Advertisement

அறிவுப்பசி தீர்க்கும் வில்லிப்பட்டி இளைஞர்கள்

சிவகங்கை: சிவகங்கை அருகே வில்லிப்பட்டியில் கிராம இளைஞர்களே நுாலகம் நடத்தி வருகின்றனர்.
மேலப்பூங்குடி ஊராட்சி வில்லிப்பட்டியை சேர்ந்தவர் ராஜா. கிராம இளைஞர்களுடன் இணைந்து 2012 ல் அக்கிராமத்தில் நுாலகத்தை ஏற்படுத்தினார். அவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுவிட்ட நிலையிலும் மற்ற இளைஞர்கள் நுாலகத்தை நடத்தி வருகின்றனர். ஊராட்சிக்கு சொந்தமான பழைய ரேடியோ அறையில் செயல்படுகிறது. முதற்கட்டமாக நாளிதழ், வார இதழ்களை மட்டும் வாங்கி வந்தனர். 2014 ல் பலரது உதவியோடு புத்தகங்கள் வாங்கப்பட்டன. வில்லிப்பட்டி, அழகம்பட்டியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவர், இளைஞர்கள் வாசகர்களாக உள்ளனர். தற்போது 300 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. கட்டடம் சேதமடைந்ததால் புத்தகங்களை ஒருவரது வீட்டில் வைத்துள்ளனர்.அலைபேசியில் ராஜா கூறுகையில், ''2012 ல் ஆட்டோ டிரைவராக இருந்தேன். 'தினமலர்' விரும்பி படிப்பேன். நாளிதழ்களை அனைவரும் படிப்பதற்காக இளைஞர்களுடன் இணைந்து நுாலகத்தை ஏற்படுத்தினேன். கட்டட வசதி இல்லாததால் விரிவுபடுத்த முடியவில்லை,'' என்றார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (4)

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    லோக்கல் எம்.எல்.ஏ பாஸ்கரன், அதிமுக க்கு தெரிஞ்சா இதை மினி பாராக மாற்றி விடுவார்.

  • சுந்தரம் - Kuwait,குவைத்

    புத்தகங்களை உள்ளே பத்திரமாக வைக்கலாம். படிப்பவர்கள் வசதிக்கு வெளியே குறைந்த செலவில் கொட்டகை அமைக்கலாம். வீணாக கடன் வாங்கி செலவுகளை தவிர்க்கலாம்.

  • Bhaskaran - Chennai,இந்தியா

    அப்பகுதியை சேர்ந்த செல்வந்தர்கள் கட்டிடம் கட்ட உதவலாமே கோவில் கட்டுவதைவிட நூலகம் கட்டுவது எவ்வளவோ ஏற்புடைய காரியம்

  • ருத்ரா -

    தினம் தினம் புதிது புதிதான தகவல்களை படித்துக் கொண்டே இருந்தால் நாமே நம்மை புதிதாக பார்ப்பது போல் தோன்றும்.நூலகம் நமது மனதின் புத்துணர்ச்சி வரவேற்க வேண்டிய விஷயம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement