Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி பேச்சு: மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, 2014ம் ஆண்டு தேர்தலில், மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கி விட்டது. ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, மக்கள் கூடுதலாக, இன்னும் ஐந்து ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக நல்ல நிலைமையில் இல்லை. மக்கள் மீது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகளை, நீக்க வேண்டும்.

த.மா.கா., கட்சி தலைவர் வாசன் பேட்டி: எட்டு வழிச்சாலை திட்டம், யாருக்காக, எதற்காக என மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும். வெளியூரிலிருந்து வருவோர், தாம்பரம் வரையில் மட்டுமே, விரைவாக வர முடியும். அதன்பின், சென்னைக்குள் நுழைந்து வீடு சேர, மேலும் இரண்டு மணி நேரமாகும். சேலம், திருவண்ணாமலையில் உள்ள கனிம வளத்தை, வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல போடப்பட்ட திட்டம் இது. ஸ்டெர்லைட்டுக்கு மெத்தனப்போக்கு, எட்டு வழிச்சாலைக்கு அவசர போக்கை, அரசு கடைப்பிடிக்கிறது.

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் பேச்சு: எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, இரண்டரை மடங்கு முதல், நான்கரை மடங்கு வரை, இழப்பீடு வழங்கப்படும். நிலத்தை கொடுக்கவும், மறுக்கவும், விவசாயிகளுக்கு உரிமை உள்ளது. சமூக ஆர்வலர் என்ற போர்வையில், நாட்டின் வளர்ச்சியை சிலர் தடுக்கின்றனர். ஜெ., ஆட்சி, விவசாயிகளை கைவிடாது.

தமிழக, காங்., தலைவர், திருநாவுக்கரசர், சிண்டு முடியும் வகையில் பேட்டி: தமிழகத்தில், ஏதாவது ஒரு திட்டத்தை பற்றி கருத்து சொன்னாலே, கைது செய்யப்படும் நிலை உள்ளது. பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை நசுக்கும் பாசிச ஆட்சியாக, அ.தி.மு.க., ஆட்சி உள்ளது. அதை, தமிழக காங்., கண்டிக்கிறது.

மக்கள் தன்னிடம் கருத்து கேட்டதை போல், கனவு கண்டு, ஜெ., அண்ணன் மகள் தீபா பேட்டி: தமிழகத்தில், சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், எட்டு வழி பசுமை சாலை திட்டம் உட்பட அனைத்தும், மக்களுக்கு விரோதமாகவே உள்ளன. நல்லது நடக்க வேண்டுமெனில், இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும். 'அ.தி.மு.க., ஜெ., தீபா அணி' என, தேர்தல் ஆணையத்தால், எங்களுக்கு அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. கழகமாக மாற்றுவது குறித்து, பின்னர் முடிவு செய்யப்படும்.

அ.ம.மு.க., துணை பொது செயலர் தினகரன், 'தமாஷ்' பேச்சு: ஜெயலலிதாவால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்ட, அ.தி.மு.க.,வையும், இரட்டை இலையையும் மீட்கவே, அ.ம.மு.க., துவங்கப்பட்டது. ௨௩௪ தொகுதிகளிலும் போட்டியிட்டு, அதில் வெற்றி பெற்று, பொது செயலர் சசிகலா அனுமதி அளித்தால் மட்டுமே, முதல்வர் பதவியில் அமருவேன். இல்லையென்றால், தொண்டருக்குத் தான் அந்தப் பதவி.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement