரு வினாடி கூட நிற்க, ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மிகவும் மனவருத்தத்துடன், கோவிலை விட்டு திரும்பினோம்.

சமீபத்தில், தனியார், 'டிவி' ஒன்றில், திருப்பதி தேவஸ்தானத்தில் தலைமை அர்ச்சகராக இருந்து, கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட, ரமண தீட்சிதர் பேட்டி ஓரளவிற்கு உண்மை தான் என, நினனத்தேன். 'ஏழுமலையானை தரிசிக்க, செயற்கையாக ஒரு நெருக்கடியை, தேவஸ்தானம் உருவாக்குகிறது. அதை பயன்படுத்தி, தரிசனம் செய்ய டிக்கெட் முறையை ஏற்படுத்தி, கோடி கோடியாக பணம் குவிக்கிறது' என, தலைமை அர்ச்சகரின் பேட்டி மூலம், கோவிலின் வண்டவாளத்தை தெரிந்து கொண்டேன்.

பக்தர்களை விரைவாக தரிசனம் செய்ய வைத்தால், பட்டாச்சாரியார்களுக்கு லாபம் இல்லையாம். அதிகாரிகள், அரசியல்வாதிகள், மந்திரிகள், செல்வந்தர்கள் ஆகியோருக்காக, விதிகள் தகர்க்கப்பட்டு, காத்திருக்காமல், நீண்ட நேரம் தரிசனம் செய்ய அனுமதித்தால், பணவசூல் குவியுமாம்!

இது போன்ற குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளதால், திருப்பதி தேவஸ்தான போர்டு மீது, என் போன்றோருக்கு, நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.குருவாயூர் கோவிலில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நேரம் கடந்த பின், மாற்றுத்திறனாளி ஒருவர் தரிசனம் செய்ய முயன்றார். கோவிலில் விளக்கு போட டிக்கெட் எடுக்குமாறு, ஊழியர்கள் கோரினர். அதற்குரிய கட்டணத் தொகை, '9,000 ரூபாய்' என்றனர்; அந்த மாற்றுத்திறனாளி மயங்கி விழாத குறையாய் அங்கிருந்து திரும்பினார்.

கோவில்களில் பக்தர்களாக விரும்பி, காணிக்கை செலுத்தலாம். கட்டாயப்படுத்தி, கட்டணம் என்ற வகையில், பணம் பறிப்பது, ஹிந்து தர்மம் தானா... இதை, திருப்பதி ஏழுமலையான், குருவாயூர் போன்ற கோவில்களின் அதிகாரிகள் தான் விளக்க வேண்டும். பா.ஜ., தலைவர்களில் ஒருவரான, சுப்ரமணியன் சுவாமி, திருப்பதி தேவஸ்தானம் மீது வழக்கு போடப்போவதாக அறிவித்துள்ளார். இவராவது, தட்டிக் கேட்க புறப்பட்டு உள்ளாரே என நினைத்து, ஓரளவு மனம் திருப்தி அடைகிறது!

----

மக்களை நோகடிப்போர் இவர்களே!கோ.வெங்கடேசன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'அரசு ஊழியர், ஆசிரியர்களை நோகடிக்காதீர்...' என்ற தலைப்பில், இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார். அதில், அவர்களுக்கு வக்காலத்து வாங்கி, சில கருத்துகளை கூறி இருந்தார். இன்று அரசு துறை அலுவலகங்களில், மக்களை எவ்வாறு எல்லாம், ஊழியர்கள் நோகடித்து வருகின்றனர் என்பதை முதலில் பார்ப்போம்...

* பட்டா மாறுதல், ஜாதி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றை பெற, மக்களை எவ்வளவு கஷ்டப்படுத்துகின்றனர்!
* லஞ்சம் தராமல், எந்த சான்றிதழையாவது, தாலுகா அலுவலகங்களில் இருந்து பெறமுடியுமா?
* பத்திரப் பதிவுக்கு, அதன் மதிப்பில், இவ்வளவு சதவீதம் என, 'ரேட்' நிர்ணயித்து, மக்களை அந்த துறை அலுவலர்கள் ஏமாற்றவில்லையா?
* ஓட்டுனர் உரிமம் பெற, எத்தனை வழிகளில் மக்களை, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நோகடிக்கிறீர்கள்... வாகன தகுதி சான்று எப்படி வழங்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம்!
* பெரும்பாலான அரசு பள்ளிகள், தரமான கல்வியை அளிக்காததால், லட்சக்கணக்கில் செலவு செய்து, தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை பெற்றோர் சேர்க்கின்றனர். இப்படி நொந்து நுாடுல்ஸ் ஆகும், லட்சோப லட்சம் மக்கள், இளிச்சவாயர்களா?
* பொதுப்பணி துறை, நெடுஞ்சாலை துறையினரால் மேற்கொள்ளப்படும் சாலை பணி தரமற்றதாக உள்ளது. குண்டும், குழியுமாக மாறிய சாலை வழியாக நடந்து செல்லும் மக்கள் பாவிகளா?
* அரசு மருத்துவமனைகளில் எதற்கெடுத்தாலும், காசு பறிக்கும் கும்பல் யார்; ஏழை, எளியோருக்கு தரமான சிகிச்சை தான் கிடைக்கிறதா?
இந்த கேள்விகளுக்கு எல்லாம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களால் சரியான பதில் தர முடியுமா?

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    My fri who shifted his residence to Touch wanted to renew and incorporate new அட்ரஸ் He went to R T O Tiruchirapalli and he was curtly told by staff there that he should get N O C from the existing R T O. My fri tried to get the N O C from the current. R T O and he was forced to approach broker and get N O C at an astronomical cost. After that to get the licence renewed and incorporate address again he was advised/forced by R T O staff to come through driving school and he was forced to Cough speed money. Why should government staff in R T O office not drive away the brokers and serve the public without any speed money

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement