Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'சந்தடி சாக்குல, எங்க பொழப்புல மண்ணள்ளி போட்டுராதீங்க என, வேண்டுகோள் விடுப்பது போல' பார்லிமென்ட் துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி: வரும், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது, தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடத்தக் கூடாது. இதுகுறித்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகிய இருவரும், சட்ட அமைச்சகத்திற்கு ஏற்கனவே கடிதம் எழுதி உள்ளனர். மேலும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு ஆட்சி நடைபெற வேண்டும் என, மக்கள் ஓட்டளித்துள்ளனர். மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், ஆட்சியை கலைப்பதை ஏற்க முடியாது. வேண்டுமானால், அனைத்து கட்சியின் ஆதரவோடு, 2021 அல்லது 2024ல், தேர்தலை மத்திய அரசு நடத்திக் கொள்ளட்டும்.

'போராட்டம், கீராட்டம் எதுவும் இல்லேன்னா, உங்க வண்டி ஓடாதுன்னு பயப்படுறீங்களோ' என கேட்க தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர், வைகோ அறிக்கை: தமிழகத்தின் வாழ்வாதாரங்களை காக்க, சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க, விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க போராடுகிறவர்களை, தேசிய பாதுகாப்புச் சட்டம், தேசத் துரோக குற்றச்சாட்டு, குண்டர் சட்டம் போன்ற கொடிய அடக்குமுறை சட்டங்களில் வழக்குப்பதிவு செய்து, அறவழிப் போராட்டக்காரர்களையும், தமிழக அரசு சிறையில் அடைக்கிறது. அவர்களை பார்க்கச் செல்பவர்களையும் கைது செய்கிறது. இதனால், போராட்டம் வீறு கொண்டு எழும்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டி: நாட்டில், பா.ஜ., அராஜகம் செய்கிறது. அக்கட்சி நிர்வாகிகளே அதை ஆதரிக்கவில்லை. பா.ஜ.,வை வீழ்த்த, காங்., உடன் சேர்ந்து போட்டியிடுவதில் தவறில்லை. எனக்கு, பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் இல்லை. சாதாரண அரசியல்வாதியாக இருந்த நான், பல போராட்டங்களுக்குப் பின், மூத்த அரசியல்வாதியாகி உள்ளேன். ஏழு முறை, எம்.பி.,யாகவும், இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாகவும் இருந்ததுடன், இரண்டு முறை முதல்வராகவும் ஆகி இருக்கிறேன். கொள்கை, சித்தாந்தம் சரியாக இருக்கும் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுவதில் தவறில்லை.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு: மத்தியில், பா.ஜ., ஆட்சி பொறுப்பேற்ற பின், பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. முதலீட்டு நடவடிக்கைகள் முடங்கி விட்டன. நான்கு ஆண்டுகளில், 70 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக, பா.ஜ., அரசு தெரிவிப்பது சுத்தப் பொய். பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்பதே உண்மை.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Muthalil athiyaaman kalviniruvanangalil income tax raids vittaal pala kodi kanakil vaarthaigal panam velivarum

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement